Search This Blog

September 2, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 7

2003'ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கவாசம் ஆரம்பித்தது.எங்கள் கம்பெனியிலிருந்து நானும், ஆப்ஷோரிலிருந்து இருவரும் வேலையை ஆரம்பித்தோம். அது ஒரு டெவலப்மெண்ட் ப்ராஜக்ட்.எங்களைத்தவிர மேலும் 18-20 பேர் டீமிலிருந்தார்கள்.அதில் பெரும்பாலோர் நான் அமெரிக்காவிலிருந்த நகரத்திலிருந்தும்,மற்றவர்கள் வேறொரு நகரத்திலிருந்தும் வேலை செய்தார்கள்.கிட்டத்தட்ட 4 மாதங்கள் வேலை அதிகமிருந்தது, என்னுடைய டீம் ஆப்ஷோரிலிருந்ததால் சிலசமயம் இரவுமுழுவதும் வேலையிருந்தது.ஆகவே வெலையைத்தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. முதல் 'ரிலீசுக்கு' பிறகு வேலை சுலபமானது.மேலும் 'ஆப்ஷொரிலிருந்து' வேலைப்பார்த்தவர்களையும் நான் அமெரிக்காவிற்கு வரசெய்துவிட்டேன்.ஆகவே எனக்கு வேலை முன்பிருந்ததுபோல் அதிகமில்லை. ஆகவே என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்க ஆரம்பித்தேன்.

வழக்கமாக இந்தியாவிலிருந்து 'சர்வீஸ் கம்பெனிகளின்' சேவையை பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்,முதலில் ஒரு இந்தியன் கம்பெனியோடு வேலையை ஆரம்பிப்பார்கள். சிறிதுக்காலத்திற்கு பிறகு சில வேலைகளை வேறோரு இந்திய சர்வீஸ் கம்பெனிக்கு கொடுப்பார்கள். இதனால் இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் ஒரு போட்டி ஏற்படும் ஆகவே வேலையை திறமையாக முடித்துக்கொடுக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படும்.சில சமயம் பில்லிங் ரேட்டும் குறைக்கவேண்டியிருக்கும். இதனால் அமெரிக்க கம்பெனிக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவையைப் பெறமுடியும். இந்த உத்தியை நான் வேலைச் செய்த அமெரிக்க கம்பெனியும் செய்திருந்தது. இந்தியாவின் முதல் மூன்று முண்ணனி நிறுவனங்களில் இருந்தும் இந்த ப்ராஜக்ட்டில் ஆட்கள் இருந்தார்கள். ப்ராஜக்ட் மேனேஜர், டெக்னிக்கல் மேனேஜர், குரூப் ஹெட்(decision makers for that group) அனைவரும் அமெரிக்க கம்பெனியைச் சார்ந்த அமெரிக்காவில் செட்டில் ஆன இந்தியர்கள்.

நான் மேற்சொன்ன உத்தியை அமெரிக்க கம்பெனியில் வேலை செய்யும் இந்தியர்கள்தான் அவர்கள் க்ரூப்'பில் புகுத்தியிருந்தார்கள். நான் வேலை செய்த ப்ராஜக்ட் தவிர மேலும் சில ப்ராஜக்ட்களும் அவர்களுக்கு கீழே இருந்தது.குறைந்தது 60-80 பேர்கள் அந்த க்ரூப்பில் இருந்தார்கள். குறைந்த செலவில் 3 இந்திய சர்வீஸ் கம்பெனிகளுக்குள் போட்டியை ஏற்படுத்தி நிறைவான சேவையைப் பெற்று,அவர்கள் வேலைச் செய்யும் அமெரிக்க கம்பெனிக்கு லாபத்தை ஏற்படுத்துவதாக முதலில் நானும் பெருமைப்பட்டேன் அந்த இந்தியர்களின் சாமார்த்தியத்தை எண்ணி.

சிறிது மேலும் ஆராய்ந்தப்பிறகு வேறொரு உண்மை கண்ணில் பட்டது. மொத்தம் உள்ள 60-80 பேரில் அதிகப்பட்சம் ஒரு 30 சதவிகிதம்தான் இந்த இந்திய சர்வீஸ் கம்பெனி மக்கள்(எங்கள் கம்பெனியிலிருந்து நாங்கள் மூவர்தான்..) மீதி அனைவரும் அமெரிக்காவில் இயங்கும் 'கன்சல்டன்சி' கம்பெனி வழியாக 'காண்ட்ராக்ட்' தொழிலாளியாக இங்கு வந்து வேலை செய்பவர்கள்.அதிலும் 80%க்கு மேல் அனைவரும் தெலுங்குதேச மக்கள். இன்னொரு முக்கிய விஷயம்,நான் மேற்க்கூறிய மேனேஜர்கள் (decision makers) அனைவரும் தெலுங்கு மக்கள்.

காண்ட்ராக்ட் மக்களோடு பழகி அவர்களோடு நெருக்கமாக நட்புமுறையில் பழக ஆரம்பித்தப் பிறகு தெரிந்த மற்றொரு உண்மை, அந்த கன்சல்டென்ஸி கம்பெனியும் தெலுங்கு மக்களாலேயே நடத்தப்படுவதை அறிந்தேன். அப்போதுதான் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாக உணர்ந்தேன். எங்கள் கம்பெனி மேனேஜரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, 'ஏன் நம் கம்பெனிக்கு 3 பேரைத் தவிர வேறு யாரையும் சேர்க்க முடியவில்லை? என வினவினேன். 'decisions makers' வோடு அவர் தொடர்ந்துப் பேசுவதாகவும் ஆனால் மேலும் சிலரை சேர்க்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லையென்றும்,ஆனால் அந்த கன்சல்டென்ஸி கம்பெனிக்கே முன்னுரிமைக் கொடுப்பதாகவும் சொன்னார். ஆனால் அதேக் கம்பெனியின் வேறு க்ரூப்பில் உள்ள ப்ராஜக்ட்டில் எளிதில் நம் கம்பெனி மக்களை சேர்க்க அந்த க்ரூப்பின் ஹெட்(அமெரிக்கன்) அனுமதிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் 'காண்ட்ராக்ட்' மக்களில் என்வயதைச் சார்ந்த ஒருவர் எனக்கு நன்கு பழக்கம் ஆனார் மனம்விட்டு பேசும் அளவிற்கு. ஒருநாள் அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.'எப்படி நீ சார்ந்த கன்சல்டன்சி கம்பெனி ஆட்களை மட்டும் இந்த க்ரூப்பில் சுலபமாக சேர்த்துக்கொள்கிறார்கள்?' . நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ஒரு பெரிய உண்மையை வெளியிட்டார். அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக வரும் ஒவ்வொருவரின் 'பில்லிங் ரேட்டிலும்' ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், 'decision makers'க்கு கமிஷனாகப் போகிறது'. நான் ஆடிப்போனேன்.எப்படியென்றால், உதாரணத்திற்கு ஒரு காண்ட்ராக்டர்க்கு ஒரு மணி நேரத்திற்கு 100 டாலர் என அமெரிக்க கம்பெனியோடு(நம் decision makers மேனேஜர்களோடு) டீலை அந்த கன்சல்டன்ஸி கம்பெனிப் போடும். அதில் ஒரு 25 டாலர் அந்தக்கன்சல்டன்சி கம்பெனிக்குப் போகும்,ஒரு 20-25 டாலர்கள் கமிஷனாக 'நம் decision makers' மேனேஜர்கள் பங்குப் போட்டுக்கொள்வார்கள். மீதியுள்ள 50 டாலர் காண்ட்ராக்ட் எம்ப்ளாயிக்குப் போகும். இப்படியாக கணக்குப்போட்டால் (1 employee*25$*8hrs/day*21days/month) ஒரு 4200 டாலர் கமிஷனாகப் போகும்,அந்த க்ரூப்பில் 50-60 பேர்வரை அந்தக் கன்சல்டன்ஸி கம்பெனி வழியாக வேலைச் செய்பவர்கள். அப்படியென்றால் அந்த மேனெஜர்கள் மாதத்திற்க்கு அடிக்கும் கமிஷன் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால்,அந்த க்ரூப்பில் இந்தியர்கள் தவிர வேறு நாட்டவர் (அமெரிக்கன்,சைனீஸ், ஜப்பானியர்கள்) எவரும் தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. தப்பித்தவறிச் சேறுபவர்களும் சில வாரங்கள்/மாதங்களில் வேறு க்ரூப்பிற்கோ,கம்பெனிக்கோ மாறிவிடுவார்கள். நான் வேலைச் செய்தக் காலத்தில் ஒரு சைனீஸ் எங்கள் ப்ராஜக்ட்டில் சேர்ந்தார். அவருக்கு அவர் டெக்னிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கு சம்பந்தமே இல்லாத வேலையைக் கொடுத்தார்கள்.அவரும் வேறு வழியில்லாமல் செய்ய ஆரம்பித்தார். ஏதாவது சந்தேகம் என்றுக்கேட்டால் சரியான விளக்கத்தை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. சைனீஸ் என்பதால் அவரது ஆங்கிலமும் சிறப்பான முறையில் இல்லை.மேலும் எந்த மீட்டிங் என்றாலும் 'டெக்னிக்கல்' விஷயங்கள் தவிர பெருப்பாலும் தெலுங்கில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் ஆபிசில் இருக்கும்போது,ஏதோ ஹைதராபாத்தில் உள்ள கம்பெனியில் வேலைப் பார்ப்பதுப் போல சுற்றுசூழ்நிலை இருக்கும். ஆபிசை விட்டு வெளியில் வந்தால்தான் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை உணர்வீர்கள். இந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியாமல் மூன்றே மாதத்தில் அந்த சைனீஸ் அன்பர் 'கனடா'வில் வேலைவாங்கி சென்றுவிட்டார். சொன்னால் நம்பமாட்டீர்கள்,ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் இருந்த ஆபிஸ் கட்டிடத்தில் காவலாளிகளைத் தவிர மற்ற அனைவரும் இந்தியர்கள் மட்டும்தான். இந்தியர்கள் வேலைச் செய்யும் ப்ராஜக்ட் அனைவற்றையும் இந்த பில்டிங்'கு மாற்றிவிட்டு அமெர்க்கர் அனைவரும் வேறு பில்டிங் மாறிவிட்டார்கள். இன்றும் அந்த பில்டிங்கை(919) இந்தியன் பில்டிங்காகத்தான் வைத்திருப்பதாக நண்பர் கூறினார்.

மேலும் நானிருந்த டீமி'ல் பார்த்தால் அந்த மேனேஜர்களின் மனைவிகள்,அவர்களின் உறவினர்களும் அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக இங்கு வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனைவிகள் 'working from home' என்று பெரும்பாலும் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதாக கணக்குக் காட்டிவிட்டு சம்பாதித்துக் கொண்டிருநதார்கள்.அவர்கள் கணவர் மேனேஜர் என்பதால் பெரிய அளவிற்கு வேலையும் இருக்காது.


அந்த டீமில் நான் 2005 தொடக்கம்வரை இருந்தேன்.அதுவரை அவர்களின் வாழ்க்கை கொண்டாட்டமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு வேறு நகரத்திற்கு நான் சென்றுவிட்டேன். 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது இவர்களுக்கெல்லாம் பொருந்தாது' என்று அடிக்கடி எண்ணிக்கொள்வேன். ஆனால் அந்தப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும் என நிரூபித்த நிகழ்ச்சி, அந்த மேனேஜர்கள் யாரால் பலனடைந்தார்களோ அவர்களாலேயே நிகழ்த்தப்பட்டது 2006 ஆம் ஆண்டு தொடக்கத்திலே.....

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6

(தொடரும்....)

11 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஆர்வமூட்டும் தொடர் !

குடுகுடுப்பை said...

நல்லா எழுதறீங்க. உண்மையாகவும் எழுதறீங்க.

Anonymous said...

ஹலோ, எங்க அக்கவுன்ட் பத்தின சமாச்சாரம் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது? :)


என்ன எங்க அக்கவுன்ட்ல வெள்ளை, சீன, ஜப்பானிய அமெரிக்கர்களுக்கும் பங்கு போகுது.


//அப்படியென்றால் அந்த மேனெஜர்கள் மாதத்திற்க்கு அடிக்கும் கமிஷன் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
//

தமிழ்காரங்களும் அங்கங்கே செஞ்சாலும், மனவாடுகளை அடிச்சிக்க முடியாது.

இது எங்க போகுது தெரியுமா?
தெலுகு தேசத்துல படமெடுத்தும், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தும் வெள்ளையாக மாற்றப்படுகிறது.

- மூணுல ஒருத்தன்

யாத்ரீகன் said...

adapavigala !!!!! interesting..

Anonymous said...

your articles are very transparent,good work,sorry for writing in english,expecting more from you

Venkat-Dubai

Unknown said...

இன்று தான் உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன். வந்த வேகத்தில் IT தொடரைப் படித்துவிட்டேன், நல்லா எழுதுறிங்க. கொஞ்சம் கற்பனையெல்லாம் சேர்த்து நாவல் எழுத முயற்சி பண்ணா இரா.முருகனின் மூன்று விரல் நாவல் அளவுக்கு சரக்கும் இருக்கும்ன்னு தோணுது. கலக்குங்க.

காஞ்சனை said...

மிகவும் பொறுமையாகவும் தொடர்ச்சியாகவும் உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். ஐ.டி. துறையைப் பற்றிய உங்கள் கணிப்புகள் பெரும்பாலும் பொருந்தியே இருக்கின்றன. அனுபவத்தில் கண்டதும் உண்மை.(நான் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திலேயே!!)
ஐ.டி. துறை சார்ந்த பல்வேறு செய்திகளை எதிர்நோக்கியிருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

The consultant/freelancer concept has been in existence for over three to four decades. Also, what do you think all these companies in "India" do?? Infy, Wipro, IBM, TCS, .... all top 100 MNC's. Do you think they all develop Softwares in India? you would be surprised if you look into the kind of work they do

We have to look things differently, any business involves a profit and percentage for the reputation and experience. How are other businesses making money? every business involves some level of people work and based on that work the board earns money. Everything is business, govt, politics, educational institutions, hospitals,religions, etc etc.

அது சரி said...

நல்லா எழுதிறீங்க. சூப்பர்! அடுத்த பாகம் எப்ப?

ச.பிரேம்குமார் said...

அருமையான தொடர். வாழ்த்துக்கள் :)

ச.பிரேம்குமார் said...

:)