Search This Blog

September 17, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 9

டிஸ்கி : கடந்த சில நாட்களாக வேலைக்கொஞ்சம் அதிகமாகிவிட்டதால், தொடர்ந்து எழுதமுடியவில்லை.....இப்ப Am back......;))

கடந்தப்பதிவில் அமெரிக்காவில் IT கம்பெனியில் காண்ட்ராக்ட்ர் அல்லது நேரடி எம்ப்ளாயி'யாகவோ வேலை செய்யும் இந்தியமக்கள் தன்வேலையைக் காப்பாற்றிக்கொள்ள செய்யும் 'வேலைகள்' என்ன என்பதைப்பற்றி எழுதப்போவதாக சொல்லியிருந்தேன்.இந்தப்பதிவு அதைப் பற்றிதான்.

முதலில் அமெரிக்க கம்பெனியில் நேரடியாக வேலைப்பெற்றுப் பணிப்புரியும் நம் மக்களைப்பற்றி. கடந்தப்பதிவில் decision maker level'ல் பணிப்புரியும் நம்மவர்கள் அதைப்பயன் படுத்தி பணம் செய்யும் வித்தைகளைக் கூறியிருந்தேன். அவர்களைத்தவிர்த்து அவர்களுக்கு கீழேப் பணிப்புரியும் team lead,techlead போன்றவர்கள் அவர்களுடன் இந்திய சர்வீஸ் கம்பெனியிலிருந்து வந்து பணிப்புரியும் மக்களுக்கு வேலையை பகிர்ந்தளிப்பவர்களாகவோ, அல்லது செய்துமுடிக்கப்பட்ட வேலைகளை review செய்பவர்களாகவோ இருப்பார்கள். பொதுவாக சர்வீசஸ் கம்பெனியிலிருந்து வேலை செய்பவர்கள் process oriented'ஆக இருப்பார்கள்(அல்லது அப்படி இருப்பதாக காட்டிக் கொள்வார்கள்) .process oriented என்றால் ஏகப்பட்ட 'டாக்குமெண்ட்' வேலைகள் இருக்கும். சாப்ட்வேரில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் விவரமாக ஆவணப்படுத்த வேண்டும்.இதனால் நன்மை என்னவென்றால் ஒரு புராஜக்ட் அதில் வேலைச் செய்துக்கொண்டிருக்கும் ஒரு சிலரை மட்டும் என்றென்றும் நம்பியிருக்க தேவையில்லை. புதிதாக சேரும் எவரும்,அந்த ஆவணங்களைப் படித்து புரிந்துக்கொண்டு,விட்ட இடத்திலிருந்து அதிகப்பிரச்சனைகளின்றி வேலையைத்தொடர ஏதுவாக இருக்கும். தீமை என்னவென்றால், இதற்கு ஆகும் நேரத்திற்கு 'கஸ்டமர்' செலவு செய்யவேண்டும்.அதோடு முன்பே கூறியுள்ளதுப்போல் அதில் வேலை செய்தவரின் முக்கியத்துவம் அதிகமில்லை.ஆகவே நம்மவர்களின் முதல் எதிர்ப்பு 'ஆவணப்படுத்துதல்' வேலைகளுக்கு.

நான் முதலில் வேலைச்செய்த அமெரிக்க கம்பெனியின் techlead ஒரு இந்தியர். நான் அனைத்து விவரங்களையும் டாகுமெண்ட் செய்ய ஆரம்பித்தேன். அது முடிந்தவுடன் review'க்காக அவருக்கு அனுப்பினேன். அதைப்பார்த்துவிட்டு என்னை அழைத்து இதற்கேல்லாம் நெரம் செலவழிக்கவேண்டாம் எனக்கூறிவிட்டார். ஆனால் எங்கள் கம்பெனியில் நாங்கள் அதைச் செய்யவேண்டும் என்பதால், ஓய்வு நேரத்தில் நான் தொடர்ந்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு வருடம் வேலைப் பார்த்து விட்டு வேறு நகருக்கு செல்வதற்குமுன், நான் கடந்த ஒருவருடமாக தயாரித்திருந்த ஆவணங்களை என்னுடைய பரிசாக அவருக்கு அளித்தேன். சில மாதங்களுக்குப்பிறகு என்னைத் தொடர்புக்கொண்ட அவர்,நான் அளித்திருந்த ஆவணங்கள் அந்தப்புராஜக்ட்க்கு பெருமளவில் உபயோகப் படுவதாகவும்,இனிமேல் டாகுமெண்ட் செய்வதை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் கூறினார்.

அதேப்போல், ஒரு சர்வீஸ் கப்பெனியிலிருந்து ஒரு அமெரிக்க கம்பெனிக்கு Time & material முறையில் ஆட்கள் தேவைப்படும்போது சர்வீஸ் கம்பெனி பரிந்துரைக்கும் developer/techlead ஆகியோரை அமெரிக்க கம்பெனியை சேர்ந்தவர்கள் இண்டர்வியூ செய்வார்கள். அந்த இண்டட்வியூ பேனலில் 'இந்தியர்' யாராவது இருந்தால்,நீங்கள் காலி. ஏதோ 'நாசா'விலிருந்து ஏவப்படும் ராக்கெட்'க்கான சாப்ட்வேரை தயாரிக்கும் பணியில் உங்களை அமர்த்தப் போவதற்கான இண்டர்வியூப்போல அக்குவேறு ஆணிவேறாக உங்களைக் கேள்விமேல் கேள்விக்கேட்டு குடாய்ந்து நம்முடைய கான்பிடன்ஸ் லெவலையே காலி செய்துவிடுவார்கள். அந்த இண்டரியூவில் தேர்வாக எளிதான வழி, அவர்கள் அறிவுஜீவித்தனமாக( ????) கேட்கும் கேள்விகளுக்கு ராஜேந்திரக்குமார் பாணியில் 'ங்கே' என முழித்துவிட்டு, இது ஒரு சிறந்தக்கேள்வி,என் வாழ்நாளில் இதுப்போல யாரும் கேட்டதில்லை என அடித்துவிட்டால்,அவரும் 'இவன் ரொம்ம்ம்....ப நல்லவன்,இங்க வந்து நம்ப வேலைக்கு வேட்டு வைக்கமாட்டான்' என நம்பி நம்மை தெர்ந்தெடுத்து விடுவார். கடைசியில் 'ஆன்சைட்' போனப்பிறகு, ராக்கெட்'க்கான சாப்ட்வேரை எழுதாமல்,ஏதாவதொரு ஆதிக்கால மெயின்ப்ரேம்' சாப்ட்வேரில் 'சிக்'கெடுக்கும் வேலையை தலையில் கட்டிவிடுவார்கள்.

உங்கள் புராஜக்ட் ஆப்ஷோரிலிருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்டு acceptance testing' காக ஆன்சைட்டிலுள்ள இந்திய கஸ்டமரிடம் போனால், நீங்கள் எவ்வளவு சிறப்பாக புராஜக்ட் செய்து டெலிவரி செய்திருந்தாலும் அதில் குறைகள் கண்டுப்பிடித்து, application வேலையே செய்யாது அல்லது நாம் எதிர்ப்பார்த்த முறையில் தயாரிக்கப்படவில்லை என management level'ல் escalate செய்துவிடுவார்கள். ஒரு எளிய உதாரணமாக இரண்டு எண்களைக் கூட்டும் வேலை எனச் சொல்லி, நாம் 2+1=3 என காட்டினால், அது எப்படி 2+1=3 எனலாம்,எனக்கு வேண்டியது 1+2=3'தான் என பிரச்சனையைக் கிளப்புவார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்து 'successful production roll-out' செய்து higher management'க்கு அதை அறிவிக்கும் இ-மெயிலில் கவனமாக நம்முடைய முகவரிகள் இல்லாதவாறு பார்ந்துக்கொள்வார்கள்.

IT துறையில் சிரமமில்லாத வேலை development project. ஆரம்பம்முதல், இறுதிவரை அனைத்து செயல்பாடுகளும் நம் பொறுப்பில் இருப்பதால் ஒரு சிறிய திறமையான குழு அமைந்தால், வேலையை சுலபமாக முடித்துவிடலாம். அவ்வாறில்லாமல் ஏதாவதொரு 'maintenance' டீமில்,அதுவும் அந்த சாப்ட்வேர் அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்'ராக வேலைப்பார்க்கும் நம்பவர்களின் தயாரிப்பென்றால் அவ்வளவுதான். code'ஐ பார்த்தால் தலையும் புரியாது,காலும் புரியாது. ஒழுங்குமுறையின்றி,எவ்விதக்குறிப்புமின்றி அலங்கோலமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 1+1=2 என்பதை ((18343/45.67223)*(863434-883743(884545-(7454/4545)))+87878*532)+1 என எழுதியிருப்பார்கள். அவர்களுடைய ஒரேக் குறிக்கோள் அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்கள் எழுதிய லாஜிக்கைப் புரிந்துக்கொள்ளக்கூடாது. அப்படியிருந்தால்தான் அவர்களின் வேலைக்கு யாரும் சுலபமாக வேட்டு வைக்கமுடியாது.

கடந்த சில வாரங்களாக எழுதியப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகப் படித்துப்பார்த்தபோது,இதுவரை IT துறையில் நான் கண்டவைகளில் எனக்கு தவறாகவோ அல்லது வித்தியாசமாகப் பட்டவைகளை, மொழி/இன ரீதியாகப் பாகுபடுத்தி எழுதியிருக்கிறேன்.பெரும்பாலும் இனரீதியான குழுக்களில் உள்ள குறைகள் பற்றி எழுதியிருக்கிறேன். இவைகள் குறைய என்ன செய்யவேண்டும்? எவ்வாறு IT துறையை ஒரு சிறந்தத்துறையாக உருவாக்கலாம்...அதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு என்ன?

(தொடரும்.....)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8

11 comments:

அமர பாரதி said...

//அந்த இண்டட்வியூ பேனலில் 'இந்தியர்' யாராவது இருந்தால்,நீங்கள் காலி// உண்மைதான். மேலும் மிக மோசமான உடல் மொழியைக் கையாளுவார்கள். பேசிக்கொடிருக்கும் போதே பாதியில் அடுத்த கேள்வியை கேட்பார்கள். பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது வேறு எதையாவது பார்த்துக்கொண்டிருப்பார்கள். அல்லது பேனலில் உள்ள வேறு ஒருவரிடக் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் இன்னொரு உண்மையும் இருக்கிறது.
//'இவன் ரொம்ம்ம்....ப நல்லவன்,இங்க வந்து நம்ப வேலைக்கு வேட்டு வைக்கமாட்டான்' என நம்பி நம்மை தெர்ந்தெடுத்து விடுவார். கடைசியில் 'ஆன்சைட்' போனப்பிறகு//

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே தனக்கு மேலிருக்கும் நம்முடைய ஆளை எப்படி புறம் சொல்லி கவிழ்க்கலாம் என்றே 75% நேரம் யோசித்து அசிங்கமாக எதையாவது செய்வார்கள். அது என்னமோ ஒரு தமிழனுக்கு தனக்கு வேலை சொல்லுபவர் ஒரு தமிழனாக இருக்கக் கூடாது என்பதில் அவ்வளவு விருப்பம். இதே வட இந்தியனாகவோ அமெரிக்கனாகவோ இருந்தால் மூடிக்கொண்டு வேலை செய்வார்கள்.

மங்களூர் சிவா said...

/
அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்'ராக வேலைப்பார்க்கும் நம்பவர்களின் தயாரிப்பென்றால் அவ்வளவுதான். code'ஐ பார்த்தால் தலையும் புரியாது,காலும் புரியாது. ஒழுங்குமுறையின்றி,எவ்விதக்குறிப்புமின்றி அலங்கோலமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 1+1=2 என்பதை ((18343/45.67223)*(863434-883743(884545-(7454/4545)))+87878*532)+1 என எழுதியிருப்பார்கள்.
/

:-)))))))))))))))))
அவ்ளோ கில்லாடிங்களா நம்மாளுங்க!!

aravindaan said...

I went for Interview in Merylynch, they asked each and every object in ASP and methods. Litterally i was taking ASP Class.
Another Interview in HP, he was asking me ".Net" chapter by chapter. Fortunately his boss came,called him back otherwise he would have asked more. They test their knowledge..
One more they use variable single character like i,j

ரிஷி (கடைசி பக்கம்) said...

hi,

Now I read all your posts. It is like conception.

All of items you mentioned are conceptually matching with the engineering industry which I'm working.

Good job. Keep going

Vijay said...

மோஹன்,
உங்களுடைய இந்தத் தொடர் ரொம்ப ஸ்வாரஸ்யமாகவும், அதே சமயம் உணையைக் கூறுவதாகவும் இருக்கிறது. தவறாமல் படிக்கிறேன்.

Anonymous said...

மோகன்,
நிறைய எழதுதுங்கள் தொய்வு இல்லாமல் செல்கிறது தொடர்
வாழ்த்துகள்

வெங்கட்-துபாய்

மோகன் said...

வருகைக்கும் கருந்துக்கும் நன்றி அமரபாரதி...சிவா,அரவிந்தன்...

மோகன் said...

கடைசிப்பக்கம்...விஜய் உங்கள் ஆதரவுக்கு நன்றி...தொடர்ந்துப் படியுங்கள்...

Test said...

மோகன்,
உங்கள் எல்லா பதிவுகளையும் படித்தேன், மிகவும் நன்று, இறுதியில் சொன்ன பதிவில் "ஆந்திரா கோடிங்" என்று ஒரே வார்த்தையில் சொல்லி இருகல்லாம் :-)

Anonymous said...

Reading the posts regularly.
Keep writing.

Anonymous said...

Very nice article... came to know more things about IT field...