சென்ற வாரம் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. ரயில் நிலையத்தில் பயணசீட்டு வாங்க வரிசையில் நின்றுக்கொண்டிருந்தபோது எனக்கு சிறிது முன்னால் இருந்தவரை எங்கோ பார்த்ததுபோல இருந்தது. உற்றுகவனித்தபோதுதான் அது என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த ஒருவர்(ன்) என தெரிந்தது. அப்போது பார்த்ததுக்கும் இப்போதுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. மிக அடர்ந்த தாடியுடன் நெற்றி முழுவதும் பட்டையும், பெரிய பொட்டுமாக இருந்தான். அவனும் சென்னைக்கே வ்ந்ததால், ஒன்றாக பயணத்தை ஆரம்பித்தோம்.
கிட்டதட்ட ஆறு வருடங்களுக்குப்பிறகு பார்ப்பதால் பேச நிறைய விஷயங்கள் இருந்தது.பிறகு அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். தற்போதைக்கு சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் HOD'யாக இருப்பதாகவும், விரைவில் மும்பையில் ஒரு ஆசிரமம் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தான். மேலும் அவன் சோன்னது என்னவென்றால், " ஒரு 2 வருடம் பொறு மோகன், அதற்குப்பிறகு நீ எங்கிருந்தாலும் என்னைப்பற்றிய செய்திகள் அதிகம் பார்க்கலாம்.மேலும் பல ஆசிரமங்ளை பல இடங்களில் அமைப்பேன். பல நாடுகளுக்கும் விஜயம் செய்வேன்.அப்போது நீ அமெரிக்காவிலேயே இருந்தால் நீ அங்கேயே என்னை சந்திக்கலாம்" என்றான். நான் ஆடிப்போய்விட்டேன். ம்ம்ம்ம்......
நானெல்லாம் ஒரு கம்பெனியில் சேர்ந்து 4 ஆண்டுகள் குப்பைக்கொட்டிய பிறகுதான், அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என தெரிந்தது.
மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வார இதழில் தொடர் எழுதிக்கொண்டிருந்த ஒரு இளம் சாமியாரைப்பற்றி பேச்சு திரும்பியது. நான் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு சில தினங்களுக்கு முன்னாள் நானிருந்த ஊரில்( டல்லாஸ்) கோயிலுக்கு சென்றிருந்தபோது,மேற்சொன்ன சாமியாரின் பிரசங்கத்தை பார்த்தேன். அப்போது அந்த சாமியாரை வேறு எங்கோ பார்த்த நியாபகம் இருந்தது ஆனால் எஙகேயென்று நினைவில்லை. இதை இந்த சாமியாரிடம்(?????) சொன்னேன். அப்போதுதான் தெரிந்தது, நாங்கள் பாலிடெக்னிக் கடைசி வருடம் படிக்கும்போது(அங்கும் நானும்,ரயிலில் சந்தித்த சாமியாரும் ஒரே க்ரூப்பில் இருந்தோம்) அந்த மற்றொரு சாமியார் முதல்வருட மாணவனாம்.
படிப்பிற்க்குப்பிறகு வேலை செய்யப்பிடிக்காமல், ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து சில வித்தைகளைக் கற்றுக்கொண்டு இப்படி சாமியாராகி பல ஊர்களும்,நாடுகளும் சுற்றிக்கொண்டிருப்பதாகவும்,பல கோடிகள் சொத்து சேர்த்துவிட்டதாகவும் இந்த சாமியார் தெரிவித்தார்.
மேலும் இந்த சாமியார் என்னிடம் சொன்னது " கொஞ்ச நாள் போறு மகனே ! (அடியேனைதான் ;))) நான் அந்த சாமியாரைவிட மிக பெரிய அளவில் பேசப்படுவேன். ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பேன். மிகப்பெரிய ஆசிரமம் ஆரம்பிப்பேன். " என ஏதேதோ சொல்லியப்படி வந்தான்.
கடைசியில் ஒரு வழியாக சென்னையை அடைந்தோம். பிரியும் நேரத்தில் அவன் சொன்னான். " அடுத்தமுறை சந்திக்கும்போது, நான் எந்த ஒரு நிலையிலிருந்தாலும், எவ்வளவுபேர் என்னை சந்திக்க காத்திருந்தாலும், நீ மட்டும் எந்த முன்னறிவிப்புமின்றி, எப்போது வெண்டுமானாலும் சந்திக்கலாம்" எனக் கூறினான்.
அதற்க்கு நான் சொன்னேன், அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. நானே நீ எந்த ஊரிலிருந்தாலும், நேரில் வந்து, சிறைக்கண்காணிப்பாளரின் முறையான அனுமதியுடன் வந்து சந்திக்கிறேன்' என சொல்லிவிட்டு, விட்டேன் ஜூட் ....
3 comments:
நீங்கள் சாமியாராவதற்கு எல்லா தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நான் சிஷ்யனாகி விடுகிறேன். அந்த 2 சாமியார்களையும் ஒழித்துக் கட்டிவிட்லாம் (சாமியாரை மட்டும்தானே சிறையலடைப்பார்கள், சிஷ்யனை அல்லவே ;))
நானும் ஒரு ஃபாரின் ரிட்டர்ன் சாமியாரிணியாக ஆகப்போறேன்.
ஏதாவது ஒரு நல்ல பேரு இருந்தாச் சொல்லுங்க ! பக்த கோடிகளின் ஆசைக்கிணங்க
அப்ப தங்கக் க்ரீடம் எல்லாம் வச்சுக்குவேன்
என் தலையிலே!
பேரு ........அம்மா என்று முடியணும்!
என்றும் அன்புடன்,
துளசி.
இது என்னடா வம்பா போச்சி.விட்டா என்னை ஒரு 'மடப்பயிற்சி பள்ளி' ஆரம்பிக்க சொல்வீங்க போல இருக்கு.
('மடப்பயிற்சி பள்ளி' -> மக்களை மடையர்களாக்க பயிற்சி. ஹிஹீ... எப்படி நம்ம விளக்கம்).
பின்னூட்டத்திற்க்கு நன்றி நரேன்,துளசி.
அம்மா'ன்னு முடியனுமா?? ம்ம்ம்ம்ம்..
அப்போ 'தொலச்சி அம்மா'னு வச்சிக்கோங்க.யாராவது பெயர் விளக்கம் கேட்டால், " என்னை தரிசிக்கும் பக்த கோடிகளின் அனைத்து பிரச்சனைகளும் தொலைந்து போகும்"னு சொல்லிக்குங்க.ஆனால் அவங்க பணமும் தொலைந்திடும்'னு சொல்லிடாதீங்க..அப்புறம் நீங்க எப்படி தங்க கிரீடம் வச்சிக்கறதாம்..
Post a Comment