Search This Blog

August 26, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 4

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
என் 9 வருட IT வாழ்க்கையில் ஏறத்தாழ 5 வருடங்கள் மலையாளதேச டெமெஜர்களுடன் கழித்துள்ளேன். குழுமனப்பான்மைக்கு இவர்களை விட்டால் ஆளில்லை.எல்லாவற்றிலும் அவர்கள் இனத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமைக்கொடுப்பார்கள். கஷ்டப்பட்டு ஜாவா,சி,சி++ மொழிகள் கற்றுக்கொள்வதற்கு பதில் 30 நாட்களில் மலையாளம் கற்றுக் கொண்டால் நம்முடைய கேரியர் புரோக்ரஷன் வேகமாக இருக்கும் என நண்பர்களுடன் சீரியசாக பலமுறை விவாத்திருக்கிறோம்.

இவர்கள் விஷயம் எப்படியென்றால்,ஏதாவதொரு முக்கியப்பொறுப்பில் ஒரு மலையாளி இருக்கிறார் என்றால்,அவருக்கு கீழேயுள்ள அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும்,குறைந்தது 80% மல்லுக்'களையே பார்க்கலாம்.அதற்குப்பிறகு அவர்கள் ராஜ்ஜியம்தான்.

நான் முன்பிருந்த க்ரூப்'பின் வைஸ் ப்ரசிடென்ட் ஒரு மல்லு.அவருக்கு டைரக்ட் ரிபோர்டீஸ்(group head,delivery head,solution head,program mgr etc)எல்லோருமே மல்லுஸ்தான்.ஒரே தமிழரும்,பெங்காலியும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அவருக்கு கீழ் பணிப்புரிந்தார்கள்.அந்த க்ரூப்பில் வரும் progression, stock options,qurterly best performer awards எல்லாமே அவர்கள் மக்களுக்கு மட்டும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.

ஒருமுறை நண்பன் ஒருவர், ஒரு கேண்டிடெடை முதல்சுற்று இண்டர்வியூ செய்துவிட்டு அவருடைய மல்லு பாஸிடம் சென்று,அந்த கேண்டிடேட் பிலோ ஆவெரேஜ்'தான், நிராகரித்துவிடலாம் என சொல்லியிருக்கிறார், resume'யை வாங்கிப்பார்த்த அந்த மல்லு டேமேஜர் அவன் மல்லுவென தெரிந்துக்கொண்டு,'கேரளாவிலிருந்து வந்து இருக்கிறான், கண்டிப்பாக நன்றாக வேலை செய்வான்' எனச்சொல்லி அவனை தேர்வுசெய்யச் சொல்லி விட்டார். நண்பன் ஆடிப்போய்விட்டான்.

ஒரு டீம் மீட்டிங் எனப்போனால்,அங்கே பெரும்பாலும் மலையாளத்தில்தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அதேப்போல் லன்ச்'க்கு போகும்போதும் அவர்கள் குழுவோடுதான் செல்வார்கள். தவறியும் வேறுயாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

வேலை விஷயத்தில் தெலுங்குதேச மக்களைவிட நன்றாக செயல் படுவார்கள்.ஆங்கிலம் பிரச்சனையாக இருக்காது,என்ன பிரச்சனையென்றால், எல்லாவற்றிலும் 'ஓ' சேர்த்து விடுவார்கள்.ஒரு மல்லுப்பொண்ணு ஒரு டீமி'ல் இருக்கிறது என்றால்,அனைத்து இள(ன)ங்காளைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அவள் வேலையை முடித்துக்கொடுத்துவிடுவார்கள்.

நான் கடந்த வருடம் ஒரு ப்ராஜக்டில் டேமேஜராக இருந்தப்போது, எல்லாக்கடினமான வேலையையும் ஒரு மல்லுப்பெண்ணிற்கு கொடுத்து விடுவேன்.வேலை சுலபமாக முடிந்துவிடும்.சிலசமயம் மாலை 5 மணிக்குமேல் வேலையைக்கொடுத்து(குறைந்தபட்சம் 3 மணி நேரமாகும் முடிப்பதற்க்கு) அன்றே முடிக்கச்சொல்லிவிட்டு 6மணிக்கு நான் கிளம்பிவிடுவேன்.அப்பெண்ணும் 6மணிக்கு கிளம்பிவிடும்.ஆனால் அடுத்த நாள் காலையிலே அந்தவேலை முடிந்துவிட்டிருக்கும்.யார் அந்தவேலையை முடித்தார்கள் என்பது,அந்தப்பெண் 'லன்ச்'க்கு யாருடன் அன்று செல்கிறாள் எனப்பார்த்தால் விளங்கிவிடும். சில சமயங்களில் இந்த லாஜிக் அழகான வட இந்தியப்பெண்களுக்கும் பொருந்தும்.

அடுத்தப் பதிவில்(என்னுடைய வெற்றிக்கரமான 50வது பதிவு) 'தங்கத் தமிழனின்' சேவை/லீலைகளைப் பற்றி எழுதுகிறேன்...
(தொடரும்...)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

18 comments:

சி தயாளன் said...

சத்தியமான உண்மை...நானும் பல இடங்களில் அவதானித்திருக்கிறேன்..!

Anonymous said...

சூப்பரான டிப்ஸ்!! நன்றிங்ண்ணா.
வட இந்திய பெண் மேட்டர் ரொம்பவும் உண்மை :)

வெட்டிப்பயல் said...

அட்டகாசமா எழுதிட்டு இருக்கீங்க... அடுத்த பகுதிக்கு ஆவலுடன்...

யாத்ரீகன் said...

wow.. what an idea towards the end :-) ..

குடுகுடுப்பை said...

நானும் யாருக்காவது உதவி செய்யனும்தான் ஆசைப்ப்டுறேன். கொடுப்பினை இல்லயே.

MSATHIA said...

பயங்கர உண்மைகள் அப்பிடினெல்லாம் சொல்ல மாட்டேன். தெலுங்கு மற்றும் வட இந்திய மக்கள், தமிழர்களையும் மலையாளிகளையும் விட அப்பாவிகள்தான். மலையாளிகளின் குழு மனப்பான்மை உலகறிந்தது.
கேரளாவுக்கு அனுப்பும் நேர்முகத்தேர்வுக்குழு(மலையாளிகளாக இருக்கும் 99%) 100 பேருக்கு 80 ஆட்களை எடுப்பார்கள் தமிழ்நாட்டுக்கு(தமிழாட்களையே அனுப்பினாலும்)போகும் குழு 100க்கு 20 பேரை எடுப்பார்கள். இந்த மாதிரி சங்கதிகளில் நம்ம ஆட்கள் பெரிய நேர்மையாளர்களாக நடந்து கொள்வார்கள். தங்கத்தமிழர்களின் அட்டகாசங்களும் கொஞ்ச நஞ்சமல்ல ;-))

Anonymous said...

எக்ஸலண்ட் ப்ளோ !!! சூப்பர்...

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் !!!

மோகன் said...

//சத்தியமான உண்மை...நானும் பல இடங்களில் அவதானித்திருக்கிறேன்..!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 'டொன்'லீ'(அப்படின்னா???)

மோகன் said...

//சூப்பரான டிப்ஸ்!! நன்றிங்ண்ணா.
வட இந்திய பெண் மேட்டர் ரொம்பவும் உண்மை :)///
PM சார்...டிப்ஸ்'ஐ யூஸ் பண்ணிட்டு சொல்லுங்க...

மோகன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 'வெட்டிப்பயல்','யாத்ரீகன்','குடுகுடுப்பை' அண்ட் sathia..

மோகன் said...

/எக்ஸலண்ட் ப்ளோ !!! சூப்பர்...
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் !!!///
இன்னைக்கு எழுதலாமென இருக்கிறேன் ரவி...

Voice on Wings said...

ஒரு மாநிலத்திலிருந்து வரும் எல்லாருடைய நடத்தையும் குணமும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்ற அடிப்படை அனுமானத்தின் பேரில் எழுதப்படும் இந்தத் தொடரைக் குறித்து எதுவும் கூறத் தோன்றவில்லை. Prejudice என்பார்கள் ஆங்கிலத்தில். அது முழுவதுமாகத் தலை விரித்தாடுகிறது இப்பதிவுகளில். (இனவாதம் / சாதீயம் போன்றவற்றுக்கு சற்றும் குறைந்ததல்ல, இப்பதிவுகளில் தென்படும் stereotyping).

"My job went to India;52 ways to save your job" என்ற புத்தகத்தின் முன்னுரையை இங்கே காணலாம். தங்கள் வேலையைப் பறிக்கப் போகிறார்கள் என்ற புரிதலில் எழுதப்பட்டிருந்தும் கூட, நம்மைப் பற்றி எழுதிய தொனியில் ஒரு மரியாதை / மதிப்பு கலந்து எழுதியிருந்தது என்னைக் கவர்ந்தது. எதிர் தரப்பினராயிருந்தாலும் மதிக்கும் போக்கு அதில் தெரிகிறது. இந்தப் பதிவுகளிலோ உடன் வேலை செய்பவர்களையும் (அவர்கள் வங்காளிகள், மலையாளிகள் என்று காரணம் கூறி) தாழ்த்தும் போக்கு தெரிகிறது. ஒரு ஒப்பீட்டுக்காக இதைக் குறிப்பிடுகிறேன்.

மோகன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி voice of wings.இப்பதிவுகள் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் இப்படி மட்டும்தான் இருப்பார்கள் என்ற குறுகிய நோக்கில் பொத்தாம்பொதுவாக எழுதவில்லை.என்னுடைய பலவருட IT துறை அனுபவத்தில் நான் சந்தித்த பலத்தரப்பட்ட மக்களைப்பற்றிய விவரங்களை அவர்கள் மாநிலத்தை சார்ந்து எழுதியிருக்கிறேன்.இதுவரை அவர்களின் ஒருப்பக்கத்தைப்பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.அதனால்தான் குறைகளைப்பற்றி மட்டும் எழுதியிருப்பதைப்போல் தெரிகிறது.இத்தொடர் முழுமையடைந்த உடன் உங்கள் கருத்து மாறலாம்...

Voice on Wings said...

உங்களுடைய 'நீண்ட கால' IT துறை அனுபவத்தைப் பாராட்டுகிறேன். அதற்கு இரு மடங்குகள் அதிகமுள்ள எனது IT துறை அனுபவத்தை நீங்களும் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இந்தியா முழுவதும் பல நகரங்களில் பணி செய்திருக்கிறேன். நீங்கள் குறிப்ப்பிட்ட மற்றும் குறிப்பிடாத மாநிலத்தவர்களுடனெல்லாம் வேலை செய்திருக்கிறேன்.

எல்லா மனிதர்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், மோசமானவர்களும் இருக்கிறார்கள். ஒரு பெற்றோருக்குப் பிறந்த சகோதரர்கள் மத்தியிலுமே அளவிலா வேற்றுமைகள் இருப்பதைப் பார்க்கிறோம். அப்படியிருக்க, ஒரு பிரஷ்ஷை எடுத்துக் கொண்டு எல்லாருக்கும் ஒரே வண்ணம் பூசும் உங்கள் செயலைப் பற்றியே எனது விமர்சனம். இதே ரீதியில் சிந்தித்தால், பெண்களைப் பற்றிய பொதுமைப்படுத்தல், சிற்பான்மையினரைப் பற்றிய பொதுமைப்படுத்தல், இன்னும் என்னவெல்லாமோ வகையான பொதுமைப்படுத்தல்களை நியாயப்படுத்திக் கொண்டே போகலாம். எல்லோரும் ஓரே வகையில் (அதாவது உங்களைப் போலவே) சிந்திப்பவர்களாக இருக்க மாட்டார்கள். வேறுபாடுகள் இருக்கும், மற்றும் இருக்க வேண்டியது அவசியமும் கூட. Diversity in workplace என்பது வலியுறுத்தப்படுவது இதனால்தான். ஒரு வகையிலேயே சிந்தித்துப் பழக்கப்பட்டுப் போன நமக்கு வேற்றுப் பார்வைகள் கிடைக்க உதவுவது இத்தகைய diverse பணிச்சூழல்தான். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், பாதகமாக எண்ணுவதைப் பற்றியே எனது விமர்சனம்.

உங்களுக்கோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களுக்கோ ஒரு MNC / பெரிய IT நிறுவனத்தில் வேலை செய்ய எவ்வளவு தகுதி உள்ளதோ அதே அளவு தகுதி ஒரு வேற்று மாநிலத்தவனுக்கோ வேற்று நாட்டவனுக்கோ உண்டு என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் தொடரைத் தொடருங்கள். ஆனால் அவை இதே ரீதியில் தொடருமானால் அவற்றைக் குறித்த எனது கருத்துகள் மாறாமலேயே போக வாய்ப்புள்ளது.

Prabakar said...

That’s true .. i am in UAE , most the local Arabs are now speaking Malayalam hehehe,
Its not joke its true and , if u r mallu u can work anywhere , here where ever u goes there will be mallu .. I will tell u one real story that happens here , there was one mallu work in kings office as second grade officer , he showed all his mallu technique and he reached to the position as adviser to king , days went and some 3 months before he was caught by king for getting bribe and what king did is he shot him @ the spot itself , y I am saying this is see the loyalty of mallu …

Here in all the company the accountant will be mallu , do u know who can control them only Egyptians none of the mullu technique will work with Egyptians hehehe

Siva said...

அவரவர் தங்கள் தாய் மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிப்பது தங்களது வேர்களை பாதுகாத்து கொள்ள உதவும். அதன் மூலம் மாறிவரும் புதிய கலாசார பரிணாம வளர்ச்சிக்கு செம்மையான அவரவர் பங்கினை வழங்க முடியும். ஆனால் இதுவே குறுகிய இன உணர்வாக மாறி தமக்கு தாமே போட்டுக்கொண்ட வேலியாக இருக்கக்கூடாது . மேலும் பிற மொழி காலாச்சார பண்புகளை உள்வாங்காமல் ஒரு வித மேலாதிக்க மனோபாவத்தை தரக்கூடாது. தமது தாய் மொழி உறவுகளை மதிக்கும் அதே வேலை பரந்த மனப்பான்மையுடன் அனைத்து மொழி நண்பர்களையும் நடுவு நிலை தவறாமல் பார்க்கும் அன்பர்களையும் அடையாளம் கண்டு கூறுவீர்கள் என்று நம்புகிறேன். எனினும் , உங்கள் பதிவின் மூலம் பலவித பின்புலத்தில் இருந்து வரும் மக்களின் இயல்புகளை புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் பதிவுக்கு நன்றி. மேலும் நல்ல பதிவுகளை கொடுக்க வாழ்த்துக்கள்.

சிவா

மோகன் said...

//பரந்த மனப்பான்மையுடன் அனைத்து மொழி நண்பர்களையும் நடுவு நிலை தவறாமல் பார்க்கும் அன்பர்களையும் அடையாளம் கண்டு கூறுவீர்கள் என்று நம்புகிறேன். எனினும் , உங்கள் பதிவின் மூலம் பலவித பின்புலத்தில் இருந்து வரும் மக்களின் இயல்புகளை புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் பதிவுக்கு நன்றி. மேலும் நல்ல பதிவுகளை கொடுக்க வாழ்த்துக்கள்.///
கண்டிப்பாக சிவா...என்னுடைய நோக்கம் குறைகளை மட்டும் சொல்வதல்ல...நிறைகளைப் பற்றியும் எழுதப்போகிறேன் வரும் அத்தியாயங்களில்...

மோகன் said...

//That’s true .. i am in UAE , most the local Arabs are now speaking Malayalam hehehe,
Its not joke its true and , if u r mallu u can work anywhere , here where ever u goes there will be ///
கருத்துகளுக்கு நன்றி பிரபாகர்...