Search This Blog

September 7, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 8

2006'ம் தொடக்கத்தில் 'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்பதற்கான நிகழ்வு நடந்தது. நியூ இயர் கொண்டாட்டங்கள் முடித்து, ஆபிஸுக்கு வந்த மேனேஜர்கள்(decision makers) அந்தக்கம்பெனியின் ஆடிட்டிங் டீம்'மால் ஒரே நேரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த நிமிடமே வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அவர்கள் லேப்டாப்'பையோ,அவர்கள் க்யூபிக்கில் உள்ள எந்தப் பொருளையும் எடுக்கவிடாமல் பறிமுதல் செய்யப்பட்டு,அவர்களுக்கு கீழே வேலைச் செய்பவர்கள் முன்னிலையில் வெளியேற்றப் பட்டார்கள்.

யாருக்கும் அப்போது எப்படி இது நிகழ்ந்தது எனப் புரியவில்லை.அந்த மேனேஜர்களும் அதற்குப்பிறகு அந்த நகரத்தில் இல்லை.யாராலும் அவர்களைத் தொடர்ப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய 'காண்ட்ராக்ட்டர்' நண்பரும் இந்த நிகழ்ச்சி நடப்பதற்க்கு சில மாதங்களுக்கு முன்பாகவே வேறு கம்பெனிக்கு மாறியிருந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு 'யாஹூ' சாட் வழியாக அந்த நண்பர் கிடைத்தார்.என்னுடைய மொபைல் எண்ணை வாங்கி உடனடியாக தொடர்ப்புக்கொண்டார். அவரிடம் ஏன் அவர் அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறிவிட்டார் எனக்கேட்டதற்க்கு ஒரு பெரிய விளக்கத்தைக் கூறினார்.

3-4 வருடங்களாக எந்தவிதச் சிக்கலுமின்றி அந்த மேனேஜர்களுக்கும், கன்சல்டன்சி கம்பெனிக்கும் உறவு தொடர்ந்துள்ளது. அந்த சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன்னொரு கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்கள் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் கம்பெனி மேனேஜர்களிடம் காரணம் கேட்டதற்கு ' பெரும்பாலோனோரை உங்கள் கம்பெனி வழியாகமட்டும் எடுப்பதால் 'higher management'க்கு சந்தேகம் ஏற்படலாம்,ஆகவேதான் 3 இந்தியன் சர்வீசஸ் கம்பெனிகளோடு,இந்த புது கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்களைத் தேர்வு செய்வதாகவும்' கூறியுள்ளார்கள். ஆனால் போகப்போக புதிய கன்சல்டன்சி கம்பெனியிலிருந்து ஆட்களை எடுப்பது அதிகரித்துள்ளது.

இதில் ஏதோ விஷ(ய)ம் இருக்கிறது என சந்தேகித்த முதல் கன்சல்டன்சி கம்பெனி விவகாரத்தை ஆராய்ந்தப்போது, அந்தப் புதிய கன்சல்டன்சி கம்பெனியில் இந்த மூன்று மேனேஜர்களும் மறைமுகப் பங்குதாரர்களாகவும்,அந்தக்கம்பெனியை நடந்துவது அவர்களின் உறவினர்கள்தான் என்றத்தகவல் கிடைத்துள்ளது. இந்த விவரங்களைக் கூறி அந்த மேனேஜர்களைக் கேட்டதற்கு பேச்சு முற்றி அவர்களுக்குள்ளே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.சிறிது நாட்களில் அந்த கன்சல்சன்சி வழியாக சேர்ந்தவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அக்கம்பெனியிலிருந்து வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர்.2-3 மாதங்களில் கிட்டத்தட்ட 70 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நெருக்கடிக்கும், நஷ்டத்திற்க்கும் ஆளான அந்த கன்சல்டன்சி கம்பெனி கடந்த 3-4 வருடங்களாக அந்த மேனேஜர்களுக்கு கொடுக்கப்பட்ட கமிஷன் விவகாரங்களை 'higher management' க்கு போட்டுக்கொடுத்துவிட்டு அவர்கள் கன்சல்டன்சி கம்பெனியை மூடிவிட்டிருக்கிறார்கள். விவரங்களை ஆராய்த்த கம்பெனி ஆடிட்டிங் டீம் அந்த மேனேஜர்களின் பேங்க் கணக்குகளை தடைச்செய்துவிட்டு அவர்களை நீக்கிவிட்டார்கள்.ஆனால் விஷயம் வெளியே தெரிந்தால் கம்பெனி பெயர் கெட்டுவிடும் என்பதால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது ஒரேஒரு எடுத்துக்காட்டுதான்.இதுபோல் பலக்கம்பெனிகளில் நடைப்பெருகிறது. இந்தியர்கள் மட்டும் அல்ல,அனைத்து நாட்டினரும் ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறமென எவ்வித வேறுபாடுகளுமின்றி 'ஒற்றுமையாக' ஒன்று சேர்ந்து உலகத்தின் தொன்றுத்தொட்டு நிகந்துவரும் லஞ்சம், குறுக்குவழியில் பணம் சம்பாதித்தல், துரோகம்,சுயநலத்துடன் தன்முன்னேற்றத்திற்காக எவ்விதசெயலையும் மனசுத்தியுடன் செய்தல் போன்றவைகளை, 21'ம் நூற்றாண்டில் பல இந்திய நடுத்தரக்குடும்பத்து மக்களின் வாழ்வில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் IT துறையிலும் மேற்க்கூறிய விஷயங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதைத்தவிர தங்கள் வெலைகளைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்டர்களாக வேலைச் செய்யும் நம்மக்கள் செய்யும் 'தகிடுதம்'கள் என்னென்ன??

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7

(தொடரும்)

9 comments:

மங்களூர் சிவா said...

:(((((((((((((((((

அது சரி said...

சுய ஒழுக்கம் இல்லாதவர்கள் எங்கிருந்தாலும் இப்படித்தான் போலும்!

Anonymous said...

அகிலத்தில் அராஜகம் அநியாயாம் அரக்கத்தனம் அதிகமாகி விட்டது

ஆதலால் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக ஆண்டவனை

உடனடியாக அவதாரம் எடுக்கும் படி மிகமிக பணிவான அன்புடன்

வேண்டுகிறேன்.

வருக! வருக!! வருக!!!

எங்கள் அருள் நிறைந்த

ஆண்டவரே உடனடியாக வருக!


இதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

aravindaan said...

'காண்ட்ராக்ட்டர்களாக வேலைச் செய்யும் நம்மக்கள் செய்யும் 'தகிடுதம்'கள் என்னென்ன??

Interesting, like to know that..

முருகானந்தம் said...

தொடர் நன்று செல்கிறது. Keep going..

Anonymous said...

very interesting,write more

வெங்கட்ராமன் said...

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...

என்று குறிச்சொலை (Labels) இணைத்துவிட்டால் புதிதாக வருபவர்கள் முழுவது படிக்க ஏதுவாக இருக்கும்.

Anonymous said...

தொடர்ந்து இந்த தொடரைப்படித்து வருகிறேன். சிலவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால், ஒரு நல்ல தொடர். தொடர்ந்து எழுதுங்கள்

Vijay said...

நம்மூர் மக்கள் இந்த மாதிரியெல்லாம் திருகுதாளமெல்லாம் பண்ண்றதுனால தான் இந்தியா பற்றி ஒரு தப்பான அபிப்பிராயம் இருந்துட்டு வருது. எப்போத் தான் இந்த மாதிரி மக்களெல்லாம் திருந்துவாங்களோ?