Search This Blog

July 21, 2008

தசாவதாரம்...ரஜினி ரசிகனின் பார்வையிலிருந்து...

ஏற்கனவே பதிவுலகத்தில் உள்ள பெரும்பாலோர் அடித்து துவைத்து காயப்போட்டுவிட்ட தலைப்புதான்.இரண்டு மூன்று வாரங்களாகவே,வாரயிறுதியில் பார்க்கவேண்டும் என திட்டமிட்டு ஏதேதோ காரணங்களால் படம் பார்க்கமுடியவில்லை. மேலும் பதிவுலகம்,பத்திரிகைகள், தொலைகாட்சி விமர்சனங்கள்,நண்பர்களின் கருத்துகள் என எல்லா திசைகளிலிருந்தும் படத்தின் அனைத்து நிறைகுறைகளையும் காட்சிவாரியாக தெரிந்துவிட்டதால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை.

சனியன்று நண்பர்களின் குடும்பத்துடன் மாலை 4 மணிக்காட்சிக்கு PVR'ல் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துவிட்டு 340'க்கு சென்று தானியங்கி இயந்திரத்தில் கடனட்டையை சொருகினால் அது வேலை செய்யவில்லை.இரண்டு மூன்று இடங்களில் அலைந்து அங்குள்ள பணியாளர்கள் உதவியுடன் டிக்கெட் பெற்று அரங்குக்குள் செல்லும்போது 410 மணி.12 ம் நூற்றாண்டு காலத்து பாடல்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. விமர்சனம் செய்திருந்த அனைவரும் முதல் 10 நிமிடங்கள்தான் ஹைலைட் என சொல்லியிருந்தும் அக்காட்சிகளை பார்க்கமுடியாமல் போனது.ஆனால் பின்வந்தக் காட்சிகள் அக்கவலையை மறக்கச் செய்து,படத்துடன் ஒன்றிவிட்டேன்.இடைவேளைவரை துரத்தல்கள்,இரண்டுப்பாடல்கள்,சில கொலைகள், நாயுடுவின் டைமிங் காமெடிகள் என மூச்சுவிட நேரமின்றி பரபரப்பாக எவ்வித தொய்வுமின்றி படம் ஓடியது.

விமர்சித்திருந்த சிலர்,மல்லிகா ஷெராவத் பாத்திரம் சில காட்சிகளே வருவதாக கூறியிருந்தார்கள்.ஆகவே அவர் கெட்ட ஆட்டம் போட்ட பாடல் முடிந்தவுடன் அவரைக்காலி பண்ணி விடுவார்கள் என நினைததால்,அவர்தான் அவருடன் கெட்ட ஆட்டத்தை தொடர முயன்றவரை காலி பண்ணிவிட்டு சென்னை வழியாக சிதம்பரம் வந்து யானையால் காலியாகிவிடுகிறார்.கமல் படத்தில் இந்த அளவுக்கு அவருக்கு காட்சிகள் அமைந்ததே பெரிய விஷயம்தான்.

என்னைப்பொருத்தவரை கமல் போட்ட அனைத்து வேடங்களும் தேவையானவைதான்.எதுவும் வீண் இல்லை.எடுத்துக்கொண்ட கதைக்களம் 'கியாஸ்(கேயாஸ்??) தியரி'க்கு ஒவ்வொருப் பாத்திரமும் எடுத்துக்கொண்ட முடிவை(சுனாமி 26,2004) நோக்கி சரியான பாதையில் நகர்த்த உதவியிருக்கிறது. கதையை இன்னும் ரசனையுள்ளதாக்க தேவையிருந்திருந்தால் இன்னும் இரண்டு மூன்று வேடங்கள்[கோயில் யானை, இறந்துபோகும் குரங்கு வேடங்களை சொல்லவில்லை ;))))] கூட கமல் போட்டிருக்கலாம்.

இரண்டாம் பாதியில், முதல் 30-45 நிமிடங்கள் படம் கொஞ்சம் தொய்கிறது. கமலும்,அசினும் பேசிக்கொள்ளும் வசனங்கள்,என்னடா,திடீரென 'கிரேசி மோகன்' வசனகர்த்தா கமலின் பேனாவை பிடுங்கி எழுதியிருப்பாரோயென யோசிக்க வைத்தது. மறுபடியும் வில்லன் முழுவேகத்தில் காரியத்தில் இறங்கியவுடன் பிடிக்கும் வேகம்,சிறு புயலாகி பின் பெருத்த சூறாவளியென மாறி,சுனாமியாக பேயாட்டம் போட்டு அந்த சிலையை வெளிக்கொணர்ந்து வில்லனையும்,உயிரியையும் அழித்து கமல் அசின் 12ம் நூற்றாண்டுக் காதலின் அடுத்த அத்தியாயத்தை 21ம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைத்து தென்றலாய் முடிகிறது.

நான் ஒரு முழு ரஜினி ரசிகன். ஆரம்பக்காலத்தில் அடிமட்ட ரசிகனுக்கு இருக்கும்(இருந்த) கமல் துவேஷம் எனக்கும் இருந்தது.ஆனால் காலம் மாறி தமிழ் படவுலகைவிட்டு வந்து சில சிறந்த பிற மொழிப்படங்கள், அமெரிக்காவில் இருந்த 2-3 வருடங்களில் பார்த்த பல ஆங்கிலப்படங்கள், என் திரை ரசனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.ஆரம்பக்காலத்தில் குறைகளை கண்டறியவேண்டும் என்ற துவேஷத்துடன் பார்த்த பல கமல் படங்களை ஒரு சாதாரண திரைப்பட ரசிகன் என்ற பார்வையில் பார்த்தபோது,கமலஹாசன் எனும் கலைஞனின் கலைதாகமும்,அடுத்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற முயற்சியும்,அவரின் நடிப்பின் பல பரிமாணங்களும் தெரிந்தது. அவ்வகையில் 'தசாவதாரம்' நிச்சயமாக கமலின் மிக முக்கியமான ஒரு படைப்பு. குறை சொல்வதற்கான காரணங்கள் படத்தில் பல இருந்தாலும், ஒரு நல்ல படத்தை கொடுத்தக் காசுக்கு வஞ்சனையின்றி ஒய்வுப்பொழுதில் பார்த்து ரசிப்பதற்க்கு ஏற்றப்படம்தான்.
ஆகவே,விட்டக்காட்சிகளையும்,பரப்பரப்பான துரத்தல்களையும் மீண்டும் ஒருமுறை பார்க்க அடுத்தவாரக்காட்சிக்கு இப்போதே துண்டு போடவேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.

11 comments:

Unknown said...

arumayana karuthu. nanum etai than eluthavendum endru erunthen nikal eluthivitirgal.

Indian said...

//ஆரம்பக்காலத்தில் அடிமட்ட ரசிகனுக்கு இருக்கும்(இருந்த) கமல் துவேஷம் எனக்கும் இருந்தது.ஆனால் காலம் மாறி தமிழ் படவுலகைவிட்டு வந்து சில சிறந்த பிற மொழிப்படங்கள், அமெரிக்காவில் இருந்த 2-3 வருடங்களில் பார்த்த பல ஆங்கிலப்படங்கள், என் திரை ரசனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.ஆரம்பக்காலத்தில் குறைகளை கண்டறியவேண்டும் என்ற துவேஷத்துடன் பார்த்த பல கமல் படங்களை ஒரு சாதாரண திரைப்பட ரசிகன் என்ற பார்வையில் பார்த்தபோது,கமலஹாசன் எனும் கலைஞனின் கலைதாகமும்,அடுத்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற முயற்சியும்,அவரின் நடிப்பின் பல பரிமாணங்களும் தெரிந்தது.//

Well said!

I wish most of the die-hard fans of both camps transform/mature like you.

முரளிகண்ணன் said...

nice, thankyou

Anonymous said...

What is the use of Japan Kamal in the movie??

To scream "Tsuami" when it comes, because he is the only one who know how to call it at that time... :-)

புருனோ Bruno said...

//Well said!

I wish most of the die-hard fans of both camps transform/mature like you.//

மறுமொழிகிறேன்

மோகன் said...

வருகைக்கு நன்றி sharevivek,indian,murali and bruno

மருதநாயகம் said...

//ஆகவே,விட்டக்காட்சிகளையும்,பரப்பரப்பான துரத்தல்களையும் மீண்டும் ஒருமுறை பார்க்க அடுத்தவாரக்காட்சிக்கு இப்போதே துண்டு போடவேண்டுமென முடிவு செய்துவிட்டேன்//

நல்ல விமர்சனம் மீண்டும் போய் பாருங்கள் நண்பரே

மோகன் said...

\\\\What is the use of Japan Kamal in the movie??

To scream "Tsuami" when it comes, because he is the only one who know how to call it at that time... :-)

\\\\\\\\\
மேக்கப் குறைபாடு அதிகமின்றி இருந்த வேடங்களில், ஜப்பானிஸ் கமல் வேடம் ஒன்று.கடைசிக்கட்ட சண்டைக்காட்சிக்கு அந்த வேடம் உதவியுள்ளது.சண்டைக்காட்சியும் சிறந்த முறையில் படமாக்கியிருந்தார்கள்.
குறைகள் என கணக்கெடுக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவேயில்லை(சாரு நிவேதிதா விமர்சனத்தை படிக்கவும்).
எனக்கு,நான் செலவழித்த பணத்துக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்காக ஒரு 3 மணி நேரம் செலவானது.அவ்வளவுதான்.
இதுபோன்ற திரைப்படங்களை அனுபவித்து ரசிக்கவேண்டும்,ரொம்ம ஆராயக்கூடாது ;)))

மோகன் said...

\\நல்ல விமர்சனம் மீண்டும் போய் பாருங்கள் நண்பரே////
கண்டிப்பாக மருதநாயகம். பார்க்காமல் விட்ட ஆரம்பக்காட்சிகளையும்,இசை,செட்டிங்ஸ்,கேமரா,பிண்ணனி இசை ஆகியவற்றை ரசிக்கவேண்டும்.

Vijay said...

நான் இரண்டாவது தடவை படம் பார்த்தபோது முதல் தடவை பாக்க கேட்க மறந்த நிறைய வசங்களைக் கேட்க முடிந்தது. அசினையும் ரசிக்க முடிந்தது. மூன்றாம் முறை பார்த்து எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவையைப் பார்த்து ரசிக்க வேண்டும்

அன்புடன்,
விஜய்

Anonymous said...

Nice comments buddy.