Search This Blog

January 14, 2011

சிறுத்தை - திரைவிமர்சனம்



கார்த்தி முதல்முறையாக பிக்பாக்கெட் திருடன்,முரட்டுப்போலிஸ் அதிகாரி என இரட்டை வேடம்.ஏற்கனவே ரஜினி,கமல்,விஜயகாந்த்,விக்ரம் மற்றும் சூர்யா என அனைவருமே அதகளம் பண்ணிய வேடத்தில் கார்த்தி என்ன வித்தியாசம் காட்டப்போகிறார் என்ற கேள்வி படம் ஆரம்பிக்கும்போது இருந்தது.ஏற்கனவே சூர்யா 'காக்க காக்க'வில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'ஆகவும், 'சிங்கத்தில்' சீறும் போலிசாகவும் வெளுத்துக் கட்டியதில் கார்த்திக்கு இந்தப்படம் மிகப்பெரிய சோதனைக்களம். பரிட்சையில் தேறியிருக்கிறாரா கார்த்தி?

கதைக்காக இயக்குனர் சிவா பெரிதாக சிரமம் எடுக்கவில்லை.ஏற்கனவே ஏகப்பட்ட ஹீரோக்கள் 'மாஸ்' ஹீரோவாக நடித்து வெற்றிபெற்ற கதைதான். பிக்பாக்கெட் திருடனான கார்த்தி(ராக்கெட் ராஜா),சந்தானத்துடன் சேர்ந்து பல்வேறு திருட்டுக்களை செய்துகொண்டிருக்கிறார். அவரிடம் சந்தர்ப்பவசத்தில் ஒரு நான்கு வயது பெண் குழந்தை வந்து சேர்கிறது. அக்குழந்தை கார்த்தியை 'அப்பா' என சொந்தம் கொண்டாடுகிறது. போதாதக்குறைக்கு ஒரு பெரியக் கொலைக்காரக் கும்பல் கார்த்தியையும்((ராக்கெட் ராஜா)),குழந்தையையும் கொல்ல துரத்துகிறது.அப்போது 'போலிஸ்' கார்த்தி(ரத்னவேல் பாண்டியன்-IPS)' எண்ட்ரி ஆகிறார்.இருவரையும் காப்பாற்றிவிட்டு கத்திக்குத்துப்பட்டு உயிர் துறக்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் போலிஸ் DSP ரத்னவேல் பாண்டியன்-IPS ஆந்திராவில் உள்ள ஒரு ஊருக்கு செல்கிறார்.அந்த ஊரே ஒரு ரவுடிக்கும்பலிடம் அடிமைப்பட்டு இருக்கிறது. சீறும் சிறுத்தையாக(அப்பாடா…தலைப்புக்கு காரணம் சொல்லியாச்சி) மாறும் ‘பாண்டியன்’ வில்லனின் மகனின் மரணத்துக்கு காரணமாகிறார். வில்லனின் தம்பி(ம(மெ)கா வில்லன்) ஊருக்குள் நுழைந்து ‘பாண்டியனை’ போட்டுத்தள்ளுகிறார். ஆனால் வழக்கம்பொல ஹீரொ இறப்பதில்லை.அவரைக்காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறார்கள் அவருடன் பணிப்புரியும் போலிஸ்காரர்கள். அவர் உயிர்வாழப்போவது சிலக்காலமே என்பதால் அவர்போலவே இருக்கும் ‘ராக்கெட் ராஜா’விடம் குழந்தையை போலிஸ்காரர்கள் சேர்க்கிறார்கள்.

பாண்டியன் இறந்தவுடன் ‘ராக்கெட் ராஜா’ போலிஸ் வேடம் போட்டுக்கொண்டு குழந்தை மற்றும் சந்தானத்துடன் ஆந்திராவுக்கு சென்று வில்லன்களை சிரமம் அதிகமின்றி அழித்து ஊர் மக்களைக் காப்பாற்றி தமனாவின் கைப்பிடிக்கிறார்.

பிக்பாக்கெட் திருடனான 'ராக்கட் ராஜா' கார்த்தி 'காட்டுப்பூச்சி' சந்தானத்துடன் கூட்டணிப் போட்டுக்கொண்டு கிடைத்ததை எல்லாம் திருடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு கல்யாண வீட்டில் திருடச்செல்லும்போது தமனாவுடனான சந்திப்பு,பார்த்தவுடன் காதல் என முதல் பாதி காமெடியும் காதல் கலாட்டாவாகவும் செல்கிறது.காமெடியில் சந்தானம் இந்தமுறை கார்த்தியுடன் சேர்ந்து கலக்குகிறார்.கவுண்டமணிப்போல 'டைமிங் காமெடி' நன்றாக செல்லுபடியாகிறது.

கார்த்தி காமெடியிலும் நடிப்பிலும் கலக்குகிறார். தங்கியிருக்கும் ஏரியாவில் இருக்கும் பெண்களிடம் சண்டைப்பிடிப்பதும்,சந்தானத்தை கல்யாண வீட்டில் மாட்டிவிடுவதும், சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்க ‘மயில்சாமியின்’ ட்ரெஸ்சை ஆபிஸில் உருவி தமனாவுடன் ஜூட்விடுவது என கலந்துக்கட்டி அடிக்கிறார். கார்த்தியும் சந்தானமும் தங்கியிருக்கும் வீட்டிலிருக்கும் எல்லாப்பொருள்களும் திருட்டுப்பொருள்களாலேயே வடிவமைத்திருப்பதில் ஆர்ட் டைரக்டரின் திறமை மிளிர்கிறது.

தமனா வழக்கமான ஹீரோயின்,எவ்வித சிரமுமின்றி கார்த்தியைக் கண்டவுடன் காதலில் விழுந்து, கார்த்தியை கவுக்க அடிக்கடி இடுப்பைக்காட்டி கிறங்கடித்து இரண்டு டூயட்டில் ஆடிப்பாடி, கார்த்தியை அப்பா எனக்கூப்பிடும் குழந்தையால் அவரை சந்தேகப்பட்டுப்பிரிந்து பிறகு சேர்கிறார்.

ரத்னவேல் பாண்டியன் வேடத்திலும் 'கார்த்தி' மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.வேறு எந்த ஹீரோவின் சாயலும் விழாமல்,முக்கியமாக சூர்யாவின் சாயலின்றி,அவ்வேடத்திற்கு தேவையான தீரத்துடனும், மீசை முறுக்குடனும் துடிப்பாக நடித்திருக்கிறார். ‘போலிஸ்காரனோட உடுப்புக்கூட டூட்டி பார்க்கும்டா’ என்பதை சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.உண்மையிலேயே இந்தப்படம் கார்த்தியை ஒரு மாஸ் ஹீரோவாக உருவகப்படுத்தும்.அதற்கு உண்டான உழைப்பையும், மிகைப்படுத்தாத நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.

'ராஜா ராஜா,ராக்கெட் ராஜா' பாடல் தாளம்போட வைக்கிறது.மற்ற இரண்டு டூயட்கள் பிரமாதம் என சொல்லமுடியவில்லை.பிண்ணனி இசை நன்றாக வந்திருக்கிறது.

அண்ணனுக்கு 'சிங்கம்' போல தம்பிக்கு 'சிறுத்தை' ஒரு பக்கா மசாலா மாஸ் என்டர்டைனர்.

A Good time pass.

4 comments:

Senthil said...

u think so?


senthil, doha

Senthil said...

u think so?

senthil
doha

பாண்டியன் said...

http://tamizyan.blogspot.com/2011/01/blog-post_11.html

மன்மதன் அம்பு - நீல வான ஆச்சர்யம்..!

பிடித்து இருந்தால் ஆதரியுங்கள்

ஸ்ரீரங்கம் A.S.Murali said...

ம் ம் ம்.....நல்லாத்தான் இருக்கு .ஆனால் எங்கே ஜனவரிக்குப் பிறகு காணோம்?ரொம்ப பிசியா?