தொடர்ச்சியாக "IT துறை ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா" எழுதிக்கொண்டிருந்தபோது எக்கச்சக்கமாக விழுந்த ஹிட்ஸ்,சில நாட்களில் தமிழ்மண்த்தின் சூடான பதிவுகளில் 'டாப் 3' வரை சென்றது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான வேலைகள் காரணமாக பதிவுலகம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க முடியவில்லை.அவ்வப்போது சிறிது நேரம் கிடைக்கும்போது தமிழ்மணத்தை எட்டிப்பார்த்தால் இலங்கைப் பிரச்சனை, சென்னை பதிவர் சந்திப்பு, பா(சா)ருவின்,கலைஞரினின்,ஆற்காட்டாரின், தங்கமணிகளின் தலை உருட்டல்கள், ABCD ஹிட்ஸ்,XYZஐ கண்டிக்கிறேன் என ஏகப்பட்ட ஸ்டீரியோ பதிவுகள்.
ஆகவே இப்போதுள்ள ட்ரெண்டில் நானும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளதான் இந்தப் பதிவு....ஆகவே மகாப் பதிவுலக நண்பர்களே, இன்று நான் என் ப்ளாக் ஹிட்ஸ்'ஐ பார்த்தபோது 00005 ஹிட்கள் இருந்தது.இந்த அரிய சாதனையைப் பதிவு செய்யவே இந்த பதிவு( 00005 ஹிட்ஸ்'ல் 4 முறை நானே வந்துப்போனதை நல்லவேளை யாரும் பாக்கல ;))))
டிஸ்கி : 00005 ஹிட்ஸ்'ஐக் உங்கள் அனைவருடனும் கொண்டாட பிப்ரவரி 31 ம் தேதி சென்னைக்கு வரலாமென இருக்கிறேன். இதையே அழைப்பிதழாகக் கருதிகொண்டு அனைவரும் சென்னை காந்திசிலை அருகே வந்துவிடவும். யாருக்கும் 'சாட்டிங் மூலமாக அழைப்புக்கிடையாது.மேலும் ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் அவரும் கலந்துக்கொள்ள மாட்டார் என வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.வேண்டுமானால் 'வலைஞர்களின்" சீப்பஸ்ட் ஸ்டாரான JK ரித்தீஸை அழைக்கலாம்...கலந்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் அண்ணன் ரித்தீஸ் அவர்கள் குறைந்தப்பட்சம் 500ரூ வழங்குவார்.
5 comments:
ada, time solave illaiye?
//
டிஸ்கி : 00005 ஹிட்ஸ்'ஐக் உங்கள் அனைவருடனும் கொண்டாட பிப்ரவரி 31 ம் தேதி சென்னைக்கு வரலாமென இருக்கிறேன்.
//
பிப்ரவரி 33 என்றால் எல்லாருக்கும் வசதியாக இருக்கும்.
:))
மங்களூர் சிவா,
//பிப்ரவரி 33 என்றால் எல்லாருக்கும் வசதியாக இருக்கும்.//
இரண்டு நாட்கள் முன்னரே வைத்து விடலாமே!! அதாவது பிப்ரவரி 30 அன்று.? என்ன சொல்கிறீர்கள்?
- பாலச்சந்தர் முருகானந்தம்,
http://balachandar.net சொந்த வலைப்பதிவு
http://ulagam.net
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
வந்துட்டோம்ல நாங்களும்.அடுத்த கப்பல்ல வறேன் கூட்டத்துக்கு
எப்டி இப்படி எல்லாம்? LOL
Post a Comment