Search This Blog

April 20, 2009

டாடா நேனோ'வும்,நானும்...

இன்று அலுவலகத்தில் வழக்கமான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது,அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் வந்து,டாடா நேனோ கார் பார்வையாளர்களுக்காக அலுவலக கார் பார்க்கிங்கில் வைத்திருக்கிறார்கள்,பார்க்க செல்லலாமா என கேட்டார்....உடனே கிளம்பிச் சென்றோம்.

ஒரு பெரும்கூட்டம் காரைச்சுற்றி நின்றுக்கொண்டிருந்தது.வெளியிலிருந்து பார்க்கையில் ரொம்பக்குட்டியாய் தெரிந்த கார்,உள்ளே அமர்ந்துப் பார்த்த போதுதான் innovative design and quality of work தெரிந்தது.

உண்மையிலேயே மிகவும் சிறப்பாக வடிவமாக்கப்பட்டுள்ளது காரின் உள்புறமும்,வெளிப்புறமும்.பின்சீட்டில் என்னளவுள்ள மூன்று பேர் தாராளமாக அமரமுடிந்தது.

நான் ஏறக்குறைய ஆறடி உயரம்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால் மாருதி 800,ஆல்டோவில் கால்முட்டி முன்புறமுள்ள டேஷ்போர்டில் இடிக்கும்.அண்மையில் நண்பன் ஒருவனுக்கு கார் வாங்க அலைந்தபோது, மர்ருதி சுசூகியின் 'ஏ ஸ்டார்' ஓட்டிப்பார்த்தேன்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால், கால் முட்டி நன்றாக முன்புறத்தை இடித்தது. சீட்டை மிகவும் பின்னுக்கு தள்ளி அமர்ந்தாலும் முட்டி இடித்தது.கஷ்டப்பட்டுதான் ட்ரைவ் செய்ய முடிந்தது.

அதே எதிர்ப்பார்ப்புடன் நேனோ'வில் டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். எந்தவிதப்பிரச்சனையும் இல்லை.சீட்டும் பின் தள்ளாமல் இருந்தது.ஸ்டியரிங் வீலையும்,கியர்,கிளட்ச்,ஆக்சிலேட்டர் மற்றும் ப்ரேக் ஆகியவற்றை சிறந்த முறையில் கையாள(காலாள???) முடிந்தது.நான் கடந்த ஆறு மாதங்களாக hyundai-i10 ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.என் காரில்,டிரைவிங் சீட்டில் அமர்ந்தால் எந்த அளவுக்கு சவுக்கரியமாக உணர்வேனோ,அதே அளவு சவுக்கரியம் நேனோவிலும் இருந்தது.உண்மையிலேயே, டாடா என்சினியர்கள் சிறந்த தயாரிப்பை அளித்திருக்கிறார்கள். காரின் மற்றப்பகுதிகளும் சிறந்த முறையில் அமைக்கப்பெற்றுள்ளது.

காரின் ரிவர்யூ மிர்ரர்கூட தேர்ந்தமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஸ்டெப்னி டயர்,பெட்ரோல் போடுவதற்கான அமைப்பு ஆகியவை உள்ளது.ஒவ்வொருமுறை பெட்ரோல் போடும்போதும் காரின் முன்புறத்தை திறந்து மூடுவது ஒரு அசவுக்ரியமாக இருக்கும்.

காரின் வெளிப்புறத்தோற்றமும் மிகச்சிறப்பாக,ஒரு 'ரிச்லுக்' தருகிறது.கதவுகள்,சீட்கள் அனைத்தும் மிக மெலியதாக அமைக்கப்பட்டுள்ளது.வண்டி ஏதாவது ஆக்சிடென்ட் ஆனால் அப்பளம்கூட அல்ல,அணுஅணுவாக சிதைந்துவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது.

காரை இன்று ஓட்டிப்பார்க்கமுடியவில்லை,கூட்டம் அதிகமாக இருந்ததால்.நாளையும் காரை பார்வைக்கு வைக்க இருக்கிறார்கள்,அப்போது முயன்று பார்க்கவேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 'டாடா' அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியிருகிறார்கள் என்றே தோன்றுகிறது. குறுகிய தூர,வழக்கமான போக்குவரத்திற்கு ஏற்ற வண்டியாக நேனோ வெற்றிப்பெறும்.

8 comments:

ஷண்முகப்ரியன் said...

அடே முதன் முறையாக ஒரு பாசிடிவ் கருத்து ஒரு இந்தியத் தயாரிப்பைப் பற்றி!காது குளிர்ந்தது.நன்றி நண்பரே!.

யாத்ரீகன் said...

i guess your the first one to review among thamizh bloggers ;-) , it was very good detailed.. thnx for it

நரேஷ் said...

நேனோவின் தொழில்நுட்ப சாதனைகளால் கவரப்பட்டே, அதனுடைய பயணத்தை ஒரு நீண்ட தொடராக வெளியிட்டேன்!!!

இருந்தாலும், நடைமுறையில் இது எந்தளவு வெற்றி பெறும் என்பதில் சில சந்தேகங்கள இருந்தன.

உங்கள் பதிவு, அதில் சிலவற்றை தீர்ட்த்திருக்கிறது!! வாழ்த்துக்கள்!!!

மோகன் said...

//அடே முதன் முறையாக ஒரு பாசிடிவ் கருத்து ஒரு இந்தியத் தயாரிப்பைப் பற்றி!காது குளிர்ந்தது.நன்றி நண்பரே!.///
நம்ப ஆள்ங்க தயாரிக்கறத நாம்பளே பாராட்லனா எப்டி சார்....

Anonymous said...

1) மைலேஜ் 23 என்கிறார்களே அது கரக்டா.. இல்லை உல்லுலுங்காட்டியா...?
2) தொடர்ச்சியாக எத்தனை கிமீ போக முடியும்..? (உ.ம் சென்னை டூ திருப்பதி)
3) மலை ஏறுமா..?
4) மெயிண்டனஸ் எப்படி..?
5) ஏர் கூலிங் என்கிறார்களே.. இரு சக்கர வாகனத்தில் கேள்வி பட்டுள்ளேன்.. காரில் எப்படி..? அதனால் ஒன்றும்...????
6) ஒண்ணு வாங்கிடலாமா...?
7) நான்ஏசி நான்மெட்டாலிக் சீப்பாக இருக்கே.. தைரியமா வாங்கலாமா...?

மோகன் said...

///i guess your the first one to review among thamizh bloggers ;-) , it was very good detailed.. thnx for it///

நன்றி யாத்ரீகன்..தமிழ்மணத்தில் யாரும் நேனோ'வைப் பற்றி எழுதாஇல்லையா இதுவரை????

மோகன் said...

///i guess your the first one to review among thamizh bloggers ;-) , it was very good detailed.. thnx for it///

நன்றி யாத்ரீகன்..தமிழ்மணத்தில் யாரும் நேனோ'வைப் பற்றி எழுதாஇல்லையா இதுவரை????

மோகன் said...

///இருந்தாலும், நடைமுறையில் இது எந்தளவு வெற்றி பெறும் என்பதில் சில சந்தேகங்கள இருந்தன.

உங்கள் பதிவு, அதில் சிலவற்றை தீர்ட்த்திருக்கிறது!! வாழ்த்துக்கள்!!!///
நன்றி நரேஷ்..