Search This Blog

July 10, 2006

குளிச்சா குற்றாலம்....

கடந்த மாத இறுதியில் கல்லூரி நண்பனின் திருமணத்தில் கலந்துக்கொள்வதற்காக பெங்களுரிலிருந்து நண்பர்களுடன் சங்கரன்கோவிலுக்கு 'தூத்துக்குடி எக்ஸ்பிரஸில்' புறப்பட்டோம். இரவு 915க்கு மைசூரிலிருந்து வந்து சேரவேண்டிய வண்டி,1030க்குதான் வந்து பிறகு கிளம்பியது.பரிசோதகர் வந்துபோனபின்பு உறங்கலாமென 1 மணி நேரம் காத்திருந்தோம்.யாரும் வருவதாக தெரியவில்லை. காலையில் வண்டி 'கொடை ரோடை' நெருங்கும்போது விழித்தெழுந்தோம்.வண்டி மதுரையில் நுழையும்போது 'ப்ளாட்பாரத்தில்' மீனாட்சி பவன் சிற்றுண்டிசாலை' கண்ணில் பட்டது.
அங்கு 'இட்லி,பொங்கல்,பூரி,காபி' என எல்லாவற்றையும் 'பார்சலில்' வாங்கிக்கொண்டோம்.உணவு வகைகள் அனைத்தும் அருமையாக இருந்தது. 'காபி'யின் சுவை, பேஷ்...,பெஷ்.....ரொம்ம்ம்ம்ப நன்னாயிருக்கு' என எங்கள் அனைவரையும் சொல்லவைத்தது.

ஒருவழியாக காலை 1030 வாக்கில் கோவில்பட்டியை அடைந்தோம்.அங்கிருந்து சங்கரன்கோவிலுக்கு 1 மணி நெர பேருந்துப்பயணம். வழி மிகவும் மோசமாக இருந்தது.சுற்றுப்பிரதேசமும் வறண்டு களையிழந்து காணப்பட்டது.
மதிய உணவை நண்பனின் வீட்டில் முடித்துக்கொண்டு ஒரு 'சுமோ'வில் 'குற்றாலம்' நோக்கிப்புறப்பட்டோம். 50 நிமிடப்பயணம்.
வழி முழுவதும் பெரிய பெரிய காற்றாலைகளை அமைத்து 'மின்சாரம்' தயாரிகிறார்கள்.'குற்றாலம்' நெருங்க நெருங்க காற்றின் வேகமும் அதிகமாகிறது.சுற்றுப்பிரதேசமும் மிகவும் பசுமையாக,கண்களுக்கு இதமாக இருக்கிறது. ஒரு 40 கிமி இடைவெளியில் வறண்ட மற்றும் வளமையான பிரதேசங்கள்.

முதலில் 'ஐந்தருவி'க்கு சென்றோம்.அப்போதுதான் சாரல் மழை விட்டிறுந்தது.மக்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது எங்களுக்கு நிறைவாக இருந்தது. அருவில் தண்ணீரும் மிதமான வேகத்தில் கொட்டிக்கொண்டிருந்தது. 'ஐந்தருவி'யில் இரண்டு பகுதிகள் பெண்கள் பகுதியிலும், இரண்டு பகுதிகள் ஆண்கள் பக்கமும் விழுந்துக்கொண்டிருந்தது. இன்னோரு பகுதி அன்று தண்ணீர் குறைவாக இருந்ததால் காணவில்லை.

அங்கிருந்து 'மெயின்' அருவிக்கு சென்றோம்.இங்கு தண்ணீர் மிகவும் அதிகமாக இருந்தது.நாங்கள் சென்ற நெரத்தில் 'சாரல்' மழையும் பொழிய ஆரம்பித்தது. ஒரே சமயத்தில் மலையிலிருந்து விழும் மலைஅருவியிலும்,வானத்திலிருந்து விழும் மழைஅருவியிலும் ஆனந்தமாக குளித்தோம்.அருவியின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. உடம்புக்கு நல்ல 'மசாஜ்'ஜாக சரியான அடி விழுந்தது. 'குளிச்சா குற்றாலம்....' என எழுதியவர் அந்த அனுபவத்தை உணர்ந்துதான் எழுதியிருக்கவேண்டும்.ஒரு நிஜமான 'குளியல்' அனுபவம் வேண்டுமெனில் ஒரு நடை குற்றாலம் சென்று குளியல் போட்டுவிட்டு வாருங்கள்.

2 comments:

சகாதேவன் said...

மலை அருவியிலும் மழை அருவியிலும்
குளித்ததாக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
இப்போது கூட குற்றாலத்தில்
நல்ல தண்ணீர் விழுகிறதாம்.
வாங்களேன்.
சகாதேவன்

Anonymous said...

குற்றாலம் என்று சொன்ன உடன் ஆசை வந்து விட்டது. வருடா வருடம் அங்கு சென்று ஆனந்த குளியல் குடும்பத்தோடு சென்று குளித்தாலும் ஆவல் நிறகாது. உங்கள் கட்டுரை கண்டு மீண்டும் சென்று வ்ரலாமா என்ற தூபம் வந்து விட்டது. ஆனால் இப்பொழுது இருப்பதோ பெஹ்ரேனில் அல்லவா?

குற்றால அருவியின்
நண்பன்
அசலம்ஒன்