Search This Blog

August 21, 2008

நீயா...நானா? - ஜாதிகள் இல்லையடி பாப்பா...ஆனால் ???

கடந்தவார விஜய் டிவி நீயாநானா நிகழ்ச்சியில் அலுவலகத்தில் ஜுனியர் சீனியர்களுக்கிடையேயான உறவு பற்றி சுடச்சுட விவாதித்தார்கள். அப்போது கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி,இனம்/ஜாதி அடிப்படையில் சீனியர்கள் அவர்களின் இனத்தை சார்ந்தவர்களை சப்போர்ட் செய்கிறார்களா?

இக்கேள்விக்கு பதில் அளித்தோர் அம்மாதிரியான பாகுபடுத்தும் பாங்கு பெரும்பாலான துறைகளில் இருப்பதாக தெரிவித்தார்கள்.அந்த கேள்வி எனக்குள்ளும் எழுத்தது. நான் கடந்த பல வருடங்களாக 'பொட்டி' தட்டிக்கொண்டிருக்கும் IT துறையில் இந்தக்கேள்விக்கான பதில் என்ன?

என் அனுபவத்தில், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மிகமிகக் குறைவாகவேதான் இருக்கிறது.அதற்கு முழுமுதற்காரணம்,இங்கு யாருக்கும் கூடவேலை செய்பவர் என்ன ஜாதி என்று அறிந்துக்கொள்ளவேண்டிய அவசியம் சிறிதும் இல்லை.வேலை செய்யும் சூழலிலும் அதை வெளிப்படுத்துவதற்கான எவ்வித முகாந்திரமும் சிறிதளவும் இல்லை.IT துறையில் உள்ளோர் பெருமளவில் இளையவயதினராக இருப்பதும்,அவர்களின் திறமையையும், செயல்படும் திறனையும் கொண்டே அவர்களின் வளர்ச்சி(பெரும்பாலும்) நிர்ணயிக்கப்படுவதால் ஜாதி என்ற ஒரு கேள்வி எங்கும் எழுவதில்லை.

ஒருவர் என்ன இனம் என்று வெளியுலகத்திற்க்கு வெளிப்படுத்துவதில் அவர்கள் அணியும் உடையும்,உணவுப்பழக்கவழக்கங்களுக்கும் ஒருபங்கு இருக்கிறது.ஆனால் உடை விசயத்தில், எல்லோரும் நன்றாக சம்பாதிப்பதால் மாடர்ன் உடைகள்,மற்றும் அலுவலகங்களில் ட்ரெஸ் கோட் இருப்பதால் அதற்கேற்றார்போல் உடுத்துவதால்,உடைகள்மூலம் யாரும் வேறுபடுத்தப்படுவதில்லை.
உணவு விஷயத்திலும்,அலுவலகத்தில் அனைத்துவகை உணவுகளும் கிடைப்பதாலும், சைவம், அசைவம் சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதால்,அவ்விதத்திலும் ஒருவர் சார்ந்துள்ள இனம் வெளிப்படுத்தப்படுவதில்லை.

இவைகள் எல்லாவற்றையும்விட, இன/ஜாதி அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கு இங்கு ஆப்பு என்பதால் ஒருவர் என்ன இனம் என்ற கேள்வி அவர்கள் இத்துறையில் காலடி எடுத்து வைக்கும்போதே அவர்கள் காலடியிலேயே மிதிப்பட்டு போகிறது.

ஆகவே பாரதி,காந்தி மற்றும் பல தலைவர்கள் கனவுக்கண்ட ஜாதியற்ற சமுதாயம், எல்லோரும் ஓரினம், லஞ்சலாவணியமற்ற துறை ஒன்று உருவாகிவிட்டதா??? அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என ஆனந்தமாக பாடுவதற்கான நிலைமையை அடைந்துவிட்டோமா? வேறு எவ்விதத்திலும் IT துறையில் பாகுபாடுகள் இல்லாமல் 'திறமைக்கு மட்டுமே முதலிடம்,வேறு எந்த தடைக்கற்களுமே இல்லை' என ஆணித்தரமாக அடித்துக்கூறும் நிலையில் இருக்கிறோமா???

(IT துறையில் உள்ள சில இருண்டப்பக்கங்களைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்...)

20 comments:

HS said...

மோகன்,
நல்ல பதிவுகள், வாழ்த்துக்கள்!
இந்த kelvi.net புதிய இணையத்தில் உங்கள் ஆக்கங்களை பகிரமுடியுமா? அதன் வளர்சிக்கு உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றேன்
அன்புடன்
ஹரி

Anonymous said...

அடப்பாவி மக்கா !!!

ஆந்திரா பாலிட்டிக்ஸ், நார்த் இண்டியன் பாலிடிக்ஸ், தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்னு எத்தனை இனம் வாரியான பாலிட்டிக்ஸ் ஐ.டில இருக்கு ?

நீங்கள் பல வருடங்களாக "டெவலப்பராவே" காலம் தள்றீங்கன்னு நினைக்கிறேன்...!!!

:))))))))))

மோகன் said...

வருகைக்கு நன்றி ஹரி....

மோகன் said...

கருத்துக்கு நன்றி செந்தழல் ரவி...
///
ஆந்திரா பாலிட்டிக்ஸ், நார்த் இண்டியன் பாலிடிக்ஸ், தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்னு எத்தனை இனம் வாரியான பாலிட்டிக்ஸ் ஐ.டில இருக்கு ?
///
பதிவு முடியவில்லை ரவி...இருண்ட பக்கங்கள் தொடரும்'னு போட்டிருக்கேன்...நீங்க சொல்ற எல்லா பாலிடிக்ஸ் பத்தியும் சொல்லப்போறேன்....

டெவலப்பர் லெவெலெல்லாம் தாண்டி பலவருடங்களாச்சி.....இப்போ ஒரு பெரிய படையை மேய்க்கிற வேலை....;))

Anonymous said...

டேமேஜரா ? அப்போ எப்படி "ரெட்டிகாரு" பாலிட்டிக்ஸ் எல்லாம் இல்லைன்னு சொல்றீங்க ?

கம்பெனி சிறுசா ? பெருசா ?

manikandan said...

****அனைத்துவகை உணவுகளும் கிடைப்பதாலும், சைவம், அசைவம் சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதால்****

இல்லை மோகன். இது இன்னும் தனிப்பட்ட விருப்பமாக மட்டும் மாற சில பல வருடங்கள் தேவை.

மோகன் said...

///
டேமேஜரா ? அப்போ எப்படி "ரெட்டிகாரு" பாலிட்டிக்ஸ் எல்லாம் இல்லைன்னு சொல்றீங்க ?

கம்பெனி சிறுசா ? பெருசா ?
///
ரவி,அடுத்த பதிவில் எல்லா பாலிடிக்ஸ்'ம் எழுதப்போகிறேன்....வெய்ட் பண்ணுங்க....

'டேமேஜர்'தான்,ஆனா இதுவரைக்கும் யாரையும் டேமேஜ் பண்ணதில்ல....நான் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்...;)))
கம்பேனி..மகாப்பெரிய கம்பெனி....அதனாலதான் எல்லா வகைப்பாலிடிக்ஸ்'ம் இருக்கு...அதனால அடிப்பட்டவர்களில் நானும் ஒருவன்...அதைப்பத்தியெல்லாம் விவரமாக எழுதலாமென இருக்கிறேன்....

மோகன் said...

///
இல்லை மோகன். இது இன்னும் தனிப்பட்ட விருப்பமாக மட்டும்.. மாற சில பல வருடங்கள் தேவை.///
வருகைக்கு நன்றி 'அவனும் அவளும்'.. நான் பார்த்தவரை,அலுவலகத்தில் அவர்கள் விருப்பபடிதான் ரொம்பபேர் சாப்பிடுகிறார்கள்...ஆனால் அவர்கள் வீட்டிற்குப்போனால்தான் அவர்களின் முகமுடி தெரிகிறது.

சுப்பு said...

கலக்கிட்ட மச்சி...

Subbu said...

I guess major private organizations (Tata/Birla/Bajaj/Mahindra) have been equal opportunity employers... IT in the recent past appears to be more prominent becos of

1. Large no.s of recruitment (Demand/Supply curve)
2. Current Boom trend
3. Globalization of the economies

otherwise they pretty much follow the generic (including political) mgmt approach towards recruitment and growth.

Vijay said...

மோகன்,
நல்ல கருத்துக்களை சொல்லிருக்கீங்க. ஆனால் ஐ.டி துறையிலே இது இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு எனது முந்தைய கம்பெனியிலுள்ள மானேஜர் ஒரு மாநிலத்தைச் சார்ந்தவர். அவர் புதிதாக இன்னொரு டீம் தொடங்கும் போது பெஉம் பாலும் அவரது மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே சேர்த்துக்கொண்டார். கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதற்கு என்ன சொல்ல? இது தற்செயலாக நடந்த ஒன்று என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

கயல்விழி said...

மோகன்

நல்ல கட்டுரை!

நான் இதுவரை இந்தியாவில் வேலை செய்ததில்லை, இங்கே அனைவரும் சமம் தான், நோ பாலிடிக்ஸ், நோ இருண்ட பக்கம்.


இந்தியாவில் ஐடி துறையைப்பற்றி அறிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

மோகன் said...

//
மோகன்,
நல்ல கருத்துக்களை சொல்லிருக்கீங்க. ஆனால் ஐ.டி துறையிலே இது இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது///
கருத்துக்கு நன்றி விஜய்...முதல்பகுதியில் ஜாதி வித்யாசம் பார்க்கப்படுகிறதா என்பதை பற்றிதான் அலசியிருந்தேன்...அடுத்த பதிவுகளில்,நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை பற்றி எழுதப்போகிறேன்....

மோகன் said...

///
நான் இதுவரை இந்தியாவில் வேலை செய்ததில்லை, இங்கே அனைவரும் சமம் தான், நோ பாலிடிக்ஸ், நோ இருண்ட பக்கம்.
///
கயல்,நான் அமெரிக்க கம்பெனிகளில் நம் நாட்டினர் செய்யும் அட்டகாசங்களைப் பற்றியும் எழுதப்போகிறேன்...அதைப்படிததப்பிறகு உங்கள் கருத்துகள் மாறும்...

Anonymous said...

//அமெரிக்க கம்பெனிகளில் நம் நாட்டினர் செய்யும் அட்டகாசங்களைப் பற்றியும//

politics/ hidden agenda is not a sole property of indians... i have seen and affected by american's hidden agenda/ "or so called Equal Opp" too! only diff is you can easily find out among indians.

btw i work in IT too.

--Pandian

கயல்விழி said...

அமரிக்க கம்பனிகளில் நம்ம ஆட்கள் அட்டகாசம்? நான் 3 வருடங்களாக வேலை செய்கிறேன், அப்படி ஏதும் பார்த்ததில்லை(ஒரு வேளை நான் கவனிக்கவில்லையோ?)

Anonymous said...

//ஆனால் அவர்கள் வீட்டிற்குப்போனால்தான் அவர்களின் முகமுடி தெரிகிறது//

வீட்டிற்குள் எனக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய எனக்கு உரிமை உள்ளது. அதே போல் அந்த உரிமை உனக்கும் முழுமையாக தருவேன் என்பதைத் தான் முகமூடி என்கிறீர்களா?

மோகன் said...

//அமரிக்க கம்பனிகளில் நம்ம ஆட்கள் அட்டகாசம்? நான் 3 வருடங்களாக வேலை செய்கிறேன், அப்படி ஏதும் பார்த்ததில்லை(ஒரு வேளை நான் கவனிக்கவில்லையோ?)//
கயல்,
என் 3 வருட அமெரிக்கவாழ்க்கையில் பல அட்டகாசங்களைப்பார்த்திருக்கிறேன். அதைப்பற்றி விரிவாக எழதலாமென இருக்கிறேன்...கொஞ்சம் பொறுங்கள்...;))

மோகன் said...

//வீட்டிற்குள் எனக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய எனக்கு உரிமை உள்ளது. அதே போல் அந்த உரிமை உனக்கும் முழுமையாக தருவேன் என்பதைத் தான் முகமூடி என்கிறீர்களா?///
அனானி,நான் சொல்லவந்தது என்னவென்றால்,சிலரின் உணவுப்பழக்கம் வீட்டில் ஒருமாதிரியும்,வெளியிடங்களில் வேறுப்பட்டும் இருக்கிறது என்பதே...உதாரணமாக, வீட்டில் சுத்த சைவமாக இருப்பவர்கள்,வெளியிலே அசைவமும் சாப்பிடுவார்கள்....

Anonymous said...

I don't agree with you mohan.

In my company, I can clearly see that there's a major prejudice. If there's a brahmin DM in a project, 80% of his project managers also happen to be brahmins.

They seem to be flaunting their identity by talking in agraharathu baashai every now and then. casteism does exist in many IT countries. It may not be so visible like other organizations but it still does exist!