Search This Blog

May 9, 2009

மரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி

கடந்த வியாழன் இரவு விஜய் டிவியில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் செமிபைனல் ரவுண்ட் நடந்தது. அதில் கடைசியில் நடனமாடியவர் எடுத்திக்கொண்ட கான்செப்ட் 'இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள்'.சாதாரணமாக ஆரம்பித்த குழந்தைகளுடனான நடனம், அங்கு நிகழும் குண்டுவெடிப்பும்,மக்களின் அவலநிலையையும் கண்முன்னே நிகழ்த்திக்காட்டினார்கள். அந்த 10 நிமிட நடனம் பார்த்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

வீடியோ இங்கே...

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4

அதைப்பார்த்து என்னில் எழுந்த உணர்ச்சிகளின் வடிவம் கீழே...


கண்ணீர்துளிகள் நிஜம்,
ரத்தஆறுகள் நிஜம்,
வலிகள் நிஜம்,
இழப்புகள் நிஜம்,
துடிப்புகள் நிஜம்,
ஏக்கங்கள் நிஜம்,
கொடுமைகள் நிஜம்,
பசி,பட்டினி நிஜம்,
கற்பழிப்புகள் நிஜம்,
மரணங்கள் நிஜம்,

நிதம்நிதம் இத்தகைய
நிஜங்களின் நிர்பந்தத்தில்
நாளைய விடுதலையை எண்ணி
இன்றைய விடியலாவது
விடைத்தருமா என்ற
வினாவுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும்
விட்டில்பூச்சி கூட்டங்களாய்
நம் ரத்தத்தின் ரத்தங்கள்.

மனிதம் நம்மில் மரித்துவிட்டதா?

7 comments:

சரவணகுமரன் said...

:-((

ஷண்முகப்ரியன் said...

நிதம்நிதம் இத்தகைய
நிஜங்களின் நிர்பந்தத்தில்
நாளைய விடுதலையை எண்ணி
இன்றைய விடியலாவது
விடைத்தருமா என்ற
வினாவுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும்
விட்டில்பூச்சி கூட்டங்களாய்
நம் ரத்தத்தின் ரத்தங்கள்.//

ஒரு நடனம் நம் கண்ணீரை வரவழைக்க முடியுமா என்றால் முடியும் என்பதனை வெகு ஆழமாகவும், அழுத்தமாகவும் நிரூபித்திருக்கிறார்,அருமை இளைஞர்,பிரேம் கோபால்.
இதனைப் பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்,நண்பா.

பிரேம்ஜி said...

மிகவும் கலங்க வைத்தது அந்த நிகழ்ச்சி.

Sivabalan said...

கை ஏந்தி நிற்கும் நம் இனம்
கையா-லாகாத பொது ஜனம்
கை விரித்த தலைவர்கள்
கை கழுவிய நாடு

இனபோர் ஒன்றும் புதிதல்ல , பல கால கட்டங்களில் பல இனங்கள் இதை போன்ற சுழலில் இருந்துள்ளன. யூதர்கள், சீக்கியர்கள், பாலதினியர்கள் என பட்டியல் நீளும்.
அனால் , பல காலங்கள் கடந்தும் இந்த இனங்கள் தங்களை காத்துக்கொள்ள என்றுமே பது பொய் இருந்தன - இருகின்றன

தமிழன் மட்டும் கட்சி, அரசியல், ஜாதி என கூறுபோட்டு தன்னையே தின்று கொண்டிருக்கிறான்

Sivabalan said...

நண்பா
உன் கவிதை கண்டு உவகை அடைந்தேன்
ஆனால், ஒரு தொலை கட்சி நிகழ்ச்சிதான் உன்னை உலுக்க முடிந்ததா?

தொலை அலை வரிசைகள், தங்கள் வாய்களை இருக்க கட்டி கொண்டிருந்த வேலையில் , இந்த நிகழ்ச்சி வந்தது விஜய் டிவி-ஐ பாராட்டுக்கு உரியதாய் ஆகியுள்ளது

இருந்தாலும் சில குறிப்புகள்

௧.
விஜய் டிவி தனது TRP-ஐ உயர்த்தி கொள்ள எதுவும் செய்யும். இன்றைய reality show - கள், ஜோடிக்கப்பட்ட , புற பூச்சு அடிக்கபட்ட நாடகங்கள். அந்த போட்டி-யாளரின் நோக்கம் உண்மையானது, உணர்வு பூரணமானது . ஆனால் அதை விஜய் டிவி வியாபார நோக்கத்துடன் பயன் படுத்தி கொண்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில் அக்கறை இருந்தால் எப்போதோ அவர்கள் "நீயா நானா" நிகழ்ச்சியில் இலங்கை இன போரை கொண்டு விவாதித்து இருக்கலாமே ?

௨.
சினிமாவால் சிதைந்து பொய் இருக்கும் இந்த சமுகத்திற்கு, ஒரு சினிமா நிகழ்ச்சியால் தான் உணர்வு ஊட்ட வேண்டிய அவலம். யாரும் கவலை பட வேண்டம், இன்னும் மூன்று தினங்களில் எங்கள் சங்கம் கண்ட தமிழ் இனம் இதை மறந்து போய் விடுவார்கள்

ஊர்சுற்றி said...

ஈழத்துக் கோபம் தெறித்து விழுந்தது அந்த நடனத்தில். மனிதம் மாண்டுபோய்க்கொண்டிருப்பதை வடித்துக் காட்டியது.

உயிரூட்டம் கொடுத்த பிரேம் கோபாலுக்கு தலைவணங்குகறேன்.

ஜோதிஜி said...

மறக்க முடியாத இடுகை எழுத்துக்கள் உங்களுடையது. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கிறது. வாழ்த்துக்கள். இந்த இலங்கை குறித்த விசயங்கள் தமிழன் வாழ்வியல் தடங்களை வாய்ப்பு இருந்தால் இடுகையில் வந்து படித்து பாருங்கள். உங்கள் சிந்தனைகளுடன் ஒத்துப்போகும்.

http://deviyar-illam.blogspot.com