Search This Blog

March 27, 2006

காற்று(வெளி)வழிக்களவு...

பெண்மணி ஒருவருக்கு அவருடைய 'ஆத்துக்காரரிடம்' இருந்து ஒரு SMS வந்தது. 'டார்லிங்,வழக்கம்போல பேங்க் அக்கவுண்ட் ATM பின்னை மறந்துவிட்டேன்,PIN# SMS செய்'னு வந்தது.ஆத்துக்கார அம்மாவும் நல்லப்பிள்ளையாக SMS பன்னிட்டாங்க....

சாயங்காலம்,நம்ம ஆளு நொந்து நூடுல்ஸ்'ஆக வந்து நுழையும்முன் 'ஒரு பின்நம்பரைக் கூட நியாபகம் வச்சிக்கரதிலையா? எனக்கேட்க.....
அவரோ,'நானே பர்ஸ்,மொபைல் எல்லாம் எவனோ 'பிக்பாக்கெட்' அடிசிட்டானேனு நொந்துபோயிருக்கேன்,,,இப்போ பின்நம்பர் ரோம்ப முக்கியம்' என....

புத்திசாலி(?????)யான பிக்பாக்கேட் பேர்வழி, பர்சிலிருந்த ATM Card பார்த்த உடன் , மொபைலில் இருந்த 'பிக்பாக்கெட்' கொடுத்தவரின் மனைவிக்கு மேற்க்கண்ட SMS அனுப்பி அக்கவுண்டிலிருந்த பணத்தையும் லவட்டிட்டு போய்ட்டு இருக்கான்.

இது அண்மையில் உண்மையாகவே நடந்த சம்பவம்.
ஆகவே மகாஜனங்களே, முக்கியமான விஷ்யங்களை, கணவரே(மனைவியே) ஆனாலும் காற்றுவழியே அனுப்பாதீர்கள்......

March 24, 2006

மீண்டும் பேங்களூர் வாசம்....

கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேங்களூர் வாசம்.கடந்த ஒரு வாரமாக 'எலெக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் அலுவலகத்திற்கு பைக்கில் வந்துகொண்டிருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து கிளம்பும்முன் இங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டபோது 'அங்கேயே வேறு ஏதாவது புராஜெக்ட் சேர்ந்துவிடு,ஒசூர் ரோடு ட்ராப்பிக்'ல் மாட்டிக்கொள்ளாதே' என பயமுறுத்தியிருந்தார்கள்.போதாதகுறைக்கு சில இ-மெயில் ஜோக்குகளும் ஒசூர் ரோடு ட்ராப்பிக் பற்றி பார்த்து மிரண்டு போய்யிருந்தேன்.
முதல்நாள் அலுவலகம் கிளம்பும்முன் இந்தவிஷயங்கள் மனதில் ஓட வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.ஆனால் நான் எதிர்ப்பார்த்த அளவிற்கு நெரிசலின்றி 35 நிமிடத்தில் அலுவலகம் வந்துவிட்டேன்.மடிவாளா,பொம்மனாள்ளி போன்ற இடங்களில் நெருக்கடி அதிகமிருந்தது. போதாதகுறைக்கு மடிவாளா முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரை பாலம் அமைப்பதற்க்கான ஆரம்பவேலைகளை ஆரம்பித்துள்ளனர்.வரும் காலங்கள் மிககடினமாக இருக்கும் என்பது நிதர்சனம்.பைக் என்பதால் கிடைக்கும் இடைவெளியில வந்துவிட முடிகிறது.காரோ மற்ற வாகனமோ என்றால் ரோம்ப கஷ்டம்பா....கார் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தை ஒசூர் ரோட்டில் தூக்கிப்போட்டு விட்டேன். ;)))

இதுதவிர மிகப்பெரிய மாற்றமாக என் கண்ணில் அறைந்தது 'பெண்கள்'.
அலுவலகத்தில் நுழைந்தால் எங்கும்,எங்கெஙும் பெண்கள்..பெண்கள்..மேலும்(நம்ம மேலே இல்லப்பா......) பெண்கள். விதவிதமான,வண்ணவண்ண,அனைத்துவகையான ஆடைகளூடன் வலம்வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் 'புரட்சி' என்ற பெயரில்
உடைகளில் ஏகப்பட்ட 'வறட்சி',
காட்சியாகிறது அழகின் 'திரட்சி'.
அதைக்கண்ட எனக்கோ 'மிரட்சி........

இதுதான் தோன்றியது எனக்கு.பொருளாதார தாராயமயமாக்கல் நம் வாழ்க்கைமுறையை மிகவும் மாற்றியிருக்கிறது.முதல்நாளில்தான் இந்த காட்சிகள் மாற்றமாக தெரிந்தது.இப்போது பழகிவிட்டது.