Search This Blog

July 9, 2008

BSNL-நம்பினால் நம்புங்கள்...

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதுவரை தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்து 6 கிமீ தொலைவில் வெறொரு வீட்டிற்க்கு குடிபெயர்ந்தேன். வீட்டில் இருந்த BSNL landline,broadband இணைப்பை புது வீட்டிற்க்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BSNL அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே கொடுத்திருந்தேன். மே மாதம்வரை எந்த சத்தமும் காணோம். customer service'ஐ அழைத்து சொன்ன உடன், புதிதாக குடியேறியுள்ள பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தை அணுக சொல்லி,நம்பரையும் கொடுத்தார்கள்.
மே மாத முதல் இரண்டு வாரங்களில் தினமும் அவர்களை அழைத்து, என் BSNL இணைப்பு புது வீட்டிற்க்கு எப்போது கிடைக்குமென கேட்டுக்கொண்டிருந்தேன். எவ்விதமான பாசிடிவ் பதிலும் இல்லை. சனிக்கிழமைகளில் அவ்வலுவலகத்திற்கே நேரடியாகப் படையெடுக்க ஆரம்பித்தேன். ஒருவழியாக எங்கள் தெருவுக்கு பொறுப்பான லைன்மேனை சந்தித்து எப்ப்போது போன் லைன் கொடுக்கப்போகிறீர்கள் எனக்கேட்டதற்க்கு, உங்கள் வீட்டிற்க்கு 2 முறை வந்தேன்.வீட்டில் யாருமில்லை என விட்டேத்தியாக பதில் வந்தது( என்னுடடைய தாயார் 24*7 வீட்டில்தான் இருப்பார்கள்). வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு, மறுபடி எப்போது வருவீர்கள் என்றதற்க்கு,அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள் வருவதாக வரம் தந்தார்.
அந்தவாரம் முழுவதும் போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்ததில் மனமிரங்கி(???) வெள்ளிக்கிழமை இணைப்பு வந்துவிட்டது.வெலையை முடித்துவிட்டு மொய் பணம் கேட்டுள்ளார்,என் தாயார் ரூ 100 கொடுத்தற்க்கு,இவ்வளவுதானா? என நக்கலாக கேட்டுவிட்டு சென்றிருக்கிறார். ஒருவழியாக மே கடைசி வாரத்தில் இணைப்புக்கிடைத்து விட்டது.
நான் வீட்டிற்க்கு வந்து 'Broadband' இணைப்பை சோதித்தால் அது வேலை செய்யவில்லை. மறுபடியும் போன் வழியே படையெடுப்பு.ஒன்றும் நடக்கவில்லை. ஏர்டெல்'க்கு மாறிவிடலாமா என தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் அலுவலகத்தின் Intranet-forum'ல் ஒரு BSNL e-mail முகவரியை பார்த்தேன்.அந்த முகவரிக்கு புகார் அனுப்பினால் மாயம் நிகழும் என போட்டிருந்தார்கள். சரி முயன்றுதான் பார்க்கலாமே என முழுக்கதையையும் எழுதி அனுப்பினேன்.
இரண்டு நாட்களாக எந்த சத்தத்தையும் காணோம். 3ம் நாள் ஒரு இ-மெயில் வந்தது. "உங்கள் புகார்,பங்களூர் அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உங்களை தொடர்ப்பு கொள்வார்கள்" என்றிருந்தது. அட்லீஸ்ட் ஒரு பதிலாவது வந்ததேயென வீட்டிற்க்குப் போனால்,அதுநாள்வரை வெலை செய்துக்கொண்டிருந்த போன் 'கோமா' நிலைக்குப்போயிருந்தது.

உள்ளதும் போச்சடா...என்ற எரிச்சலுடன் மறுநாள் படுகாரமாக இன்னோரு இ-மெயிலை தட்டிவிட்டேன். அன்று மதியம் பங்களூர் BSNL அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ஒரு மொபைல் எண்ணைக்கொடுத்து பேசசொன்னார்கள். முக்கியமான வேலையில் நான் மூழ்கியிருந்தால் அவர்களை தொடர்புக்கொள்ளவில்லை. மறுபடியும் வேறொருவர் BSNL'லிருந்து அழைத்து,மிகவும் மரியாதையுடன் என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, நீங்கள் எப்பொது வீட்டிற்க்கு வருவீர்களென கேட்டார்கள். சரி என்னதான் நடக்கிறது பார்க்கலாமென,அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வருவதாக சொன்னேன். பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினேன். வீட்டை அடைவதற்குள்,3-4 மிஸ்டு கால். வீட்டை அடைந்து அந்த எண்ணுக்கு கூப்பிட்டு நான் வீட்டிலிருப்பதாக கூறினேன். அடுத்த 5 நிமிடத்தில், 3 BSNL ஊழியர்கள் வந்து, 10 நிமிடத்தில் போன், broadband இணைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.அந்த 3 பேரில், முன்பு வந்த லைன்மேனும் இருந்தார், ஒரு வார்த்தைக்கூட பேசாமல்,இணைப்பைக் கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக வெலை செய்கிறதா என என்னிடம் ஒருமுறைக்கு இருமுறை சரிப்பார்க்க சொல்லி, மிக மரியாதையுடன் 'நன்றி' சொல்லிவிட்டு (பணம் எதும் கேட்க்காமல்) கிளம்பிச்சென்றார்கள்.

எனக்கு சில நிமிடங்கள் நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா,இல்லை நடந்ததுயெல்லாம் ஏதாவது பகல்கனவா? என தெரியவில்லை. அடுத்த 2 நாட்கள் அவர்கள் போன் செய்து எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா எனவேறு விசாரித்தார்கள்.
இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்னவென்றால்,நான் புகார் அனுப்பிய இ-மெயில் முகவரி, டெல்லியில் உள்ள BSNL உயரதிகாரியின் ID. அவர் அங்கிருந்து பெங்களூர் அதிகாரிக்கு அனுப்பி follow-up செய்ததால்தான் மேற்கண்ட மாயாஜாலங்கள் நடந்தன.
ஒரு 10 நிமிட வேலைக்கு,கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் நேரம் செலவிட்டு இருக்கிறேன். கடைசியாக மேலிடத்தில் புகார் செய்ததால் எல்லாம் விரைவில் முடிந்தது,இல்லையென்றால் இன்னும் எந்தனை வாரங்கள்,மாதங்கள் ஆகியிருக்குமோ?
பின்குறிப்பு : இத்தகவலை,என் நண்பர்களிடமும் சொல்லி,அவர்களும் புகார்களை இ-மெயில் தட்டிவிட்டதில், பெரும்பாலானவர்களின் BSNL பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன.

13 comments:

Anonymous said...

In a similar situation, I sent a mail to the DGM, BSNL, Bangalore Telecom district and the mail bounced :(

ஜோசப் பால்ராஜ் said...

என்ன சார் இது? ஒரு நல்ல பதிவை முடிக்காமல் விட்டுவிட்டீர்களே?
நீங்கள் அடைந்த பலனை, நாங்களும் அடைய அந்த மின்னஞ்சல் முகவ்ரியை எங்களுக்கும் தரக்கூடாதா?

எனது கதை மிக சோகமானது. நானும் என் அண்ணண் ஒருவரும் சிங்கப்பூரில் இருக்கின்றோம், இன்னும் ஒரு அண்ணண் அமெரிக்காவில் இருக்கின்றார். எங்கள் கிராமத்தில் இருக்கும் எங்கள் பெற்றோருடன் நாங்கள் தொடர்புகொள்ள ஒரே வழி தொலைபேசிதான். ஆனால் எங்கள் வீட்டு தொலைபேசி மாதத்திற்கு 10 நாட்கள் மட்டுமே வேலை செய்யும்.அது வேலை செய்யும் நேரம் யாருக்கும் தெரியாது. இதனால் நாங்கள் எங்கள் பெற்றோருடன் ஒழுங்காக பேச முடியாத நிலை. எங்கள் பெற்றோர் எப்போது எங்களிடம் இருந்து அழைப்பு வரும் என்று ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை.
நாங்களும் தஞ்சை மாவட்ட தலைமை அலுவலகம்வரை புகார் கொடுத்து அலுத்து போய்விட்டோம். எங்கள் கிராமத்தில் அலைபேசி தொடர்பும் இல்லாததால் அந்த வசதியும் எங்களால் செய்துதரமுடியவில்லை.
எனவே நீங்கள் அந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் நாங்களும் அதை உபயோகித்து பலனடைய உதவும்.

மோகன் said...

பிரச்சனை இன்னும் தீரவில்லையெனில் சொல்லுங்கள்,இ-மெயில் முகவரியை அனுப்பிவைக்கிறேன்...

ஜோசப் பால்ராஜ் said...

இதுவரை நிரந்தர தீர்வில்லை.
நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்போம், கிடைக்கும் போது பேசுவோம்.

மோகன் said...

ஜொசப்
கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.
cmdbsnl@bsnl.co.in

all the best

Aruna said...

After the whole story I expected that special email Id?
but .....
anbudan aruna

சுரேகா.. said...

சரியா செஞ்சிருக்கீங்க!

சூப்பர்!

ஆனா இந்த விழிப்புணர்வு எல்லாருக்கும் இருந்தாத்தான்
நல்லது. பாவம் அவர் மெயில் பாக்ஸ் ரொம்பி வழியும்.

மெயில் முகவரி கொடுதததற்கு நன்றி!

ஜோசப் பால்ராஜ் said...

நன்றி நண்பரே. இனியாவது எங்கள் பிரச்சனை தீர்கிறதா என பார்க்கின்றேன்.

மோகன் said...

அருணா,
மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்.ஒரே கவலை என்னவென்றால்,சுரேகா சொல்லியிருப்பதைப்போல அந்த மெயில்பாக்ஸ் நிரம்பி வழிந்தால்,அநேகமாக அந்த அதிகாரி வேறொரு மெயில் ஐடி'க்கு மாறிவிடுவார்???

மருதநாயகம் said...

அந்த பொறுப்பான அதிகாரிக்கு நன்றி நவிழும் ஈமெயில் அனுப்பிவிட்டீர்களா

rapp said...

ரொம்ப உபயோகமான பதிவு, தகவலுக்கு நன்றி

மோகன் said...

//அந்த பொறுப்பான அதிகாரிக்கு நன்றி நவிழும் ஈமெயில் அனுப்பிவிட்டீர்களா//

அன்றைக்கே நன்றி தெரிவித்து மின்னஞ்சல் செய்துவிட்டேன்...

Anonymous said...

For a similar issue, I sent a mail to the DGM, Bangalore circle. The mail bounced back.

The BSNL idiots have customer centers and engineering offices. They will never publish the address of the engineering offices in their website. However, to surrender a phone, one have to go to the engineering office and return the phone in the "stores".

Now to know this procedure, I have to go to their commerical office.

The personify the classical "red tape" of a typical government organization.

No wonder, public flock the private players.