பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
தகவல்கள் போதுமா? நான் சொல்லவந்த விஷயம் என்னன்னா,மேலே சொன்னவைகள் நாம் அனைவரும் பெரும்பான்மையாக அறிந்ததுதான்.ஆனால் நேற்று ஒரு குடும்ப விழாவில் கலந்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினத்திலிருந்து 15கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் 'பண்ணந்தூர்' என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன்.அந்த ஊரில் அதிசயப்பனை மரம் இருப்பதாக்ச் சொல்லி அதைக்காண அழைத்துச் சென்றார்கள்.
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு:
பதனீர் - 180 லிட்டர்
பனை வெல்லம் - 25 கி
பனஞ்சீனி - 16 கி
தும்பு - 11.4 கி
ஈக்கு - 2.25 கி
விறகு - 10 கி
ஓலை - 10 கி
நார் - 20 கி.
பதனீர் - 180 லிட்டர்
பனை வெல்லம் - 25 கி
பனஞ்சீனி - 16 கி
தும்பு - 11.4 கி
ஈக்கு - 2.25 கி
விறகு - 10 கி
ஓலை - 10 கி
நார் - 20 கி.
தகவல்கள் போதுமா? நான் சொல்லவந்த விஷயம் என்னன்னா,மேலே சொன்னவைகள் நாம் அனைவரும் பெரும்பான்மையாக அறிந்ததுதான்.ஆனால் நேற்று ஒரு குடும்ப விழாவில் கலந்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினத்திலிருந்து 15கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் 'பண்ணந்தூர்' என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன்.அந்த ஊரில் அதிசயப்பனை மரம் இருப்பதாக்ச் சொல்லி அதைக்காண அழைத்துச் சென்றார்கள்.
அங்கே இரண்டு பனைமரங்கள் நடப்பட்டு பலக்கிளைகள் பரப்பி ஆலமரம்போல பரந்து விரிந்துக்காட்சி தந்தது.பலவருடங்களுக்கு முன்பு மலேசியா சென்ற இந்த ஊர்க்காரர் ஒருவர்,அங்கிருந்துக் கொண்டுவந்து நட்ட பல பனைச்செடிகளில் இரண்டுமட்டும் வேறூன்றி வளர்ந்து இன்று பிரமாண்ட மரமாகாக் காட்சிதருகிறது.
நான் கண்ட அதிசயக்காட்சியை வலையுலக தமிழ் மக்களும் கண்டுக்களிக்க க்ளிக்'கியக் காட்சிகள் புகைப்படங்களாக மேலே.
12 comments:
அட!
பகிர்ந்தமைக்கு நன்றி.இது போல் ஒன்றை இதுவரை பார்த்ததில்லை.
hi friend it is a Very Nice
இவை இங்கு இலங்கையிலும் இருக்கின்றன, மட்டக்களப்பிலே வெபர் அல்லது முற்றவெளி மைதானத்திற்கு அருகில் இவை அதிகமாக உள்ளன . இவற்றை அங்கு சீமைப்பனை என்று அழைப்பார்கள்.
ஆனால் இவற்றின் பழங்களை மற்றைய பனம்பழம் போல உண்ணுவதை நான் காணவில்லை.
இதுபற்றி சொமீதரனின் பதிவிலும் காணலாம்
http://somee.blogspot.com/2009/03/blog-post.html
நான் அறிந்தவரை நீங்கள் இட்ட இந்தப் படத்தில் உள்ளவை; நம் பனை போன்றவை அல்ல!
பால்ம்palm எனும் வகையை சேர்ந்தவை; தென்கிழக்காசியாவில் அதிகம் உள்ளவை.இதன் விதையில் இருந்து எண்ணை எடுக்கப்படுகிறது. palm oil. இப்படிக் கிளை
யிட்டு வளரும் ஆனால் நம் பனம்பழம் தராது. பதனீரும் தராது.
நிற்க..;நம் பனையினத்தில் மிக அபூர்வமாக கிளைப் பனை இருந்துள்ளது; ஈழத்தில் நெடுந்தீவில் இருந்த 4 கிளையுடன் கூடிய பனையின் படத்தை அத்தீவைச் சேர்ந்த என் நண்பன் காட்டி சுமார் 45 வருடங்களுக்கு முன் பார்த்துள்ளேன். அத்துடன் யாழ்பாணத்தில் மண்கும்மான் எனும் கிராமத்தில் ஒன்று
ஒருந்ததாக என் உறவினர் கூறக்கேட்டுள்ளேன்.
நீங்கள் இட்ட படத்தில் உள்ளது போன்ற palm ;ஈழத்தில் வடமாராட்சிப் பகுதியில் பருத்தித்துறையில்
மலாயாவில் இருந்து கொண்டுவந்த விதையில் வளர்ந்த கிளையுடன் கூடிய palm உள்ளது குறிப்பிடத்தக்கது. பல நண்பர்கள் கூறினார்கள்.
நமது பனையில் கிடைப்பதுபோல் மிக அதிக பயன்பாடு இப்பனை இனத்திலில்லை.
இப்போதும; இலங்கையில் சிலாபத்துக்கு அருகில் உள்ள கற்பிட்டி எனும் நகரில் ஒரு கிளையுள்ள செவ்விளநீர்த் தென்னைமரம் உள்ளது. என் பதிவில் இட்டேன். படத்தைப் பார்க்கவும்.
http://paris-johan.blogspot.com/2007/08/blog-post.html
Surprising!
What a change & thanks for the info!
Now this compels me to correlate with something.
What happens when you see something unexpected or as per your knowledge something not suppossed to happen (like a palm tree which is not mono branching)
I happen to read a book called "The Black Swan" some time back ( before it was hyped up / up marketed) recently.
Its a scientific philosophy book ( oh no. dont worry not scientology crap).
Mohan, you should pick up this book (and possibly write a review on it :)
Thanks for sharing.
As some said in comments, even if its palm tree i never saw like this... Looks time for google :)
//அட!
பகிர்ந்தமைக்கு நன்றி.இது போல் ஒன்றை இதுவரை பார்த்ததில்லை./////
வருகைக்கு நன்றி குமார்...
//hi friend it is a Very Nice//
நன்றி நண்பர் சிவா
///இவை இங்கு இலங்கையிலும் இருக்கின்றன, மட்டக்களப்பிலே வெபர் அல்லது முற்றவெளி மைதானத்திற்கு அருகில் இவை அதிகமாக உள்ளன . இவற்றை அங்கு சீமைப்பனை என்று அழைப்பார்கள்.
ஆனால் இவற்றின் பழங்களை மற்றைய பனம்பழம் போல உண்ணுவதை நான் காணவில்லை.
இதுபற்றி சொமீதரனின் பதிவிலும் காணலாம்
http://somee.blogspot.com/2009/03/blog-post.html///
பழம் உண்ணமுடியுமா? பனங்காய் வருகிறதா என தெரியவில்லை.அடுத்தமுறை செல்லும்போது விசாரிக்கிறேன்..
//நான் அறிந்தவரை நீங்கள் இட்ட இந்தப் படத்தில் உள்ளவை; நம் பனை போன்றவை அல்ல!
பால்ம்palm எனும் வகையை சேர்ந்தவை; தென்கிழக்காசியாவில் அதிகம் உள்ளவை.///
தகவலுக்கு நன்றி யோகன்(ஜோகன்???)
//I happen to read a book called "The Black Swan" some time back ( before it was hyped up / up marketed) recently.
Its a scientific philosophy book ( oh no. dont worry not scientology crap).
Mohan, you should pick up this book (and possibly write a review on it :)
///
sure siva..will read dat book and post my review ;))
//Thanks for sharing.
As some said in comments, even if its palm tree i never saw like this... Looks time for google :)///
No need to google man..I'll take u thr
Post a Comment