Search This Blog

July 6, 2005

ராஜாவின் திருவாசகம்...

ஊரெல்லாம் ஒரே பேச்சு.யாருடன் தொலைபேசினாலும் 'திருவாசகத்தை' கேட்டீங்களா? என விசாரிப்புகள். ஒரு 'வெப் சைட்டில்' MP3 format'ல் இருப்பதாக ஒரு நண்பன் மூலம் அறிந்து அதை இறக்கி ஒருதடவை ஓடவிட்டேன்.ஆனால் இவ்வாறு செய்ய மனம் குறுகுறுத்தது. மாலையில் 'எடிசனில்' உள்ள வீடியோ கடைக்கு சென்று 15$ கொடுத்து ஒரு CD'யை வாங்கினேன். அந்த கடைக்காரரிடம் 'CD எப்படி போகிறது என விசாரித்தேன்.காலையிலிருந்து நிறையபேர் வந்து வாங்கி செல்வதாகவும்,எதிர்பார்த்ததைவிட ஆதரவு அமோகமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

வீட்டிற்கு திரும்பிய உடன் CD'யை ஓடவிட்டேன்.மொத்தம் ஆறு பாடல்கள்.இனிமையாக ஒலிக்க ஆரம்பித்தது.ஆனால் எதுவும் முதலில் மனதில் ஒட்டவில்லை. நமக்கு 'டப்பாங்குத்து' பாடல்களாகக் கேட்டுக்கேட்டு ரசனையே மாறிவிட்டிருக்கிறது.மேலும் சுத்த தமிழில் பாடல்வரிகள். குறைந்தபட்சம் ஆறு எழு தடவைக்கேட்டால்தான் பாடலின் ஜீவன் புரிந்து ரசித்துருக முடியும் என நினைக்கிறேன்.பார்க்கலாம்.

கேட்டவரையில் 'ஜனனி ஜனனி' ல் இருக்கும் தெய்வீகத்தன்மையும், மனதை உருகச்செய்யும் ராகதேவனின் குரலும் இந்த 'திருவாசகத்தில்' குறைவதாக ஒரு எண்ணம். ஒருவேளை, மீண்டும் மீண்டும் கேட்கக்கேட்க உணரமுடியும் என நினைக்கிறேன்.

1 comment:

அன்பு said...

எழுதிய பெரும்பாலார்கள் போலல்லாமல் எனக்கும் உங்கள் உணர்வுதான் இருக்கும் - இருந்தாலும் என்னதான் இருக்கிறது என்று நெக்குருகி கேட்கமுயற்சிக்கிறேன் (வாங்கிய பிறகு).

உங்கள் பதிவுக்கு நன்றி