கடந்த வாரத்தில்,என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலுள்ள ஊரில் சிகிச்சைக்காக சென்றார்.அங்கு ECG எடுத்துப்பார்த்துவிட்டு bad cholesterol அதிக அளவில் இருப்பதால்தான் வலி ஏற்பட்டதாக கூறினார்கள். மேலும் பெங்களுரில் உள்ள 'இருதய' மருத்துவமனைக்கு referance letter கொடுத்து பரிசோதனைக்கு செல்ல சொன்னார்கள்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால்,உடனடியாக பெங்களூர் வந்து அந்த மருத்துவமனைக்கு சென்றார்கள். செக்கப் செய்துவிட்டு, மேலும் சில டெஸ்ட் செய்ய இருப்பதால் ஒருநாளாவது இருக்கவேண்டும் என சொல்லி ஜெனரல் வார்டில் தங்க சொல்லிவிட்டார்கள். அன்று மாலைவரை பல்வேறு டெஸ்டு' செய்துவிட்டு, மருத்துவர் மேற்க்கொண்டு என்ன செய்வது என்று நாளை சொல்வார்கள் என சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் ரவுண்ட்ஸ் வந்த முதல் மருத்துவர், அறிக்கைகளை பார்த்துவிட்டு,அபாயகரமாக எதுவும் இல்லை,உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் போதும் என சொன்னார். சிறிது நேரம் கழித்து,மற்றொரு மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டு,அதே கருத்தை தெரிவித்துவிட்டு சென்றார்.
அடுத்ததாக தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ் வந்தார்.அவர்தான் கடைசியாக முடிவு செய்ய வேண்டியவர். அவரும்,அறிக்கைகளையெல்லாம் பார்த்தார்.எங்கிருந்து வருகிறீர்கள்,என்ன வேலை பார்க்கிறீர்கள்( ஆசிரியராக இருக்கிறார்) எனக்கேட்டுவிட்டு, கடைசியாக ஒரு குண்டைப் போட்டார். இதயத்தில் அடைப்பு இருக்கலாம் என சந்தேகப் படுவதாகவும், ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் உடனடியாக எடுக்கவேண்டும்,பணத்தைக் கட்டிவிடுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.அதற்கு மட்டும் ரூ 10500 ஆகும் என தெரிவித்தார்கள்.
அவர்கள் வேண்டிய பணம் எடுத்து வராததால், என்னை வரசொன்னார்கள். நானும் அங்கு சென்று தலைமை மருத்துவரை சந்தித்தேன். மற்ற இருமருத்துவர்கள் எந்தப்பிரச்சனையும் இல்லை என சொல்லிவிட்டபிறகும் எதற்கு ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுக்கவேண்டும் எனக் கேட்டதற்க்கு, 'இதய அடைப்பு இருப்பதாக தான் கருதுவதாகவும், அதனால் மாரடைப்பு எப்போதுவேண்டுமானாலும் ஏற்படலாம் என சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு எந்த விளக்கங்களையும் தரவில்லை. மற்ற இருமருத்துவரர்களையும் சந்திக்கவும் முடியவில்லை. வேறு வழியும் இல்லாததால்,அதுவரை ஆகியிருந்த செலவு,ஆன்ஜியோக்ராம் டெஸ்ட்'கான பணத்தையும் (ரூ 13000) 'கடன் அட்டை' வழியாக கட்டிவிட்டேன்.
அன்று மாலையே ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுத்துவிட்டார்கள்.ஆனால் தலைமை மருத்துவர் இல்லாததால்,மறுநாள்தான் ரிசல்ட் சொல்லப்படும் என சொல்லிவிட்டார்கள். அன்று இரவும் அங்கே தங்கவேண்டியதாகிவிட்டது.
மறுநாள் அறிக்கையை பார்த்துவிட்டு,பெரிய அடைப்பு ஏதும் இல்லை, இருக்கும் badcholesterol 'ஐ மருந்துகள் மூலமாக சரிப்படுத்திவிடலாம் எனக்கூறி சென்று விட்டாராம். அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆக மாலை 7 மணிவரை ஆகிவிட்டது. மொத்தமாக ரூ 22000 வரை 2 நாட்களில் செலவானது.
இந்த நிகழ்ச்சியால்,எனக்கு எழுந்த கேள்விகள்...
1. எந்த அடிப்படையில் எடுக்கவேண்டிய சிகிச்சை முறைகள்,டெஸ்டுகள் முடிவாகிறது? 3 மருத்துவர்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், ரூ 10500'ம்,மேலும் ஒருநாள் தங்கலும் ஏற்பட்டது. வேண்டிய பணம் என்னால் உடனடியாக கொடுக்க முடிந்ததால்,டெஸ்ட் உடனடியாக எடுக்க முடிந்தது. இல்லையெனில் வேறு ஏற்பாடு செய்யவோ, சில நாட்கள் கழித்தோ,வேறு மருத்துவமனையிலோ டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும்.ஆனால்,அந்த மருத்துவர்,மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பயமுறுத்திய பிறகு,தள்ளிப்போடும் முடிவை எப்படி எடுக்க முடியும்?
2. ஒருவேளை வசதியில்லாதோர் இந்த நிலைமைக்கு ஆளானால் அவர்கள் கதி என்ன?
3. மருத்துவர் சரியான விளக்கம் தராததால், அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றால், கண்டிப்பாக,முதல் மருத்துவமனையில் எடுதத எந்த அறிக்கையையும் பார்க்காமல், அதே டெஸ்டுகளை இங்கேயும் ஒருமுறை எடுக்க சொல்ல மாட்டார்கள் என என்ன நிச்சயம் ?
4. பணவசதியிருந்தும், தலைமை மருத்துவர் சரியான விளக்கம் தராததாலும்,மற்ற இரு மருத்துவர்களும் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டதால் வீட்டிற்கு வந்துவிட்டு,சில நாட்கள் கழித்து நிஜமாகவே பிரச்சனையாகி ஏதாவது இழப்பு ஏற்பட்டால் என்ன ஆவது?
இப்போதுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், சேவை என்பதையே மறந்துவிட்டு, மருத்துவ தொழிலை பெரும் வியாபாரமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். அங்கு செல்பவர்களை,மனரீதியான நெருக்கடிக்கு தள்ளி,அவர்கள் சொல்லும் சிகிச்சைமுறைகளை செய்வதை தவிர வேறுவழியில்லை என்றாக்கிவிடுகிறார்கள்.
இதற்கு என்னதான் தீர்வு ?
19 comments:
தங்கள் கேள்விகளுக்கு டாக்டர் ப்ருனோ விளக்கம் தருவர் என்று எதிர்பார்க்கிறேன்.
எந்த ஒரு மருத்துவரும் தகுந்த சந்தேகம் இல்லாமல் தேவையற்ற சிகிச்சை செய்ய மாட்டார்கள் என்பது எனது கருத்து.
மற்ற இரு மருத்துவர்களுக்கும் தலைமை மருத்துவருக்கும் உள்ள வித்தியாசம் அவர் தலைமை மருத்துவர் (அதிகம் படித்து அதிக காலம் அந்த துறையில் பணிபுரியலாம்) சிறிது சந்தேகம் என்றாலும் உயிர் பிரச்சனை என்பதால் அவர் கூறியிருக்கலாம்
Looks at these ... Doctor's negligence and money mindedness taken away a young life.
http://www.mouthshut.com/review/Lifeline_hospital_-_Madras-138858-1.html
one of the solutions is we should know Doctors who are relatives or close friends . they know the senior doctors .. if u go thro the reference of doctotr , it is different..
//எந்த ஒரு மருத்துவரும் தகுந்த சந்தேகம் இல்லாமல் தேவையற்ற சிகிச்சை செய்ய மாட்டார்கள் என்பது எனது கருத்து.//
Ippadi nenaicheenganna, neenga romaba appaavi... 90% of the doctors do all sort of unncessary and tests and "operations" only for money in mind!!!
//one of the solutions is we should know Doctors who are relatives or close friends . they know the senior doctors .. //
Ellorukkum intha baakiyam kedaipathillai... ippadi irunthanthal than nalla vaithiyam kediakkum-ngarathu evavlo periya maruthuva thozil throgram.
Read my mouthshut review above and tell
மிகவும் கவலையான விடயம்.
ஆனால் மருத்துவ வியாபாரிகளுக்கு
கொண்டாட்டம்.
90% of the doctors do all sort of unncessary and tests and "operations" only for money in mind!!!//
naan appaviyaga irunthuvittu pogiren. i know about the doctors and i cant make u accept that they are doing for the right reason.
fortunately or unfortunetely i had to face many doctors in my life and i came to know the real facts of their profession. no one cant change this kind of mindset.
Senthil,
Even I thot of your point.but it may not be possible for most of the ppl to have a family Dr and Friend as a Dr....
anyhow we need to live with these kinda ppl ard us......
I don't know what hospital you are referring to. But at least i know that 2 of the very big hospitals in Bangalore which are into this business.
I have a friend who used to work in one of the reputed hospitals in Bangalore ( of course as a junior doctor). She is not with that place any more.
She told me that the docs get a "%" of what the patient spends in the hospital. Starting from the room charges till lab charges.
This is the reason the so called LIFESAVING DOCTROS ( AKA PTK), put patients in a position to take un necessary tests. Same friend also told me that due to this doctors ask pateitns to repeat the tests ( if u happen to move from one department to another)
Assume that you checked into the General Physician. He will advice u to take tests A,B,C. Now after this he will refer you to some specialty doctor in a different department in the same hospital. He would again repeat the tests, even if they are taken just a day back or even the same day.
I also happen to recently witness the money drained out of my relative, when his kidney failed.
Though, there are instances where I have seen genuine doctors ( where I was personally involved ). The physician I visit for my ailments, never makes me to undergo any tests, until its something totally different. ( Even tho he has a lab in his clinic). I had a personal involvement in a heart operation conducted in a major chennai hospital. My experiences with the Doctor, money, total environment was nothing but heart touching
//1. எந்த அடிப்படையில் எடுக்கவேண்டிய சிகிச்சை முறைகள்,டெஸ்டுகள் முடிவாகிறது//
உங்களுடையை symptoms மற்றும் பரிசோதனை முடிவுகள் மற்றும் மருத்துவரின் அனுபவம்
//3 மருத்துவர்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், ரூ 10500'ம்,மேலும் ஒருநாள் தங்கலும் ஏற்பட்டது. வேண்டிய பணம் என்னால் உடனடியாக கொடுக்க முடிந்ததால்,டெஸ்ட் உடனடியாக எடுக்க முடிந்தது. இல்லையெனில் வேறு ஏற்பாடு செய்யவோ, சில நாட்கள் கழித்தோ,வேறு மருத்துவமனையிலோ டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும்.//
சரி
//ஆனால்,அந்த மருத்துவர்,மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பயமுறுத்திய பிறகு,தள்ளிப்போடும் முடிவை எப்படி எடுக்க முடியும்?//
அது உங்கள் முடிவு
//2. ஒருவேளை வசதியில்லாதோர் இந்த நிலைமைக்கு ஆளானால் அவர்கள் கதி என்ன?//
யார் வேண்டுமென்றாலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்
//3. மருத்துவர் சரியான விளக்கம் தராததால், அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றால், கண்டிப்பாக,முதல் மருத்துவமனையில் எடுதத எந்த அறிக்கையையும் பார்க்காமல், அதே டெஸ்டுகளை இங்கேயும் ஒருமுறை எடுக்க சொல்ல மாட்டார்கள் என என்ன நிச்சயம் ?//
நிச்சயம் கிடையாது.
நீங்கள் ஒவ்வொரு முறை செல்லும் போதும் தெர்மா மீட்டர் வைத்து பார்க்கிறார்களா அல்லது இது வரை ஒரே முறை தான் பார்த்திருக்கிறார்களா
//4. பணவசதியிருந்தும், தலைமை மருத்துவர் சரியான விளக்கம் தராததாலும்,மற்ற இரு மருத்துவர்களும் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டதால் வீட்டிற்கு வந்துவிட்டு,சில நாட்கள் கழித்து நிஜமாகவே பிரச்சனையாகி ஏதாவது இழப்பு ஏற்பட்டால் என்ன ஆவது?
//
அதனால் தான் தலைமை மருத்துவர் டெஸ்ட் எடுக்க கூறுகிறார்
//இதற்கு என்னதான் தீர்வு ?//
மருத்துவத்துறை நுகர்வோர் நிதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டதாக வந்தால் பாதி குழப்பங்கள் தீரும்
http://www.payanangal.in/2008/05/blog-post_15.html
http://www.payanangal.in/2008/05/blog-post_20.html
பாருங்கள்
ஏன் திரும்ப திரும்ப டெஸ்ட் எடுக்க சொல்கிறார்கள் என்பதற்கு பதில் இருக்கிறது
// 90% of the doctors do all sort of unncessary and tests and "operations" only for money in mind!!!//
முழுப்பொய்.
//Assume that you checked into the General Physician. He will advice u to take tests A,B,C. Now after this he will refer you to some specialty doctor in a different department in the same hospital. He would again repeat the tests, even if they are taken just a day back or even the same day.//
இது குறித்து எனது பதிவில் விளக்கியுள்ளேன்
http://www.payanangal.in/2008/05/blog-post_20.html
http://www.payanangal.in/2008/05/blog-post_15.html
Read my mouthshut review above and tell
மருத்துவரை குற்றம்சாட்டு இவர் என்ன கூறுகிறார் பாருங்கள்
she had closely monitored well - சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்
மேலும்
Even their pre-operative inital examinations are not upto the mark, they didn’t take the necessay tests to look for any other abnormals associated.
தேவையான பரிசோதனை செய்ய வில்லை என்கிறார்
பரிசோதனை செய்தாலும் குற்றமாம்
செய்யாவிட்டாலும் குற்றமாம்
//a) Do not get carried away by advertisement / TV shows / big buildings / salesy words//
உண்மை
//b) Please do not rush and also do not blindly trust any doctor//
உண்மை. அதே நேரம் don't blindly blame any doctor
//c) Do your own due diligence, particularly when things are not an emergency. Get 2nd Opinion and 3rd opinion always. //
உண்மை. இந்த இடுகையில் கூறியிருப்பது போல் 3ஆவது மருத்துவர் டெஸ்ட் எடுக்க சொல்வது அதற்குத்தான்
//d) Try and understand the medical terms, do research prior//
தேவையில்லாத, அதிகம் ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயல்
//e) Please ask questions, at every stage.//
கண்டிப்பாக செய்ய வேண்டும்
//f) Don’t say "I can spend anything"
சரி
//g) Know patient rights//
know patient duties also. நோயாளியின் கடமையையும் தெரிந்து கொள்ளுங்கள்
//h) If possible, get hold of a family/friend doctor and have them ask all questions beforehand and also during any surgery.//
கண்டிப்பாக
Post a Comment