Search This Blog

December 28, 2006

உயிர்மை

"கண்ணுக்கு மை அழகு...
கவிதைக்கு பொய் அழகு"...

பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

'நீ என்னை கவிஞனாக்கிய கவிதை' என்றான் !
'நான் என்ன 'பொய்யா'?? ... அவள் சிணுங்கினாள்...

நீ பொய்யல்ல பெண்ணே! 'உயிர்மை' நீ...
உயிரும் நீ...மெய்யும் நீ...
என் உயிரின் மையமும் நீ !!!

September 20, 2006

நிஜமான உண்மை...

ஆயிரம் அழகான முகங்களைவிட அழகானது...
ஆயிரம் பொற்காசுகளுக்கு ஈடானது...உன் இதயம்!!!

நீ சொல்வது நிஜமா ? என்றாள்.

பழக ஆரம்பித்த அந்த ஆரம்பநாட்களிலேயெ
உன்னுடன் ஐக்கியமாகிவிட்ட அவன் இதயத்தைக் கேட்டுப்பார்...
அது சொல்லும்...
அவன் சொன்னது,நிஜமான உண்மை'யென......

July 10, 2006

குளிச்சா குற்றாலம்....

கடந்த மாத இறுதியில் கல்லூரி நண்பனின் திருமணத்தில் கலந்துக்கொள்வதற்காக பெங்களுரிலிருந்து நண்பர்களுடன் சங்கரன்கோவிலுக்கு 'தூத்துக்குடி எக்ஸ்பிரஸில்' புறப்பட்டோம். இரவு 915க்கு மைசூரிலிருந்து வந்து சேரவேண்டிய வண்டி,1030க்குதான் வந்து பிறகு கிளம்பியது.பரிசோதகர் வந்துபோனபின்பு உறங்கலாமென 1 மணி நேரம் காத்திருந்தோம்.யாரும் வருவதாக தெரியவில்லை. காலையில் வண்டி 'கொடை ரோடை' நெருங்கும்போது விழித்தெழுந்தோம்.வண்டி மதுரையில் நுழையும்போது 'ப்ளாட்பாரத்தில்' மீனாட்சி பவன் சிற்றுண்டிசாலை' கண்ணில் பட்டது.
அங்கு 'இட்லி,பொங்கல்,பூரி,காபி' என எல்லாவற்றையும் 'பார்சலில்' வாங்கிக்கொண்டோம்.உணவு வகைகள் அனைத்தும் அருமையாக இருந்தது. 'காபி'யின் சுவை, பேஷ்...,பெஷ்.....ரொம்ம்ம்ம்ப நன்னாயிருக்கு' என எங்கள் அனைவரையும் சொல்லவைத்தது.

ஒருவழியாக காலை 1030 வாக்கில் கோவில்பட்டியை அடைந்தோம்.அங்கிருந்து சங்கரன்கோவிலுக்கு 1 மணி நெர பேருந்துப்பயணம். வழி மிகவும் மோசமாக இருந்தது.சுற்றுப்பிரதேசமும் வறண்டு களையிழந்து காணப்பட்டது.
மதிய உணவை நண்பனின் வீட்டில் முடித்துக்கொண்டு ஒரு 'சுமோ'வில் 'குற்றாலம்' நோக்கிப்புறப்பட்டோம். 50 நிமிடப்பயணம்.
வழி முழுவதும் பெரிய பெரிய காற்றாலைகளை அமைத்து 'மின்சாரம்' தயாரிகிறார்கள்.'குற்றாலம்' நெருங்க நெருங்க காற்றின் வேகமும் அதிகமாகிறது.சுற்றுப்பிரதேசமும் மிகவும் பசுமையாக,கண்களுக்கு இதமாக இருக்கிறது. ஒரு 40 கிமி இடைவெளியில் வறண்ட மற்றும் வளமையான பிரதேசங்கள்.

முதலில் 'ஐந்தருவி'க்கு சென்றோம்.அப்போதுதான் சாரல் மழை விட்டிறுந்தது.மக்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது எங்களுக்கு நிறைவாக இருந்தது. அருவில் தண்ணீரும் மிதமான வேகத்தில் கொட்டிக்கொண்டிருந்தது. 'ஐந்தருவி'யில் இரண்டு பகுதிகள் பெண்கள் பகுதியிலும், இரண்டு பகுதிகள் ஆண்கள் பக்கமும் விழுந்துக்கொண்டிருந்தது. இன்னோரு பகுதி அன்று தண்ணீர் குறைவாக இருந்ததால் காணவில்லை.

அங்கிருந்து 'மெயின்' அருவிக்கு சென்றோம்.இங்கு தண்ணீர் மிகவும் அதிகமாக இருந்தது.நாங்கள் சென்ற நெரத்தில் 'சாரல்' மழையும் பொழிய ஆரம்பித்தது. ஒரே சமயத்தில் மலையிலிருந்து விழும் மலைஅருவியிலும்,வானத்திலிருந்து விழும் மழைஅருவியிலும் ஆனந்தமாக குளித்தோம்.அருவியின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. உடம்புக்கு நல்ல 'மசாஜ்'ஜாக சரியான அடி விழுந்தது. 'குளிச்சா குற்றாலம்....' என எழுதியவர் அந்த அனுபவத்தை உணர்ந்துதான் எழுதியிருக்கவேண்டும்.ஒரு நிஜமான 'குளியல்' அனுபவம் வேண்டுமெனில் ஒரு நடை குற்றாலம் சென்று குளியல் போட்டுவிட்டு வாருங்கள்.

March 27, 2006

காற்று(வெளி)வழிக்களவு...

பெண்மணி ஒருவருக்கு அவருடைய 'ஆத்துக்காரரிடம்' இருந்து ஒரு SMS வந்தது. 'டார்லிங்,வழக்கம்போல பேங்க் அக்கவுண்ட் ATM பின்னை மறந்துவிட்டேன்,PIN# SMS செய்'னு வந்தது.ஆத்துக்கார அம்மாவும் நல்லப்பிள்ளையாக SMS பன்னிட்டாங்க....

சாயங்காலம்,நம்ம ஆளு நொந்து நூடுல்ஸ்'ஆக வந்து நுழையும்முன் 'ஒரு பின்நம்பரைக் கூட நியாபகம் வச்சிக்கரதிலையா? எனக்கேட்க.....
அவரோ,'நானே பர்ஸ்,மொபைல் எல்லாம் எவனோ 'பிக்பாக்கெட்' அடிசிட்டானேனு நொந்துபோயிருக்கேன்,,,இப்போ பின்நம்பர் ரோம்ப முக்கியம்' என....

புத்திசாலி(?????)யான பிக்பாக்கேட் பேர்வழி, பர்சிலிருந்த ATM Card பார்த்த உடன் , மொபைலில் இருந்த 'பிக்பாக்கெட்' கொடுத்தவரின் மனைவிக்கு மேற்க்கண்ட SMS அனுப்பி அக்கவுண்டிலிருந்த பணத்தையும் லவட்டிட்டு போய்ட்டு இருக்கான்.

இது அண்மையில் உண்மையாகவே நடந்த சம்பவம்.
ஆகவே மகாஜனங்களே, முக்கியமான விஷ்யங்களை, கணவரே(மனைவியே) ஆனாலும் காற்றுவழியே அனுப்பாதீர்கள்......

March 24, 2006

மீண்டும் பேங்களூர் வாசம்....

கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேங்களூர் வாசம்.கடந்த ஒரு வாரமாக 'எலெக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் அலுவலகத்திற்கு பைக்கில் வந்துகொண்டிருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து கிளம்பும்முன் இங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டபோது 'அங்கேயே வேறு ஏதாவது புராஜெக்ட் சேர்ந்துவிடு,ஒசூர் ரோடு ட்ராப்பிக்'ல் மாட்டிக்கொள்ளாதே' என பயமுறுத்தியிருந்தார்கள்.போதாதகுறைக்கு சில இ-மெயில் ஜோக்குகளும் ஒசூர் ரோடு ட்ராப்பிக் பற்றி பார்த்து மிரண்டு போய்யிருந்தேன்.
முதல்நாள் அலுவலகம் கிளம்பும்முன் இந்தவிஷயங்கள் மனதில் ஓட வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.ஆனால் நான் எதிர்ப்பார்த்த அளவிற்கு நெரிசலின்றி 35 நிமிடத்தில் அலுவலகம் வந்துவிட்டேன்.மடிவாளா,பொம்மனாள்ளி போன்ற இடங்களில் நெருக்கடி அதிகமிருந்தது. போதாதகுறைக்கு மடிவாளா முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரை பாலம் அமைப்பதற்க்கான ஆரம்பவேலைகளை ஆரம்பித்துள்ளனர்.வரும் காலங்கள் மிககடினமாக இருக்கும் என்பது நிதர்சனம்.பைக் என்பதால் கிடைக்கும் இடைவெளியில வந்துவிட முடிகிறது.காரோ மற்ற வாகனமோ என்றால் ரோம்ப கஷ்டம்பா....கார் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தை ஒசூர் ரோட்டில் தூக்கிப்போட்டு விட்டேன். ;)))

இதுதவிர மிகப்பெரிய மாற்றமாக என் கண்ணில் அறைந்தது 'பெண்கள்'.
அலுவலகத்தில் நுழைந்தால் எங்கும்,எங்கெஙும் பெண்கள்..பெண்கள்..மேலும்(நம்ம மேலே இல்லப்பா......) பெண்கள். விதவிதமான,வண்ணவண்ண,அனைத்துவகையான ஆடைகளூடன் வலம்வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் 'புரட்சி' என்ற பெயரில்
உடைகளில் ஏகப்பட்ட 'வறட்சி',
காட்சியாகிறது அழகின் 'திரட்சி'.
அதைக்கண்ட எனக்கோ 'மிரட்சி........

இதுதான் தோன்றியது எனக்கு.பொருளாதார தாராயமயமாக்கல் நம் வாழ்க்கைமுறையை மிகவும் மாற்றியிருக்கிறது.முதல்நாளில்தான் இந்த காட்சிகள் மாற்றமாக தெரிந்தது.இப்போது பழகிவிட்டது.

February 1, 2006

வீடு வாங்கலீயோ...வீடு.....1BHK,2 wheeler parking

கீழே உள்ள படங்களைப் பார்த்து முடிவு செய்யுங்கள்.இந்தியாவில்,குறிப்பாக பெங்களூரில் இவ்வகையான வீடுகள் பயன் தரும்.

வரவேற்பறை,படுக்கையறை.Reading roomசமையல் அறை.2 wheller Parkingஅருமையான location