Search This Blog

February 12, 2009

நட்பு

முதல் அறிமுகத்திலேயே
மின்னலாய் துளிர்விட்ட
நட்'பூ'...
பூத்து,காய்த்து,
கனிக்கொடுத்து
சுகமான சுமையாய்,
காலமெல்லாம்
களித்திருக்கச் செய்யும்
என்ற நம்பிக்கை ஊற்று,
பு(தை)கைய ஆரம்பித்து
விட்டதற்கு
என்ன காரணம் ?

அளவுக்குமீறிய
எதிர்பார்ப்பா?
காரணமேயில்லாதக்
கோபங்களா?
பிறர் ப(ழி)றித்துவிடுவார்களோ
என்ற பரிதவிப்பா?

நட்பு என்பது
வானவில் அல்ல !
தோன்றி,
களித்து,
கரைந்துபோவதற்கு...

வாழும்வரை
உயிர்மூச்சாக...
பாலைவனப்பாதையில்
தென்றலாக...
எதிர்ப்பவர்களுக்கு
புயலாக...
நட்பு என்பது
காற்றைப்போல !

நம் நட்பு...
வானவில்லா?
தென்றல் காற்றா?

நீயே முடிவு செய்!!!

6 comments:

Anonymous said...

Nice work... Keep it coming :)

Anonymous said...

Nice one...

Anonymous said...

Good one...
-Ashwini

Anonymous said...

Good one...
-Ashwini

ஆதவா said...


நட்பு என்பது
வானவில் அல்ல !
தோன்றி,
களித்து,
கரைந்துபோவதற்கு...


காதலினும் மேன்மை கொண்டது நட்பு.. நட்பு என்பது நிமிட நேரத்து வானவில் அல்லதான்... அது விரிந்து கொண்டிர்க்கும் பிரபஞ்சம்....

நல்ல கவிதைங்க... ஆனால் நீளம் அதிகம்.

Unknown said...

really a very gud one.
- viji