Search This Blog

March 27, 2006

காற்று(வெளி)வழிக்களவு...

பெண்மணி ஒருவருக்கு அவருடைய 'ஆத்துக்காரரிடம்' இருந்து ஒரு SMS வந்தது. 'டார்லிங்,வழக்கம்போல பேங்க் அக்கவுண்ட் ATM பின்னை மறந்துவிட்டேன்,PIN# SMS செய்'னு வந்தது.ஆத்துக்கார அம்மாவும் நல்லப்பிள்ளையாக SMS பன்னிட்டாங்க....

சாயங்காலம்,நம்ம ஆளு நொந்து நூடுல்ஸ்'ஆக வந்து நுழையும்முன் 'ஒரு பின்நம்பரைக் கூட நியாபகம் வச்சிக்கரதிலையா? எனக்கேட்க.....
அவரோ,'நானே பர்ஸ்,மொபைல் எல்லாம் எவனோ 'பிக்பாக்கெட்' அடிசிட்டானேனு நொந்துபோயிருக்கேன்,,,இப்போ பின்நம்பர் ரோம்ப முக்கியம்' என....

புத்திசாலி(?????)யான பிக்பாக்கேட் பேர்வழி, பர்சிலிருந்த ATM Card பார்த்த உடன் , மொபைலில் இருந்த 'பிக்பாக்கெட்' கொடுத்தவரின் மனைவிக்கு மேற்க்கண்ட SMS அனுப்பி அக்கவுண்டிலிருந்த பணத்தையும் லவட்டிட்டு போய்ட்டு இருக்கான்.

இது அண்மையில் உண்மையாகவே நடந்த சம்பவம்.
ஆகவே மகாஜனங்களே, முக்கியமான விஷ்யங்களை, கணவரே(மனைவியே) ஆனாலும் காற்றுவழியே அனுப்பாதீர்கள்......

3 comments:

மோகன் said...

title got changed.but am not able to update the same in thamizmanam.
sorry for the inconvenience.
Mohan.S

rv said...

எப்படித்தான் இவங்களுக்குன்னு ஸ்பெஷலா மூளை வேலை செய்யுது பாருங்க. திருடனவனுக்கு சொன்னேன்.

மோகன் said...

வருகைக்கு நன்றி ராமநாதன்.நீங்க டாக்டர்தானே....இந்தமாதிரி மூளையைக் கொஞ்சம் ஆராய்cசி செய்யலாமே .....:)))