Search This Blog

October 26, 2005

ரஜினி ரசிகர்களின் ரயில் மறியல்....ஜப்பானில்

கடந்த செப்டம்பர் 31'ம் தேதி,ஜப்பானில் ஒரு மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடந்துள்ளது.அதை வெற்றிகரமாக நடத்தியவர்கள் அங்குள்ள ரஜினி ரசிகர்கள்.
ரஜினிகாந்த் நடித்த 'முத்து' பார்த்து 'பித்து' பிடித்தவர்கள்,அவருக்கு அங்கே ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.அதன் பிறகு அவர் நடித்த எல்லா படங்களும் ஜப்பானில் மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது.ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில்தான் இந்த போராட்டம் நடந்துள்ளது.அதிர்ந்துபோன ஜப்பான் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.கீழ்க்கண்ட கோரிக்கைகள் ரஜினி ரசிகர்களால் எழுப்பப்பட்டுள்ளது.

1. ஜப்பான் தலைநகர் 'டோக்கியோ'வின் பெயரை 'ரஜினியோ' என மாற்றவேண்டும்.

2. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 அரசு விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும்.

3. ரஜினி வருடத்துக்கு ஒருமுறையாவது,இமயமலைக்கு பதில் ஜப்பானில் உள்ள ஏதாவது ஒரு மலைக்கு(குறைந்தப்பட்சம்,ஏதாவதொரு 'எரிமலை'க்காவது) வரவேண்டும்.

4. ரஜினி படம் வெளியாகும் நாளில்,ஜப்பானில் 'இலவச ரயில் சேவை' அளிக்கவேண்டும்.

5. மீனா'வை இந்திய தூதராக ஜப்பானில் நியமிக்கவேண்டும்.

இத்தகவலை 'ஜப்பான் ரஜினி ரசிகர்' மன்ற தலைவர் 'ரஜினி காக்கமுரே'சான் தெரிவித்தார்.மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த ஆண்டு 'பிப்ரவரி 30'ம் நாள் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

மேற்கண்ட கோரிக்கைகளைக் கேட்ட ஜப்பான் அரசு,ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
அக்குழு விரைவில் இந்தியா வந்து பிரதமர்,ரஜினி,மீனா ஆகியோர்களை சந்திக்கும் என 'நம்பமுடியாத' வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ரயில் மறியலின்போது எடுத்தப்புகைப்படம்,உங்கள் பார்வைக்கு...


11 comments:

rv said...

:)

எங்கள் தன்மானத்தலைவரை, தமிழினத்தின் விடிவெள்ளியை, ஜப்பானின் சூப்பர் ஸ்டாரை நக்கலடிக்கும் தொனியில் இருக்கும் இந்தப் பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்!!

----
நிஜமான போட்டோவா இல்ல போட்டோஷாப் கைங்கர்யமா??

மோகன் said...

போட்டோ நிஜம்தான்..மேட்டர் மட்டும் நம்ம கைங்கர்யம்.ஆமாம் ரஷ்யாவில் உங்க தன்மானத்தலைவருக்கு ரசிகர்மன்றம் ஏதாவது இருக்கா ?

Sundar Padmanaban said...

ஏங்க. இது பத்தி வந்த செய்தி எல்லாம் "நிஜம் போல பொய் சொல்றது" மாதிரின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

புகைப் படத்தைப் பாத்தா நிஜமாவே ஜப்பான்ல ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க போல இருக்கே.

சுந்தர்.

மோகன் said...

சுந்தர்..
உண்மையிலேயே தலைவருக்கு அதிகமான ரசிகர்கள் ஜப்பானில் இருக்கிறார்கள்.மத்தபடி,இந்த பதிவு,'உண்மையை base பண்ணி பொய்' சொல்ற வகையை சார்ந்தது.
போட்டோ உண்மை...
மேட்டர் உடான்ஸ்...

b said...

ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் இருப்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் ரயில் மறியல் அளவுக்கெல்லாம் போயிருக்காது என நம்புகிறேன்.

Anonymous said...

That photo was real but the matter was a hoax! That was actually a group of people going by rail to see the latest CM in Japan. I had alreadyposted that photo in TFMpage and Rajinifans.com websites a week ago!

Raja said...

ரஜினி படமான பாட்சாவை ரயிலில் போட்டு ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். பயணத்தொடக்கத்தின் போது எடுத்த படம். அவ்வளவு தான் ஆனா உங்க உடான்ஸ் ஓவர். ஜப்பானியர் கையிலும் ரஜினி கொடி களைகட்டுது

பினாத்தல் சுரேஷ் said...

அருமையான நகைச்சுவை

மோகன் said...

தங்கள் வருகைக்கு நன்றி மூர்த்தி,சங்கர்,ராஜா,சுரெஷ்.

Anonymous said...

/ மீனா'வை இந்திய தூதராக ஜப்பானில் நியமிக்கவேண்டும்/
எதுக்குப்பா தூக்கி காட்டவா?

பரஞ்சோதி said...

நல்ல நகைச்சுவை, தொடரட்டும் உங்கள் ரவுசுகள்.