இது என்னுடைய 50வது பதிவு.....
முன்பே குறிப்பிட்டதுப்போல் தெலுங்குதேச மக்களுக்கு இணையாக அல்லது மிகக்குறைந்த சதவிகித வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் IT துறையில் கொடிநாட்டுபவர்கள் தமிழர்கள். மற்ற மாநில மக்களுக்கு இணையாக பெரியப்பொறுப்புகளில் சம அளவில் திறைமையாக செயல்படுகிறார்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிடும்போது,குழுமனப்பான்மை,தன் மாநில/இன மக்களை ஆதரிப்பது தமிழினத்தில் குறைவுதான். அதற்கான பலக்காரணங்களில் ஒரு காரணம், தான் தன் இனத்தை சார்ந்தவர்களை ஆதரிப்பது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற ஒரு எண்ணம். இது தமிழக மக்களுக்கே உள்ள பொதுவான குணமோ? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இந்தக்குழு மனப்பான்மை,ஆரம்பக்கட்டத்தில் 'fresher' ஆக இருக்கும்போது மிக அதிக அளவில் இருப்பதில்லை. காலேஜிலிருந்து நேரடியாக வேலைக்கு வந்திருப்பதால், அந்த சூழலையே இங்கும் தொடர்கிறார்கள்.ஆனால்,ஒரு டீம் லீட், டேமேஜர் என ஆகும்போது ஆட்டோமெடிக்'காக வேறு நிலைக்கு சென்றுவிருகிறார்கள்.
அதேப்போல் ஆங்கில மோகம் (அல்லது) தமிழில் இன்னோரு தமிழரோடு, அவர் தமிழர் என நன்றாகத்தெரிந்தும் பொதுவான விஷயங்களைக்கூட ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது நம் மக்களிடம் அதிகம் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட இருவர் ஒரே 'ப்ராஜக்ட்'ல் இருந்தால், சகஜமாகத் தமிழில் பேசக் கொஞ்சம் காலமாகிறது. மற்ற மொழிக்காரர்கள் இதில் பெரிதும் மாறுப்பட்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூக்காக ஒருக்கல்லூரிக்கு சென்றிருந்தேன். என்னுடன் ஒரு சிங்'கும் (சிங்கம் இல்லைங்க !!!) பேனலில் வந்திருந்தார். இரவு உணவு முடித்துவிட்டு காலேஜ் கேம்பஸ்'சை வலம் வந்தபோது, எதிரில் மூன்று பஞ்சாபிகள் வந்தார்கள். இரண்டுப் பெரியவர்கள், ஒரு மாணவன். தலையைப்பார்த்தவுடன் அவர்கள் மாநிலத்தவர் எனத்தெரிந்துக் கொண்டு, பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு சிறிது நேரம் பேசிப்பின்பு விடைப்பெற்றனர். அதன்பிறகு நான் நம்ப சிங்'கத்திடம் கேட்டேன்,என்ன உங்களுக்கு தெரிந்தவர்களா? என்று. அதற்கு அவர் சொன்னார்,இப்போதுதான் முதல்முறை சந்தித்தோம்.அவர்கள் அவர் பையனை இந்தக்கல்லூரியில் சேர்க்க வந்துள்ளார்கள்.அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்,எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னுடன் பேசுமாறு சொல்லியிருக்கிறேன்',எனச் சொன்னார். இப்படிப்பட்ட மனப்பான்மை நம்பவர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என நமக்கேத்தெரியும்.
நான் சிலவருடங்களுக்கு முன்பு டெவலப்பராக இருந்தபோது, புது டேமேஜராக தமிழர் ஒருவர் சேர்ந்தார்.அவருக்கு பேங்களூர் புதுசு அப்போது.ஒருமுறை ரிலீஸ் இருந்ததால் இரவுமுழுவதும் வேலை இருந்தது. டின்னருக்காக நானும் இன்னொரு தமிழ் நண்பரும் கேன் டீன் செல்லக் கிளம்பினோம். அப்போது அங்குவந்த டேமேஜரும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். வேறுவழியில்லாமல் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தோம். அவருக்கு அவர் தங்கும் ஏரியாவில் காய்கறிகள் எங்கு கிடைக்கும் என்று சரியாகத்தெரியவில்லை. அதைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அன்றுக்காலையில் அவர் ஏதோ ஒருக்காயை வாங்க வேண்டுமெனத் தேடியதாகவும்,கிடைக்கவில்லை எனக்கூறினார். அது என்னடா,பெங்களூரிலே கிடைக்காத காய் என ஆச்சர்யப்பட்டு அவரிடமேக் கேட்டோம். அவருக்கு அதற்கு சரியான ஆங்கில வார்த்தை சொல்லமுடியாமல்,இவ்வாறு சொன்னார்...' you know,its a long one.... green color' ... இது என்னடா..பச்சைப்பாம்பைச் சொல்றாரா... எங்காவது சீனாவிற்க்கு long-term assignment போய்ட்டு வந்துவிட்டாரா?" என நினைத்துக்கொண்டே....'கொஞசம் விளக்கமாகச் சொல்லுங்க'னு கேட்டோம்... அதற்கு..." you know,we can prepare sambar using that....imm.... hey... by one of the Bakiya raj movie, this vegitable became very popular' எனச் சொன்னார்... 'முருங்கைகாயா?' என தமிழிலேயேக் கேட்டோம்.... அப்போதும் 'உஜாலா'விற்கு மாறாமல்.. 'yaya...you are rite' னு வழிந்தார்... அப்போதிருந்து அவரை 'பாக்கியராஜ்'னு டீமி'ல் ஓட்டிக்கொண்டிருந்தோம்(அவருக்கு தெரியாமல்தான்...).
இந்த ஆங்கிலத்தில் பேசும் மோகம்(????) வடத்தமிழகத்திலிருந்து(சென்னையும்...அதைச்சார்ந்த மாவட்டங்களும்...)வந்து 'பொட்டித்தட்டும்' மக்களிடம்,கொஞ்சம் அதிகமாக இருக்கிறது... தென்தமிழகப் பாசக்கார பயல்களிடம் தமிழ் மொழிப்பாசம் கொஞ்சம் அதிகம்தான்....அதற்கு ஒரு முக்கியக்காரணம், பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளியில் படிக்கும்வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இருப்பதும், அதை ஒரு மொழியாகக் கற்றுப் பழகாமல், ஒரு subject' ஆக பாஸ் பண்ணால் போதுமென மக்'கடிப்பதே. அதேப்போல் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்றக்கட்டாயம்,பள்ளிக் கல்லூரி படிப்புகள் முடிக்கும்வரை ஏற்ப்படுவதில்லை. வேலைக்கு செல்லும்போதுதான் அதற்க்கான சந்தர்ப்பமே அமைகிறது.
நானே ஆங்கிலத்தில் தட்டுதடுமாறிப் பேச ஆரம்பித்தது 'பொட்டித்தட்டும்' தொழிலுக்கு வந்தப்பிறகுதான். ஆரம்பக்காலத்தில் இந்தக்குறையே,என்னை பிற மாநில மக்களோடு சகஜமாகப் பேசிப்பழகும் தன்னம்பிக்கையைக் கொடுக்கவில்லை. பிறகு ஜப்பான்,அமெரிக்கா என கட்டாயமாக ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய இடங்களில் சில வருடங்கள் பணிப்புரிந்தப் பிறகு சரியாகிவிட்டேன்.
வேலை விஷயத்தில்,கொடுத்த வேலையை கொஞ்சம் 'ப்ரஷர்' கொடுத்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிடும் திறமை நம் மக்களுக்கு உண்டு. மேனேஜ்மெண்ட்' வேலைகளைவிட, டெக்னிக்கல் பொறுப்புகளை சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.
முந்தையப்பதிவில், மலையாள/அழகான வட இந்தியப்பெண்களிடம் கடின வேலையைக் கொடுத்தால், குறிப்பிட்ட வெளையில் அந்த வேலை முடிக்கப்பட்டு விடும் என்றும், அந்தவேலையைச் செய்தவர்கள் யாரென்பது,அந்தப் பெண்ணோடு யார் அடுத்த நாள் 'லஞ்ச்'க்கு செல்கிறார்களோ அவர்களே எனச் சொல்லியிருந்தேன்....அப்படி கவனித்துப் பார்த்தால்...தமிழ் மக்களின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம் என்பது உண்மைதான்....( அலோ....யாருப்பா அது... நான் எத்தனை முறை அப்படி 'லஞ்ச்'க்கு போனேனு கேக்கறது???)
Disclaimer : ( இக்குழு மனப்பான்மை தமிழர்களுக்கு மிகக் குறைவு என சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, விவாதத்தில் பங்குக் கொண்ட மல்லு நண்பர் ஒருவர் ' மல்லுகளிடம் தான் அந்த மன்ப்பான்மை மிகமிகக் குறைவு எனக்கூறி அதற்க்கான சான்றுகளையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்'. இதான் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதா???? )
அடுத்தப் பதிவில் கன்னட மக்களின் பங்கைப்பற்றி எழுதலாமென இருக்கிறேன்....
(தொடரும்....)
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
7 comments:
நச்சு பதிவு
அடியேன் சொல்வது எல்லாம் உண்மை உண்மை .உண்மை..
வாழ்த்துக்கள்
தொடரவும்...!@!!!
நீங்கள் சொல்வது மாதிரி, தமிழர்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது, தமிழை விடுத்து ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதை நானும் அனுபவித்திருக்கிறேன். என் முதல் டமேஜரே தமிழர் தான். அவருடன் ஒரு காஃபி பிரேக்கில் பேசும் போது நான் தமிழிலே பேசத்தொடங, அவர் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தார். நம்புங்கள் அவருடன் ஒரு முறை கூட ஆஃபீஸில் தமிழில் பேசினது கிடையாது.
view you posted here shows how we are.
////நச்சு பதிவு
அடியேன் சொல்வது எல்லாம் உண்மை உண்மை .உண்மை..வாழ்த்துக்கள்/////
கருத்துக்கு நன்றி ப்ரபாகர்...
கருத்துக்களுக்கு நன்றி ரவி,விஜய்...
வட இந்தியப்பெண்கள்/ சேச்சிகள் மட்டுமல்ல, தமிழ்ப்பெண்களும் இத்தகைய குறுக்கு வழிகளை உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன். அதே சமயம் எத்தனை அழகாக இருந்தாலும் யார் உதவியையும் நாடாமால் கடுமையாக உழைக்கும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
Post a Comment