Search This Blog

August 22, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 2

முதல் பதிவிற்கு இங்கே போகவும்...

நேற்றைய பதிவில் ஜாதிவித்தியாசம் என்பது மற்றதுறைகளோடு ஒப்பிடும்போது, IT துறையில் மிகவும் குறைந்தபட்சமே உள்ளது என முடித்திருந்தேன்.அந்த குறைந்தப்பட்சமும் வெளிப்படையாக தெரிவது 'அவாளி'டம் மட்டும்தான். அதனாலான பாதிப்புகள் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,IT துறையில் மிகவும் குறைவுதான்.ஆகவே அதைப்பற்றிய விவாதங்களை தொடர விரும்பவில்லை.

பின்னூட்டமிட்ட நண்பர்கள் மாநிலவாரியான அணுகுமுறை பெருமளவில் இருப்பதாக சொன்னார்கள்..உண்மைதான்...நானும் அதைப்பற்றிதான் எழுதப்போகிறேன்.மேலும் சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணிப்புரிந்தபோது,அங்குள்ள கம்பெனிகளில் பணிபுரியும் நம்தேச மக்கள், அவர்களின் இன உணர்வையும்,மாநில பாசத்தையும்,குறுக்குவழியில் பணம் பார்க்கும் திறமையையை பற்றியும் எழுதலாம் என இருக்கிறேன்.

வடக்கு,தெற்கு என பாகுபடுத்துவது,இந்திய அரசியல் முதல்கொண்டு,அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறக்கும் அணுகுமுறை. அதற்கு IT துறையும் விதிவிலக்கல்ல.ஆனால் ஒட்டு மொத்த IT மக்கள்தொகையில் வடக்கத்திய மாநிலங்களிலிருந்து பணிப்புரிவோரின் சதவிகிதம்,தென்மாநில மக்களின் சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது,மிகவும் குறைவுதான்.

அக்குறைந்த வடக்கத்திய மக்களில் கோலோச்சுவது 'பெங்காலி' மக்கள்.பேச்சில் அவர்களை அடித்துக்கொள்ள முடியாது.வெறும் கையில் முழம் போடுவதில் திறைமைசாலிகள். மற்றவர்களை எப்படிப் பயன்படுத்தினால் தான் முன்னேறமுடியும் என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார்கள். எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமாக 'ரிஸ்க்' எடுப்பது அவர்களுக்கு
'ரஸ்க்(ரசகுல்லா)' சாப்பிடுவதுபோல...இதில் அதிசயம் என்னவென்றால்,பெரும்பாலான சமயங்களில் அதில் அவர்கள் வெற்றியடைந்து விடுவதுதான்.அதற்கு காரணம்,முன்பே குறிப்பிட்டதுபோல,மடுவையும்,மலையாக காட்டும் அவர்களின் பேசும்திறமைதான்.

நான் 'பொட்டிதட்டும்' கம்பெனியில், சிறிதுகாலம் ஒரு 'பெங்காலி' டேமேஜருடன் வெலை செய்துக்கொண்டிருந்தேன். அவருடைய IT அறிவு எப்படிப்பட்டது என்றால், testing team அவரிடம் வந்து black box,white box testing செய்யவேண்டும் என்று சொன்னால், அந்த இரண்டு box'ம் வாங்குவதற்கான செலவு 'estmation sheet'ல் சேர்த்துவிட்டாயா? என கேட்டு அவர்களின் ஏழாவதறிவை சோதிப்பார்.ஒருமுறை 'SDLC process'ஐ optimize செய்யப்போகிறேன் என களத்தில் குதித்து, அதைப்பற்றிய விவாதத்தின்போது, sequence, class,activity diagram'போன்ற design phase' வேலைகளையெல்லாம் 'requirement phase'லயே செய்யனும்னு ஒரு பெரிய புரட்சியே பண்ணினார்.இதுபோல இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகள்.

ஆனால் இம்மாதிரியான 'அதிமேதாவிதனமெல்லாம்' தனக்கு கீழே வேலைச் செய்பவர்களிடம்தான். அவருடைய பாஸ்'க்கோ அல்லது கஸ்டமர்கான பிரசண்டேசனுக்கோ, அதற்கு தேவையான விவரங்களை அவருக்கு கீழே வேலைப்பார்க்கும் நம்மைப்போன்ற பேசாமடந்தைகள் தலையில கட்டி,அவர்களிடமே விவரங்களை கேட்டுக்கொள்வார்.மீட்டிங் செல்லும்போதும்,நம்மை துணைக்கு அழைத்துக்கொண்டு, நம்மிடம் தெரிந்துக்கொண்ட விவரங்களை,யாருக்கும் எளிதில் புரிந்துவிடாதவண்ணம் எடுத்துவிட ஆரம்பித்தாரென்றால், 'என்னமா பேசுரான்...இவன் பேசுரது நம்பளுக்கு ஒன்னும் புரியமாட்டங்குதே...நமக்குதான் டெக்னாலஜி டச் விட்டுப்போச்சோ...இவன் ரொம்...ப புத்திசாலிடா..' என கேட்பவர்களின் கான்பிடன்ஸ் லெவலையே காலிப்பண்ணிவிடுவார்.இதிலும் மயங்காத சில புத்திசாலி கஸ்டமர்கள்,அவர் சொல்வதைப் புரிந்துக்கொண்டு சில ஆழமான கேள்விகள் கேட்கும்போது, 'இதெல்லாம் ஒரு கேள்வி,இதற்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும்,என்கீழ் வேலை செய்பவனே பதில் சொல்லிவிடுவான்' என ஒரு நக்கல் புன்னகையுடன் நம்பக்கம் கைக்காட்டி விடுவார்.இப்படிப்பட்ட திருவிளையாடல்களால், சில ஆண்டுகளுக்கு முன்பு 'டேமேஜராக' சேர்ந்தவர் இப்போது 'குரூப் ஹெட்'டாக உயர்ந்துவிட்டார்.very high growth rate....

அவர்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களைக் கைத்தூக்கிவிடுவதிலும் வல்லவர்கள்.அதேபோல் நான் புடித்த முயலுக்கு இரண்டரைக்கால்தான் என சாதிப்பதிலும்,அதை மறுப்பவர்களை வன்மம் கொண்டு சரியான நெரத்தில் மட்டம் தட்டுவதிலும் மன்னர்கள்.சில நேரங்களில் அவர்கள் 'ஈகோவே' அவர்களை படுகுழியிலும் தள்ளியிருக்கிறது.

மொத்தத்தில்,முன்பே குறிப்பிட்டதுபோல 'வெறும் கையில் முழம்' போடும் பேச்சாற்றல், விளைவைப் பற்றிக்கவலைப் படாமல் துணிந்து 'ரிஸ்க்' எடுப்பது,'ஈகோ' என கலந்து செய்த கலவைதான்...பெங்காலிகள்....

பெங்காலிகள் தவிர இதர வடமாநில IT மக்களோடு நான் வேலை செய்தது மிகவும் குறைவு.ஆகவே 'கொல்கத்தா'விலிருந்து 'ப்ளைட்' பிடித்து நேராக 'USA'க்கு அடுத்த பதிவில் இறங்குகிறேன்....

உங்கள் கவனத்திற்கு... IT'ல் USA என்றால் 'United state of Andhra pradesh'

அடுத்தப்பதிவில் USA'ல உங்களை சந்திக்கிறேன்..........

முதல் பதிவிற்கு
இங்கே போகவும்...

(தொடரும்)

24 comments:

Anonymous said...

த.தொ.(தகவல் தொழிற்நுட்பம்) துறை மட்டுமல் இயல்பாகவே வங்காளிகள் இந்தியாவிலேயே தாங்கள்தான் மேதாவிகள் என்ற எண்ணம் உள்ளவர்கள். இவர்களைப்போலவே சிந்தனை உள்ளவர்கள் மலையாளிகள்.

மருதநாயகம் said...

SAP = State of Andhra Pradesh என்பது தெரியுமா

Anonymous said...

MMM... very interesting to read. Thank you for sharing your experience with others.

-Kalaiyarasan
http://kalaiy.blogspot.com

Thekkikattan|தெகா said...

இதிலே இவ்வளவு இருக்கா :-))?? எழுதுங்க, எழுதுங்க, படிச்சு தெரிஞ்சுப்போம்.

ரவி said...

பணியிடங்களில் சாதீயம் என்பதை தகவல் தொழில்நுட்பத்துறையோடு மட்டும் லிமிட் செய்துகொள்வது மிகவும் தட்டையான சிந்தனையாகும்...(நேரோ மைண்டர் / குறுகிய பார்வையர்)

ஐடியல்லாத பல்வேறு துறைகளில் - டெக்ஸ்டைல்ஸ் / கண்ஸ்ட்ரக்ஷன் என்று எல்லா துறைகளிலும் சூப்பர்வைசர்களின் சாதீயப்பாசம் எவ்வளவு கொடுமைகளை எளியோர்க்கு செய்கிறது....

கயல்விழி said...

எனக்கு யார் பெங்காலி, யார் குஜராத்தி என்றெல்லாம் தெரியாது, தமிழ் முகமாக தெரிந்தால் பேச்சு கொடுப்பதோடு சரி.

கயல்விழி said...

//testing team அவரிடம் வந்து black box,white box testing செய்யவேண்டும் என்று சொன்னால், அந்த இரண்டு box'ம் வாங்குவதற்கான செலவு 'estmation sheet'ல் சேர்த்துவிட்டாயா? //

LOL!!

நல்ல வேளை க்ரீன் பாக்ஸ் கேட்காமல் விட்டாரே.

aravindaan said...

first i will check how many indians are there in the team. if two three ok.. more then i won't accept that offer.. south north politics, i left my previous company because of this.

SurveySan said...

//அவர்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களைக் கைத்தூக்கிவிடுவதிலும் வல்லவர்கள்///

இது எல்லா மாநிலத்தாரும் பண்றதுதான். வாய்ப்பிருந்தால், தன் மொழி பேசுபவனையே எடுத்துக் கொள்வது, பெரிய குற்றமில்லை.
வெறும் பெங்காளிக்காரன் மட்டும்தான்

இதை பண்றான்னு சொல்ர மாதிரி இருக்கு. அது தப்பு.

ஆணி பிடுங்குவதிலிருந்து, மேனேஜராய், மேலாள்ராய், க்ரூப் ஹெட்டாய், ரீஜியன் ஹெட்டாய் ஆவதர்கு, திறமை வேணும்.
உங்க டேமேஜரக்கு கண்டிப்பா அது இருந்திருக்கும். அதான் மேலே போயிருப்பாரு.

பேச்சு முக்கியம், ஏணி ஏர.

Unknown said...

/உங்கள் கவனத்திற்கு... IT'ல் USA என்றால் 'United state of Andhra pradesh' /

hahaha...

very interesting...

pls write more..

Thanks
Mastan

மோகன் said...

///
த.தொ.(தகவல் தொழிற்நுட்பம்) துறைமைட்டுமல் இயல்பாகவே வங்காளிகள் இந்தியாவிலேயே தாங்கள்தான் மேதாவிகள் என்ற எண்ணம் உள்ளவர்கள். இவர்களைப்போலவே சிந்தனை உள்ளவர்கள் மலையாளிகள்.
///
வருகைக்கு நன்றி கரிகாலன்...நீங்கள் சொல்வது உண்மைதான்...மலையாளிகள் பற்றியும் எழுதப்போகிறேன்..படித்துவிட்டு சொல்லுங்கள்...

மோகன் said...

///
SAP = State of Andhra Pradesh என்பது தெரியுமா////
இதுவேறா?? இன்னும் என்னவெல்லாம் மாத்திவைச்சிருக்காங்க???

மோகன் said...

//
MMM... very interesting to read. Thank you for sharing your experience with others. ///
வருகைக்கு நன்றி கலைஅரசன்

மோகன் said...

//
இதிலே இவ்வளவு இருக்கா :-))?? எழுதுங்க, எழுதுங்க, படிச்சு தெரிஞ்சுப்போம்.///
இன்னும் ரொம்ப இருக்கு தெகா..தொடர்ந்து படியுங்கள்...

மோகன் said...

//பணியிடங்களில் சாதீயம் என்பதை தகவல் தொழில்நுட்பத்துறையோடு மட்டும் லிமிட் செய்துகொள்வது மிகவும் தட்டையான சிந்தனையாகும்...(நேரோ மைண்டர் / குறுகிய பார்வையர்)

ஐடியல்லாத பல்வேறு துறைகளில் - டெக்ஸ்டைல்ஸ் / கண்ஸ்ட்ரக்ஷன் என்று எல்லா துறைகளிலும் சூப்பர்வைசர்களின் சாதீயப்பாசம் எவ்வளவு கொடுமைகளை எளியோர்க்கு செய்கிறது....///
'பொட்டிதட்டும்' தொழில் எங்கள் முழுநேரத்தையும் விழுங்கிவிடுகிறது ரவி..மேலும் எங்கள் துறையில் நடப்பதைதான் என்னால் அலசமுடியும்..மற்றதுறைகளில் இருப்போர் அவர்கள் அனுபவத்தையும் இதுபோல் பகிர்ந்துக்கொண்டால்,நாங்களும் எங்கள் சிந்தனையையும்,பார்வையையும் விரிவுபடுத்திக்கொள்கிறோம்...

மோகன் said...

/
LOL!!

நல்ல வேளை க்ரீன் பாக்ஸ் கேட்காமல் விட்டாரே.
//
வருகைக்கு நன்றி கயல்...

மோகன் said...

//first i will check how many indians are there in the team. if two three ok.. more then i won't accept that offer.. south north politics, i left my previoரிக்us company because of this.///
வருகைக்கு நன்றி அரவிந்தன்..ஓ..பெரும்பாலோர் போல நீங்களும் பாதிக்கப்படைந்திருக்கிறீர்களா.....

மோகன் said...

very interesting...

pls write more..

Thanks
Mastan///
வருகைக்கு நன்றி மஸ்தான்....

மோகன் said...

//பேச்சு முக்கியம், ஏணி ஏர.///
உண்மைதான் சர்வேசன்...IT துறையில் பேசமட்டும் தெரிந்தவர்கள் நன்றாக முன்னேறலாம்...

ச.பிரேம்குமார் said...

மோகன், எல்லா துறையிலும் அப்படித்தான், எல்லா மாநிலத்தாரும் அப்படித்தான் :)

//.IT துறையில் பேசமட்டும் தெரிந்தவர்கள் நன்றாக முன்னேறலாம்...//

இதுவும் பொதுவான ஒரு விதி தான். எங்குமே HARDWORK ஐ விடவும் SMART WORK ற்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.

பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களை விடவும் குற்றம் கண்டுப்பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் தான் அதிகம் ;)

Palaniappa Manivasagam said...

Friend, such damagers are there in every state. I have good experience with Tamil damagers as well as north indian damagers. Such ppl are quite common in IT industry.

The only issue i have seen is not based on the state rather based on language. If a team contains more north indians and 1 or 2 tamilians, then they are pavam :(. The same applies to few north indians with more tamilians.

-Palani

Anonymous said...

//நேற்றைய பதிவில் ஜாதிவித்தியாசம் என்பது மற்றதுறைகளோடு ஒப்பிடும்போது, IT துறையில் மிகவும் குறைந்தபட்சமே உள்ளது என முடித்திருந்தேன்.அந்த குறைந்தப்பட்சமும் வெளிப்படையாக தெரிவது 'அவாளி'டம் மட்டும்தான்.// - உண்மை. அதிலும் தமிழ் அவாள்கள் இதில் முதன்மை.

மோகன் said...

//The only issue i have seen is not based on the state rather based on language. If a team contains more north indians and 1 or 2 tamilians, then they are pavam :(. The same applies to few north indians with more tamilians.
///
வருகைக்கு நன்றி பழனி.நீங்கள் சொல்வதும் உண்மைதான்...நானும் விளக்கமாக எழுதுகிறேன்....

மோகன் said...

வருகைக்கும்,கருத்துகளுக்கும் நன்றி ராபின்,பிரேம்குமார்....