அந்த ரயில் ரசிகர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு,அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் அவர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். எனக்கு ஏற்ப்பட்ட கடுப்பில் அவரைக்கண்டுக்கொள்ளாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் என் காதுகள் பின்னால் நடப்பவற்றை 'பார்ட் டைம்'மாக கவனிக்க ஆரப்பித்தது.அந்த சில ரசிகர்களுக்குப்பிறகு வேறு யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. அந்த ஏசி கோச்சில் அமர்ந்திருந்த பலரும் புத்தகத்திலும்,லேப்டாப்பிலும்,மொபைலிலும்,தூக்கத்திலும் மூழ்கிவிட்டார்கள். அவ்வப்போது நடமாடிய கேண்டீன் ஆட்கள் அவரைப்பார்த்து, சார்..காபி சாப்ட்ரீங்களா,வடை,பஜ்ஜி சூடா இருக்கு சாப்ட்ரீங்களா.. என தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவருக்கு தூக்கம் வ்ரவில்லைப்போலும்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அதைத்தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். கையாலும்,வாயாலும் தாளம்போட்டு சில சேட்டைகள் செய்துக்காட்டிக் கொண்டிந்தார். அந்தக் குழந்தையும் அவரை மாமா என அழைத்து ஒட்டிக்கொண்டது.சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அலுத்துப்போய் தூங்கிவிட்டார். வண்டி ஜோலார்பேட்டையை நெருங்கியது.
நான் பிறந்து வளர்ந்த ஊர்,மேலும் என்னைப்பார்க்க என்னுடைய சகோதரர் வந்திருந்தார். வண்டி நின்றப்பின் சகோதரருடன் பேசிவிட்டு மீண்டும் என் கோச்சில் ஏறி வாசல்கதவருகே கம்பியைப்பிடித்து நின்றுக்கொண்டே,என்னுடைய 'ப்ளாஷ்பேக்கில்' மூழ்கிப்போனேன். ஏறக்குறைய 8 வருடங்கள் ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்தடத்தில் பயணித்திருக்கிறேன். 3 வருடங்கள் குடியாத்தம் பாலிடெக்னிக் படிப்புக்கும்,3 வருடங்கள் காட்பாடியில் என்ஜினியரிங் படிப்புக்கும்,மேலும் இரண்டு வருடங்களுக்கு அதே கல்லூரியில் வேலைபார்க்கவும் என, இவ்வழித்தடம்,என் வாழ்க்கைப்பாதையில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த பசுமை நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டுக்கிடந்த நேரத்தில்,திடிரென ஒருக்குரல் 'பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க சார்' என ஒலித்தது.யாரென திரும்பி பார்த்தால் டி.ஆர் நின்றுக்கொண்டிருந்தார்.
நானும் 'அதெல்லாம் ஓகே சார்.எனக்கு இதுப்போல படியில் நின்று பயணிப்பதில் 8 வருட அனுபவம் இருக்கு' என்றேன். அவரும் 'ஆமா சார்,நானும் காலேஜ் படித்த காலத்தில் பல வருடம் ரயிலில் பயணித்திருக்கிறேன்.அந்த பழைய அனுபவங்களை பார்க்கவே இப்போதும் விமானத்தில் சென்னைப்போகாமல், ரயிலில் வந்தேன்' என்றார். அவர் இவ்வாறு இயல்பாக பேச ஆரம்பிக்கவே, நானும் அவருடன் உரையாட ஆரம்பித்தேன்.என் பெயரையும்,மற்ற விவரங்களையும் விசாரித்தார்.அவர் 'ஒரு தலை காதல்' என ஒரு புது திரைப்படம் எடுக்க் இருப்பதாகவும், அதற்கான 'கதாநாயகி'த் தேர்வுக்கு பெங்களூர் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ' என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.
நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்த மற்ற சிலப்பயணிகளும் கோச்சிலிருந்து வெளியே வந்து கதவருகே இருக்கும் நடைப்பாதையில் நின்றுக்கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தார்கள்.அவர் புதிதாக எடுக்கப்போகும் படத்தைப்பற்றி பேச்சு திருப்பியது. ' சார்,இது மதுரைய சார்ந்த கல்லூரி மாணவர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் காதல் பற்றிய கதை' என ஆரம்பித்தார்.நான் உடனே 'என்னங்க சார்,நீங்களும் மதுரப்பக்கம் போறீங்க.ஏற்கனவே சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடிக்குழு, மதுரைசம்பவம்'னு வந்துட்டு இருக்கு' என்றேன். 'நான் இந்தக்கதைய 1 வருஷத்துக்கு முன்பே தயார் செய்துவிட்டேன்,மற்றசிலக்காரணங்களால் தாமதமாகிவிட்டது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரலில் வெளியிட்டு விடுவேன்' என கூறினார்.அந்த சமயத்தில் எங்களைச்சுற்றி 6-7 பேர் கூடிவிட்டிருந்தார்கள். வண்டியும் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தது.
காட்பாடியில் இறங்கவேண்டியவர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள்.அவர்களில் வயதான ஒரு தம்பதியினரும் இருந்தார்கள். அவர்களும் டி.ஆருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு,'உங்கள் பாட்டு என்றால் எங்களுக்கு நிறையப்பிடிக்கும்.எங்களுக்காக பாட முடியுமா என்றார்கள். வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது.அதைப்பார்த்த தம்பதியினர் வருத்தத்துடன், 'நீங்கள் பாடுவதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை' எனக்கூறினர். உடனே 'டி.ஆர்' அவர் பாக்கெட்டிலிருந்து ஒரு நாண்யத்தை எடுத்து,அருகிலிருந்த 'பாத்ரூம்' கதவில் தாளம் போட்டுக்கொண்டே 'வாடி என் மதுரக்காரக்கிளியே' எனத்தொடங்கும் பாடலை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.அடுத்த இரண்டு நிமிடங்களில் வண்டி காட்பாடி ரயில்நிலையத்தில் நின்றது. அந்த வயதான தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'இந்த நாளை என்றைக்கும் மறக்கமாட்டோம்' என் 'டி.ஆரிடம் விடைப்பெற்று சென்றார்கள்.
வண்டியும் அங்கிருந்து கிளம்பியது. எங்களிடம் திரும்பிய அவர் ' வயசானவங்க சார்,நான் பாடாம இருந்திருந்தா,அது ஒரு குறையா அவங்களுக்கு இருந்திருக்கும்,அதனாலதான் உடனே பாட ஆரம்பிச்சேன்.ஏதோ என்னால முடிஞ்சது' என்றார். அவர் பாடியப்பாடல் அவரின் புதுப்படமான 'ஒரு தலை காதல் ' படத்திற்காக கம்போஸ் செய்திருக்கிறார்.அதை மறுப்படியும் தாளத்துடன் பாட ஆரம்பித்தார். ராகமும்,வரிகளும் வழக்கமான 'டி.ஆர்' டச்'சுடன் அருமையாக இருந்தது.அவர் பாடுவதை என் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தேன்.அதைக்கவனித்த அவர்,பாடி முடித்தவுடன் என்னிடம் ' மோகன், வீடியோவை 'internet'லோ வேறு யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்' வேண்டுமானால் 'அம்மாடி..ஆத்தாடி' பாடுகிறேன்,அதை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். நானும் ஒன்னும் கவலப்படாதீங்க சார்,அப்படியெல்லாம் பண்ணிடமாட்டேன்' எனக்கூற,அவர் 'அம்மாடி...ஆத்தாடி' பாட்டை பாட ஆரம்பித்தார்.
அடுத்த இரண்டு மணிநேரம்.மேலும் பல பயணிகள் வந்து அவருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள். பாடச்சொல்லிக் கேட்கும் போதெல்லாம், தயங்காமல் தாளத்துடன் பலப்பாடல்களை பாடினார். அரட்டை அரங்கம், தமிழக அரசியல்,சினிமா என பலரும் கேட்டக் கேள்விகளுக்கு தயங்காமல் வெளிப்படையான பதில் அளித்தார். ஏதோ ஒரு கேள்விக்கு 'தமிழகத்தில் பெண்கள் டி.வி சீரியலுக்கும்,ஆண்கள் டாஸ்மாக்'குக்கும் அடிமையாகிவிட்டனர்' என்றார்.வண்டி பெரம்பூரை நெருங்கும்போது கூட்டம் கலைந்தது.
என்னிடம் வந்த அவர் ' நான் காலேஜ் படிக்கும்போது,ரயில் பாத்ரூம் கதவில் காசை வைத்து தாளம் போட்டு பாட்டு பாடுவது வழக்கம், இன்று கதவருகே யாரும் இல்லாதபோது வந்து காசை எடுத்து இரண்டு தட்டுதட்டி பழைய அனுபவத்தைப் பெறலாம் என நினைத்திருந்தேன்.ஆனா இப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்,பலப்பாடல்களை உங்கள் அனைவருக்கும் பாடிக்காட்டியது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மோகன்' எனக்கூறினார்.இதுநாள்வரை பத்திரிக்கை,படங்கள்,டிவி மூலமாக அவரைப்பற்றி நான் கொண்டிருந்த சில தவறான அபிப்ராயங்கள் அந்த ரயில்பாதையில் விழுந்து சிதைந்தது.
66 comments:
so 2 T.rajander in 1 train....train pavam :-)
அருமையான பதிவு நன்றி
நான் சீர்காழியிலும்,மாப்பிள்ளை டி.ஆர் மாயுரத்திலும் ரயிலில் ஏறுவது வழக்கம்:
ஒரே பாட்டு/கூத்து:
பின் நான் வேறு பாதையில் பயணிக்க...
ஆனாலும் என்ன?
நாங்கள் இருவருமே தமிழ் ஈழ விடுதலையை நேசிப்பவர்கள்
Lovely! :-) Even I felt different after reading about TR on this!
( Compared to his son, who makes a big issue of front seat in flights, that I take from Bangalore to Chennai.. few times that I have seen him, once with Rajinikanth too at old airport, before Sivaji movie )
அட்டகாசமான பதிவு. நன்றி.
பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில கிடைக்காத அனுபவம், பதிவர் உலகில் கிடைக்கும். அதற்கு இந்த பதிவு உதாரணம். நன்று!
அருமை!
too refreshing article abt a intresting personality..
thanks for sharing ur experience!
Nice one mohan. Was expecting it long time back :)
Keep writing.
Good one moms..! very Nice :) -- Arun
V.Sundar
Very Nice Post...
We should not assess people, by their appearance, but only by their behaviour: TR is a Rare personality, he is simple, humble,multi talented. I heard about him, coz he studied History in Annamalai University. You had an excellent opportunity to move with TR. TR is the best Example for "Self Made Man"
அட??...நானும் வியந்தேன்!
ஒரு நேரடி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மோஹன்,இதனைச் சாத்தியமாக்கிய டி.ஆர்.இருவருக்குமே HATS OFF.
மனிதர்கள் மேல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் மிகச் சிறந்த பதிவு.
நன்றி,மோஹன்.
மோகன் பதிவு சூப்பர்... அப்பிடியே சிம்பு நல்லவனா கெட்டவனா அப்பிடின்னு கொஞ்சம் கேட்டு எங்களுக்கு எல்லாம் சொல்லி இருக்கலாம்
சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர் பற்றி இன்றுதான் ஒரு இடுகை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் இடுகையில் மனம் மகிழ்கிறது.
80களில் அவரது பாடல் வரிகளை தெரியாத வாலிபர்களே இல்லை எனலாம்.ஒருதலை ராகம் போல ஒரு தலை காதல் வெற்றி பெற வாழ்த்துவோம்.
" நான் வழக்கமா எசி-லதான் போவேன் , இப்போ டிக்கெட் கிடைக்கல" என பந்தா செய்தவர்களை பார்த்ததுண்டு. டி.ஆர்-ன் எளிமையான போக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது.
அதுவும் அந்த வயதான தம்பதியர்க்கு பாடல் பாடியது மனிதத்தை காட்டுகின்றது
ரயில் பயணங்களில் படைத்தவர் , அன்று மற்றவற்கும் ரயில் அனுபவத்தை ஏற்படுத்தும் மனப்பான்மை கொண்டவர் எனும் போது வியப்போடுகிறது
ஒரு பொது மனிதனின் , ஊடக நிழலை கடந்து சென்று பார்த்து, அதை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
ganesh said...
so 2 T.rajander in 1 train....train pavam :-)
/////
excuse me sir...whoz dat 2nd TR??? ;)))
அருமை மோகன். உங்களுக்கும் ராஜேந்தருக்கும் நன்றி, முடிந்தால் அவருக்கு இந்தப்பதிவை அனுப்புங்கள். மிகவும் மகிழ்ச்சி அடைவார்.
கானா பிரபா said...
அருமையான பதிவு நன்றி
////
நன்றி கானா பிரபா...
ttpian said...
நான் சீர்காழியிலும்,மாப்பிள்ளை டி.ஆர் மாயுரத்திலும் ரயிலில் ஏறுவது வழக்கம்:
ஒரே பாட்டு/கூத்து:
பின் நான் வேறு பாதையில் பயணிக்க...
ஆனாலும் என்ன?
நாங்கள் இருவருமே தமிழ் ஈழ விடுதலையை நேசிப்பவர்கள்
////
ஓ...நீங்கள் அவர் நண்பரா...இப்போதும் தொடர்பில் இருப்பீர்கள் என நினைக்கிறேன்....
Ramesh said...
Lovely! :-) Even I felt different after reading about TR on this!
( Compared to his son, who makes a big issue of front seat in flights, that I take from Bangalore to Chennai.. few times that I have seen him, once with Rajinikanth too at old airport, before Sivaji movie )
////
thanks Ramesh...no comments abt Simbu ;)))...u met Rajini...thaz gr8
//என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.//
எங்க ஊர்க்காரருன்னு சொல்லிக்கிறதுல பெருமைதான் :)
10 வருடங்களுக்கு முன்பு ஊர் திருவிழாக்களுக்கு டி.ஆரின் விசிட் கண்டிப்பாக இருக்கும் அந்த சமயங்களில் அவரின் மற்றவர்களிடத்திலான பழகும் பேசும் விதங்கள் இன்றளவுக்கும் அவரை ஒரு சிறந்த மனிதராகவே எனக்கு அடையாளம் காட்டியிருக்கிறது!
நன்றி !
சிறந்த பதிவு. பல்கலை வித்தகர் டி. ஆர் அவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த நபர். நன்றி
Wonderful experience with an intersting personality. Great ! Mohan.
-Toto
www.pixmonk.com
For some reason the media is always biased towards him.
Your article made me change my opinion about him, Thx.
டி.ராஜேந்தரை பற்றிய புரிதல் எனக்கும் கிடைத்தது. நன்றி மோகன்.
really nice feel of journey to me...recalling the last words u said in tat blog..really true words..rock on man....(changing the opinions abt T.R)
இதுவே வேறு யாரவது இருந்தால் முகம் சுளித்து இருப்பார்கள்,
இதற்கே டி.ஆரை பாராட்டலாம்....
http://no-bribe.blogspot.com/
Really a very good article!
Even my view also changed.
Good
selvakkumar said...
பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில கிடைக்காத அனுபவம், பதிவர் உலகில் கிடைக்கும். அதற்கு இந்த பதிவு உதாரணம். நன்று!
///
நன்றி செல்வா உங்கள் கருத்துக்கு,,,,
Karthikeyan G said...
too refreshing article abt a intresting personality..
thanks for sharing ur experience!
///நன்றி கார்த்தி,பொட்டி,சுதாகர்
ஷண்முகப்ரியன் said...
ஒரு நேரடி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மோஹன்,இதனைச் சாத்தியமாக்கிய டி.ஆர்.இருவருக்குமே HATS OFF.
மனிதர்கள் மேல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் மிகச் சிறந்த பதிவு.
நன்றி,மோஹன்.
//உங்கள் தொடரும் ஆதரவுக்கு நன்றி.உங்களைப்போன்ற அனுபவம் உள்ளவர்களின் கருத்துக்கள் மேலும் பலப்பதிவுகளை எழுத தூண்டுகோலாக இருக்கிறது...நன்றி....
looks like TR is a nice person afterall...but why does he do 'clowny' things during interviews..? we'll never know. very good write up mohan!
டி ஆர் படத்தின் பெயரையே வைத்து விட்டிர்களே அற்புதம்
ராமநாதன் said...
மோகன் பதிவு சூப்பர்... அப்பிடியே சிம்பு நல்லவனா கெட்டவனா அப்பிடின்னு கொஞ்சம் கேட்டு எங்களுக்கு எல்லாம் சொல்லி இருக்கலாம்
//////
நல்ல கேள்வி...அடுத்தமுறை சந்திக்க முடிந்தால் கேட்கிறேன்....
நிலாரசிகன் said...
சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர் பற்றி இன்றுதான் ஒரு இடுகை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் இடுகையில் மனம் மகிழ்கிறது.
80களில் அவரது பாடல் வரிகளை தெரியாத வாலிபர்களே இல்லை எனலாம்.ஒருதலை ராகம் போல ஒரு தலை காதல் வெற்றி பெற வாழ்த்துவோம்.
/////
உங்கள் கருத்துக்கு நன்றி நிலாரசிகன்...
பாடல் பாடியது மனிதத்தை காட்டுகின்றது
ரயில் பயணங்களில் படைத்தவர் , அன்று மற்றவற்கும் ரயில் அனுபவத்தை ஏற்படுத்தும் மனப்பான்மை கொண்டவர் எனும் போது வியப்போடுகிறது
ஒரு பொது மனிதனின் , ஊடக நிழலை கடந்து சென்று பார்த்து, அதை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
/////
உண்மைதான்..அந்த நிகழ்ச்சிதான்,கண்டிப்பாக இதைப்பற்றி எழுத வேண்டும் என்று என்னை தூண்டியது
Nice expereience...very positive reporting /writtting.
It is good to see that blogging helps in changing bad opinions about people. Very nice post. Guess TR is a refreshing personality, very simple and kind. Thanks for sharing your experience.
ஆயில்யன் said...
10 வருடங்களுக்கு முன்பு ஊர் திருவிழாக்களுக்கு டி.ஆரின் விசிட் கண்டிப்பாக இருக்கும் அந்த சமயங்களில் அவரின் மற்றவர்களிடத்திலான பழகும் பேசும் விதங்கள் இன்றளவுக்கும் அவரை ஒரு சிறந்த மனிதராகவே எனக்கு அடையாளம் காட்டியிருக்கிறது!
நன்றி !
//////
உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஆயில்யன்
bxbybz said...
சிறந்த பதிவு. பல்கலை வித்தகர் டி. ஆர் அவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த நபர். நன்றி
////
நன்று உங்கள் பாராட்டுக்கு
Moulee said...
For some reason the media is always biased towards him.
Your article made me change my opinion about him, Thx.
//////
you are right Moulee...its just my experience with him for 3 hrs..but endup seeing goodside of him...
Thanks for the post! My views of TR has changed after reading your post. Simplicity and down-to-earth character can only be seen in those who had come up the life's ladder on their own. TR has proven himself for that!
ஜெட்லி said...
இதுவே வேறு யாரவது இருந்தால் முகம் சுளித்து இருப்பார்கள்,
இதற்கே டி.ஆரை பாராட்டலா
/////
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெட்லி...
வெண்ணிற இரவுகள்....! said...
டி ஆர் படத்தின் பெயரையே வைத்து விட்டிர்களே அற்புதம்
...///
நன்றி 'வெண்ணிற இரவுகள்...
Ananya Mahadevan said...
It is good to see that blogging helps in changing bad opinions about people. Very nice post. Guess TR is a refreshing personality, very simple and kind. Thanks for sharing your experience.
////
நன்றி அனன்யா...
நிலவொளி said...
Thanks for the post! My views of TR has changed after reading your post. Simplicity and down-to-earth character can only be seen in those who had come up the life's ladder on their own. TR has proven himself for that!
/////
நன்றி நிலவொளி....
///V.Sundar
Very Nice Post...
We should not assess people, by their appearance, but only by their behaviour: TR is a Rare personality, he is simple, humble,multi talented. I heard about him, coz he studied History in Annamalai University. You had an excellent opportunity to move with TR. TR is the best Example for "Self Made Man"/////
well said sundar..
really a very nice article
Mohan
Nice blog, keep it up.
Selvakumar said...
Mohan
Nice blog, keep it up.
/////
Thanks buddy...
என் வலைத்தளத்தில் உங்கள் வலைப்பதிவைப்பற்றி எழுதி இருக்கிறேன்
மனம் ஒரு குரங்கு - 7
http://ananyathinks.blogspot.com
Ananya Mahadevan said...
என் வலைத்தளத்தில் உங்கள் வலைப்பதிவைப்பற்றி எழுதி இருக்கிறேன்
மனம் ஒரு குரங்கு - 7
http://ananyathinks.blogspot.com
//////////
Thanks Ananya...I cudn't write a comment in ur blog..can u check
No, Mohan, I got it. It came to me for moderation. check now. Thanks for dropping by.
best regards
Nice Article Mohan. Keep up the good work. I like your writings. Keep going.
Thanks,
Purush.K (Vec97)
Thatti paartheen kottankuchi !! itharkku artham purinthathu. Puriyavaithha Mohanukku nanri
Very nice post Mohan!!
பொதுவா பிரபலங்கள் என்றாலே காததூரம் ஓடுவதற்கு தயாராக இருப்பேன். அதுவும் சினிமா ஆசாமிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் உங்களுடைய பதிவு என்னுடைய எண்ணம் தவறோ என்று யோசிக்க வைக்கிறது.
hello... hapi blogging... have a nice day! just visiting here....
நல்ல பதிவுங்க.
நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே பேர்.. அது மட்டுமல்ல அரட்டை அரங்கம் தயாரிக்கும் நபர் பேரும் மோகன் குமார் அவர் என் நண்பன் தான்.
முடியும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்து பாருங்க
Often we like or dislike someone without understanding the person.And our first impression could be wrong!
Nice one...keep blogging and keep rocking!
Interesting read...Your post changed my opinion too, about TR. Never thought he would be such a down-to-earth & humble personality. And writing about 3 hrs experience interestingly, in 30 lines is amazing! Keep posting.
Late comment, but ....
Wonderful experience ; excellent narration mohan , keep writing , very rarely we use Tamil - to write nowadays
Post a Comment