Search This Blog

April 14, 2009

3 முட்டாள்கள் கடைசி பெஞ்சில்....

அது ஆண்களுக்கான ஆஸ்டல்.முதல்வருடம் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்கள் அவர்களின் சீனியர்களின் முன்பாக 'பிறந்தநாள் உடையில்' நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு சீனியர் காலி கோக் பாட்டில்களை எடுத்து வருகிறான்..எதற்காக?

இவ்வாறு ஆரம்பிக்கும் கதை ,அந்த மூன்று நண்பர்களுக்கிடையே அரும்பும் நட்பு,பிரச்சனைகள்,கடினமான IIT வகுப்புகள், பழமையை போதிக்கும் புரபசர்கள்,விடுமுறை கொண்டாட்டங்கள், கண்டவுடன் காதல், நண்பர்களுக்கிடையேயான மோதல், குடும்பத்துக் குடைச்சல்கள்,நண்பர்களின் உதவிகள்,உபத்திரங்கள், தேர்வுகள்,தோல்விகள், தற்கொலை முயற்சிகள், சஸ்பென்சன்,காதல் தோல்வி என பலதரப்பட்ட பாதைகளில் பயணித்து சில ஆண்டுகள் அந்த மூன்று நண்பர்கள் கழித்த கல்லூரி வாழ்க்கையின் பரிமாணங்களைக் காட்டி வழக்கமான சுபமுடிவுடன் முடிகிறது.


நான் மழைக்குக்கூட IIT பக்கம் ஒதுங்கியது இல்லை.இஞ்சினியரிங் படிப்பையே ரொம்பக் கஷ்டப்படாமல் 4 வருடத்தில் எந்த அரியரும் வைக்காமல்(நம்புங்கப்பா.....நிஜமாத்தான்...) பாஸ் செய்துவிட்டு புத்தகங்களை தூக்கிப்போட்டதோடு சரி... இந்தக்கதையின் நாயகர்கள் என்னைப்போல ஒழுங்காக படிக்காமல்( டேய்...இதெல்லாம் ரொம்ப ஓவரு....) முதலாமாண்டிலிருந்தே குறைவான மதிப்பெண்கள் பெற்று GPA'வில் 5 க்கும் 6க்கும் நடுவில் அல்லாடுகிறார்கள். அவர்களின் நிலைக்கு IIT'யும் அதன் கடினமான பாடமுறைகளும்,புரபசர்களும் காரணம் என்ற கற்பிதத்தோடு, கல்லூரி வாழ்க்கையின் மற்ற சுகங்களை அனுபவிக்கலாம் என திசைமாறி போகிறார்கள்.


நாவலில் IIT வாழ்க்கையின் மறுபக்கங்கள் சிறப்பாக திறந்து காண்பிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் தனித்தன்மைக்கும், செயல்திறனுக்கும் வேலைக் கொடுக்காத கல்விஅமைப்பு,எதற்கும் உதவாத GPA சார்ந்த ரேட்டிங், மாணவர்களின் நலனில் அக்கறைக்கொள்ளாத புரபசர்கள் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது.


கடைசிக்கட்டத்தில் GPA'வை உயர்த்த(இன்னொரு காரணம், ஹரி டாவடிக்கும் நேகா, இம்மூவரின் head of dept செரியனின் பெண், செரியனிடம் நல்ல பெயர் வாங்க,அவர் எடுக்கும் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற ஒரு வழி,கேள்வித்தாளை செரியனின் அறையிலிருந்து ஜூட் விடுதல்) கேள்வித்தாள்களை திருட மூன்று நண்பர்கள் போடும் திட்டமும், அதில் ஏற்பட்ட சொதப்பலால் மூவரும் மாட்டிக்கொண்டு ஒரு செமஸ்டர் சஸ்பெண்ட் ஆகிறார்கள்.


கடைசியாக அவர்கள் கொடுக்கும் project proposal வீரா என்ற புரபசரின் பரிந்துரையால் ஏற்க்கப்பட்டு அதை வெற்றிகரமாக முடித்து (சினிமாவாக எடுத்தால் இந்த நிகழ்வுகளை ஒரே பாடலில் முடித்துவிடலாம்,படையப்பா 'வெற்றிக்கொடி கட்டு' பாடல் பாணியில்) கேம்பஸில் வேலையும் வாங்கி எப்படியோ வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள்.


சேதன் பகத்தின் நாவல்கள் ஒரு மசாலா திரைப்படத்திற்கேயுரிய அனைத்து flavour'களையும் கொண்டுள்ளது.முதல் பக்கத்தை படிக்க ஆரம்பித்தால் முழு புத்தகத்தையும் முடிக்காமல் கீழே வைக்க முடிவதில்லை. ஒரு சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு படித்து முடித்து விட்டேன்...நோ காபி,நோ லஞ்ச்,நோ ப்ரேக்...


இந்த நாவலும் இந்தியில் அமீர்கான்,மாதவன் கரீனா கபூர் நடிப்பில் தயாரிப்பில் உள்ளது.திரைக்கதையை நன்றாக கையாண்டால் ஒரு நல்ல படம் கிடைக்கும். சமீபத்திய 'ஆனந்த தாண்டவம்'- சுஜாதாவின் பிரிவோம்,சந்திப்போம் நாவலை ஒட்டி எ(கெ)டுத்த படம்போல் சொதப்பாமல் இருந்தால் சரிதான்.


சேதன்பகத்தின் லேட்டஸ்ட் நாவலான 'Three mistakes of my life' அண்மையில் வாங்கிவிட்டேன்.படிக்கதான் இன்னும் நேரம் கிடைக்கவில்லை.கடந்த வாரயிருதியில் சாருநிவேதிதாவின் 'ராஸ லீலா' என் இரண்டு நாட்களையும் சாப்பிட்டுவிட்டது.

5 comments:

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி நண்பரே..

தேவன் மாயம் said...

இவ்வாறு ஆரம்பிக்கும் கதை ,அந்த மூன்று நண்பர்களுக்கிடையே அரும்பும் நட்பு,பிரச்சனைகள்,கடினமான IIT வகுப்புகள், பழமையை போதிக்கும் புரபசர்கள்,விடுமுறை கொண்டாட்டங்கள், கண்டவுடன் காதல், நண்பர்களுக்கிடையேயான மோதல், குடும்பத்துக் குடைச்சல்கள்,நண்பர்களின் உதவிகள்,உபத்திரங்கள், தேர்வுகள்,தோல்விகள், தற்கொலை முயற்சிகள், சஸ்பென்சன்,காதல் தோல்வி என பலதரப்பட்ட பாதைகளில் பயணித்து சில ஆண்டுகள் அந்த மூன்று நண்பர்கள் கழித்த கல்லூரி வாழ்க்கையின் பரிமாணங்களைக் காட்டி வழக்கமான சுபமுடிவுடன் முடிகிறது.///

கல்லூரி நினைவுகள் பசுமையானவை!!

siva said...

good review mohan..it makes me to buy a book and read...sure will do it during the weekend,,,

Vijay said...

இந்த ஞாயிற்றுக் கிழமை தான் Three Mistakes of my life படித்து முடித்தேன். நான் முதலில் விமர்சனம் போட்டுடட்டுமா?? :-)))

மோகன் said...

///இந்த ஞாயிற்றுக் கிழமை தான் Three Mistakes of my life படித்து முடித்தேன். நான் முதலில் விமர்சனம் போட்டுடட்டுமா?? :-)))///
ஆஹா...விஜய்... 5 points someone' review எழுதற்துக்கு முன்னால உங்க ப்ளாக் வந்து பார்த்துட்டு,அப்புறமாதான் ரிவியூ எழுதினேன்...ஏற்கனவே நான் கடவுள்,one night@ call center'ku நான் ரிவியூ எழுதும்போதே நீங்களும் எழுதியிருந்தீங்க.... இப்போ 3mistakes of my life'கு போட்டியா...